twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Kee Review: நம்ம கைல ஸ்மார்ட்போன்... திருடன் கைல சாவி... டெக்னாலஜியில் விளையாடும் கீ! விமர்சனம்

    தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்படும் அபாயங்களை அதீத கற்பனையின் மூலம் திரில்லிங்காக சொல்கிறது கீ திரைப்படம்.

    |

    Rating:
    3.0/5

    சென்னை: தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்களுக்கு ஏற்படும் அபாயங்களை, ஆக்ஷன் திரில்லர் பாணியில் பேசுகிறது கீ திரைப்படம்.

    கல்லூரி மாணவராக ஜீவா, கணினி தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய எக்ஸ்பர்ட். ஹேக்கிங் செய்வதெல்லாம் ஜீவாவுக்கு மிட்டாய் சாப்பிடுவது போல், மிக சுலபமான விஷயம். செல்லம் கொடுக்கும் பாசக்கார தந்தை ராஜேந்திர பிரசாத், கண்டிப்பான அம்மா சுஹாசினி என சூப்பரான குடும்பம் ஜீவாவினுடையது.

    Kee review: A cyber cirme action thriller film

    ஜீவா படிக்கும் கல்லூரியில் முதலாமாண்டு மாணவி நிக்கி கல்ராணி. மிகச் சுட்டியான பெண். முதலில் மோதல் பின்னர் காதல் என தமிழ் சினிமா இலக்கணப்படி இரண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிக்கிறார்கள்.

    இதற்கிடையே ஒரு சைபர் க்ரைம் கேங், ப்ளூ வேல் போல பலரை மரணத்திற்கு தள்ளுகிறது. தங்களது அடிமைகளை பயன்படுத்தி பலரை கொலை செய்கிறது. இதனால் பலர் பீதியில் இருக்கிறார்கள்.

    Kee review: A cyber cirme action thriller film

    'பாட்ஷா' எனும் வைரசை கண்டுபிடிக்கும் ஜீவா, அதைப்பயன்படுத்தி பெண்களை கரெக்ட் செய்கிறார். அப்படி ஒருநாள் அவர் மடக்கும் பெண் வந்தனா. பத்திரிகை நிருபரான வந்தனா, மக்களை மரணத்திற்கு தூண்டும் சைபர் கரைம் கேங் குறித்து புலனாய்வு செய்து வருகிறார்.

    வந்தனாவுக்கு உதவும் போது சைபர் க்ரைம் கேங்கின் பகைக்கு ஆளாகிறார் ஜீவா. இதனால் ஆத்திரமடையும் வில்லன், வந்தனாவை கொலை செய்கிறார். அவர்களுடைய அடுத்த டார்கெட் ஜீவா. அவர் இதில் இருந்து எப்படி தப்பிக்கிறார்? வில்லன் கேங்கை என்ன செய்கிறார் என்பதே மீதிப்படம்.

    Kee review: A cyber cirme action thriller film

    ப்ளூ வேல் கேமைப் பற்றி எல்லோரும் அறிந்திருப்போம். ஆனால் அதை விளையாடி பார்க்க எல்லோருக்கும் ஒரு தயக்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு ப்ளூ வேல் கேமை திரையில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார் இயக்குனர் காளீஸ். தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்படும் அபாயங்களை அதீத கற்பனையின் மூலம் திரில்லிங்காக சொல்லியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு ஆங்கில சயின்ஸ் பிக்ஷன் படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

    Kee review: A cyber cirme action thriller film

    இன்னும் சின்னப் பையனாகவே தெரிகிறார் ஜீவா. கல்லூரி பையன் என்று சொன்னாலும் நம்பும்படியாகத் தான் இருக்கிறது. அசால்ட் மேனரிசம், ரொமான்ஸ், ஆக்ஷன், பாசம் என கலவையான நடிப்பை தந்திருக்கிறார்.

    துறுதுறு பெண்ணாக செமையாக ஸ்கோர் செய்கிறார் நிக்கி கல்ராணி. முதல் படத்தில் பார்த்தது போல், இன்னும் துள்ளலான நடிப்பில் அசத்தியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சி வரை ஜீவாவை அசால்ட் செய்து, அப்லாஸ் அள்ளுகிறார்.

    Kee review: A cyber cirme action thriller film

    அனைகா சோடி செமையாக கிளாமர் காட்டி சொக்க வைக்கிறார். சில நேரம் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். அம்மா சுஹாசினிக்கு 4, 5 காட்சிகள் மட்டுமே. மருத்துவமனை காட்சியில் பழைய சுஹாசினியை பார்க்க முடிகிறது.

    படத்தில் அதிக அப்ளாஸ் வாங்குவது அப்பாவாக நடித்திருக்கும் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத். பீர் பாட்டில் போல் பொங்கி அழும் காட்சியில் நம்மையும் கலங்க வைக்கிறார். பிரெஷ்ஷான அப்பா - மகன் பாசத்தை உணர முடிகிறது.

    Kee review: A cyber cirme action thriller film

    படத்தை கலகலப்பாக நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. அரசியல் பற்றிய சில காமெடிகள் அலுப்பை ஏற்படுத்தினாலும், சில இரட்டை அர்த்த காமெடிகள் குபீர் சிரிப்பை வரவைக்கிறது. பாராட்டும்படியாக நடித்திருக்கிறார் வில்லன் கோவிந்த் பத்மசூர்யா.

    விஷால் சந்திரசேகரி இசை பிரஷ்ஷாக இருக்கிறது. ராஜா பாட்டு பாடலின் நடுவே ஒலிக்கும் பிஜிஎம் செம ராக்கிங். காதோரம் பாடல் இனிமையான மெலோடி. பின்னணி இசையிலும் கவனம் ஈக்கிறார்.

    Kee review: A cyber cirme action thriller film

    அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு டெக்னாலஜியில் விளையாடி இருக்கிறது. நாகூரானின் எடிட்டிங், படத்தின் வேகம் குறையாமல் பார்த்த்கொள்கிறது.

    Kee review: A cyber cirme action thriller film

    இன்னும் 25 ஆண்டுகள் கழித்து வர வேண்டியோ படமோ கீ என யோசிக்க வைக்கின்றன பல காட்சிகள். இதயத்தில் பொருத்தப்பட்டுள்ள பேஸ் மேக்கர் முதல் மாடர்ன் கார்கள் வரை எல்லாவற்றையும் ஹேக் செய்கிறார் வில்லன். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் புகுந்து விளையாடுகிறார். ஆனால் அவர் இதையெல்லாம் ஏன் செய்கிறார் என்பதற்கான காரணம் வலுவாக இல்லாதது மிகப்பெரிய மைனஸ்.

    Kee review: A cyber cirme action thriller film

    சின்ன பசங்கள வெச்சிக்கிட்டு டபுள் மீனிங் காமெடி செய்வது எல்லாம் தேவை தானா இயக்குனரே. பெண்களை பற்றிய கேவலமான சித்தரிப்பும் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். டெக்னாலஜியில் மட்டும் கவனம் செலுத்திய இயக்குனர், கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    Kee review: A cyber cirme action thriller film

    இருந்தாலும், இன்றைய மாடர்ன் யுவன், யுவதிகளுக்கு நிச்சயம் இந்த கீ பிடித்தமானதாக இருக்கும்.

    Kee review: A cyber cirme action thriller film

    English summary
    Kee is a science fiction cyber crime thriller film written and directed by Kalees, starring Jiiva, Nikki Galrani and Anaika Soti, with Govind Padmasoorya portraying the villain.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X