»   »  தண்ணீர் பிரச்னையின் பின்னணியில் இருக்கும் அதிகார அரசியல் - கேணி விமர்சனம் #KeniReview

தண்ணீர் பிரச்னையின் பின்னணியில் இருக்கும் அதிகார அரசியல் - கேணி விமர்சனம் #KeniReview

Posted By:
Subscribe to Oneindia Tamil

இரு மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் பிரச்னை பற்றி நாம் புதிதாக சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அதை திரையில் சொல்லும் படங்கள் இதுவரை வந்ததில்லை. ஏனெனில் இந்த பிரச்னையை கையாள்வது என்பது முள்ளின் மீது நடப்பது போன்றது. எனவே சமூக பிரச்னைகளை பேசும் இயக்குநர்கள் கூட இரு மாநில தண்ணீர் பிரச்னை என்றால் பேசத் தயங்குவார்கள். ஆனால் இயக்குநர் எம் ஏ நிஷாத்தும், தயாரிப்பாளர்கள் சஜீவ், ஆன் சஜீவ் ஆகியோர் துணிந்து இப்படி ஒரு பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார்கள். அவர்களின் முயற்சிக்காகவே ஒரு பொக்கே...

அதிகார வர்க்கத்தின் அரசியலால் வாழ்க்கையை இழந்த இரு பெண்கள் ஒரு ஊரின் தண்ணீர் பிரச்னையை கையில் எடுத்து போராடுவதே கேணி படத்தின் கதை.

Keni movie review

இரு மாநிலங்களுக்கிடையேயான எல்லைக்கோட்டில் ஒரு கிணறு. அருகிலேயே ஒரு தமிழ்நாட்டு கிராமம் வறட்சியால் தவிக்கிறது. அந்த கிணற்றுக்கு சொந்தமானவர் மலையாள பெண்மணி. அரசியல் சதியால் தமிழ்நாட்டு கிராமம் தண்ணீரை பயன்படுத்தக் கூடாது என்று ஒரு வினோத தீர்ப்பு.

இந்த சதிகளை உடைத்து தமிழ்நாட்டு கிராமத்துக்கு தண்ணீர் கிடைக்க போராடும் போராட்டம்... என்று சமூகத்துக்கு தேவையான ஒரு அன்றாட பிரச்னையை கதையாக்கியதில் கவனிக்க பெறுகிறார் இயக்குநர் எம் ஏ நிஷாத்.

Keni movie review

ஜெயப்ரதாவுக்கு கதையை தாங்கி செல்லும் கேரக்டர். முக பாவனைகளால் எமோஷனலை கடத்துகிறார். அவருக்கு துணையாக போராடும் பார்வதி நம்பியாரும் நன்றாக நடித்திருக்கிறார்.

படம் முழுக்கவே நட்சத்திரங்கள் அணிவகுத்தாலும் பார்த்திபன், ரேவதி, ரேகா, நாசர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கவனம் ஈர்க்கிறார்கள்.

Keni movie review

இசையும் கேமராவும் மலையாள பட வாசனையை அதிகரிக்கிறது.

வசனங்களில் அதிகார அரசியலை காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சி எடுத்திருக்கிறார், வெல்டன் நிஷாத்.
சொல்ல வந்த கதையை நேரடியாக சொல்லாமல் பரபரப்புக்காக திரைக்கதையை வித்தியாசப்படுத்தியிருக்கிறார். அதனாலேயே மையக்கருத்து சிதைந்து விடுகிறது.

Keni movie review

இன்னும் ஆழமாக சொல்லியிருந்தால் தேசிய விருதே வாங்கியிருக்கும்.

கேணி - சமூகத்துக்கு தேவை.!

ஆர் ஜி

English summary
Review of Jayapradha, Parthiban starred Keni

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil