For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வெற்றி பெற மல்லு கட்டுகிறது மாமாங்கம்

  |

  Rating:
  3.0/5

  நடிகர்கள்: மம்மூட்டி, பிராட்சி , இனியா,உன்னி முகுந்தன் , சித்தாரா

  இசை : ஜெயச்சந்திரன்

  இயக்குனர் : பத்மகுமார்

  மாமங்கம் படபெயரிலே கதையின் கரு உள்ளது 12 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வே மாமங்கம் என்பதாகும். இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு நடந்த ஒரு வரலாற்று கதை அதனை அதன் சாயல் மாறாமல் நமக்குக் சொல்லி இருக்கிறது இந்த மாமங்கம். முதல் மலையாள திரைப்படம் நான்கு மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

  kerala history is being revealed in the movie mamaangam

  இப்படம் உருவாக மிக முக்கிய காரணம் மெகா ஸ்டார் மம்முட்டி தான். இப்படத்திற்கு அவரை தவிர வேறுயாரும் அவ்வளவு சிறப்பாகச் நடித்து இருக்க மாட்டார்கள்.அவரின் திரைபயனத்தில் இப்படம் தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது.

  இக்கதை 18 ம் நூற்றாண்டில் நடக்கும் கதை, சிலப்பதிகாராத்தில் வரும் இந்திரவிழா நடப்பதை போல வள்ளுவநாட்டில் திருராவாயா எனும் இடத்தில் சேரமான் பெருமான் இஸ்லாமிர்க்கு மாறி மேக்காவிற்கு செல்லும் முன்பு இவ்வள்ளுவநாட்டை யார் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம் என்று சொல்லும் போது
  கோழிக்கோட்டின் சமுத்திரி வம்சத்தை சேர்ந்தவர்கள் வள்ளுவநாட்டை கைப்பற்றி துரோகம் செய்து சாவேரியர்களை அனுப்பி விடுவார்கள். இருவருக்குமான சண்டை 12 ஆண்டுகளுக்குப் ஒரு முறை நடந்து நடந்து தற்போது போர் ஆக மாறியுள்ளது.

  kerala history is being revealed in the movie mamaangam

  வள்ளுவநாட்டில் எந்த படைகளும் இல்லை, வள்ளுவநாட்டை சேர்ந்த ஒரு குடும்பதின் வீரர்கள் சாவியர்களாக வருவார்கள் இவர்களிடம் படைகள் எதுவும் இல்லாவிட்டாலும் களரி எனப்படும் வித்தையே கற்று வைத்துள்ளனர். அக்குடும்பத்தில் 3 முதல் 4 பேர்கள் வந்து பெரிய படை உடன் சண்டையிடுவார்கள் இந்த சாவியர்கள்.12 வருடங்களுக்கு ஒருமுறை வீரத்திற்காகவும் குலத்திற்காகவும் பலி கொடுப்பார்கள். சாவேரியர் என்பதற்கு அடிமையாய் வாழ்ந்து மறிபதற்கு இல்லை நாங்கள் சாவேராய் சாவதுதான் நமது பாரம்பரியம் என்று அடிக்கடி சொல்லுவர்

  இக்கதையை சுவாரசியமான திரைக்கதையின் வடிவில் நமக்குக் விருந்தளித்துள்ளனர். படத்தில் வரும் அணைத்து கதாபாத்திரங்களும் அற்புதமாக நடித்துள்ளனர்.குறிப்பாக அச்சுதன் எனும் சிறுவன் இப்படத்திற்காக களரி கற்றுக் கொண்டு நடித்தான்.

  படத்தில் VFX காட்சி சுமாராகவே இருந்ததாக ரசிகர்கள் பலர் கருத்துகின்றனர். இப்படத்திற்காக கேரளாவில் பிரம்மாண்டமாக செட் அமைத்து படமாக்கினார்கள்
  மம்முட்டியின் நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது. மம்முட்டி கடந்த 40 ஆண்டுகளில் பத்து ஆண்டுக்கு ஒரு முறை இப்படி பட்ட வரலாற்று மிக்க படத்தில் நடிக்கிறார். அதற்கு உதாரணம் பழசிராஜா இப்படத்திற்காக மூன்று தேசிய விருது வழங்கப்பட்டது.

  kerala history is being revealed in the movie mamaangam

  வரலாற்று படங்களை பாகுபலிக்கு பிறகு மக்கள் எற்று கொள்வது இல்லை உதாரணம் சீரஞ்சிவி நடித்த சைரா நரசிம்மா ரெட்டி. மிக பிரமாண்டம் செய்தும் மக்கள் மனதில் நிக்க வில்லை.

  ஆனால் இந்த தேவாவின் மீது என்றைக்கும் தமிழ் மக்களுக்கு பேரன்பு அதிகமாகவே உள்ளது. மம்மூக்கா என்று கேரளா மக்களால் செல்லமாக அழைக்கப்பட்டாலும் , தமிழ் சினிமா ரசிகர்கள் இன்னும் இவரை தளபதி படத்தில் வரும் தேவா கதாபாத்திரம் சொல்லி தான் ரசிக்கிறார்கள்.

  பிராட்சி மற்றும் இனியா இந்த படத்துக்கு ஒரு பிளஸ் , மிக அழகாக உணர்ட்சி பொங்க நடித்து உள்ளார்கள்.
  உன்னி முகுந்தன் மற்றும் சித்தாரா கொடுத்த வேலையை கட்சிதமாக செய்துள்ளார்கள். வரலாறை விரும்பும் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம். ஆனால் பொறுமை வேண்டும் .
  காட்சிகளின் கட்டமைப்பு அவ்வளவு ஸ்வாரசியம் இல்லை என்பது தான் இந்த படத்தின் மைனஸ்.
  கேரளாவின் பல் வித்யாசமான வரலாற்று உண்மைகளை புரட்டி போடும் ஒரு நல்ல படம்.

  English summary
  mamooti acted movie is mamaangam and its high budget is 1 of the important talk of kerala industry. its been released in 4 languages and various factors of kerala and its history being shot. its a historical script and many different characters has been chosen and the film is released world wide.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X