For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Kuppathu Raja Review: ஜிவி Vs பார்த்திபன்...தெறிக்கும் நீயா நானா சண்டை.. குப்பத்து ராஜா விமர்சனம்

  |
  Kuppathu Raja Public Review | 'குப்பத்து ராஜா' படம் எப்படி இருக்கு?- வீடியோ

  Rating:
  2.5/5
  Star Cast: ஜி வி பிரகாஷ் குமார், பார்த்திபன், பூனம் பஜ்வா, யோகி பாபு, பல்லாக் லல்வானி
  Director: பாபா பாஸ்கர்

  சென்னை: ஒரு குப்பத்தின் ராஜா ஆவதற்காக இரண்டு பேருக்கு இடையே நடக்கும் போட்டா போட்டி தான் இந்த குப்பத்து ராஜா.

  வடசென்னையின் ஒரு குப்பத்து பகுதிக்கு நெடுகாலமாக ராஜாவாக (அதான்பா ஏரியாவோட பெரிய தலக்கட்டு) இருப்பவர் எம்.ஜி.ஆர். ரசிகரான ராஜி அலைஸ் ராஜேந்திரன் (பார்த்திபன்). இவரோடு சேட்டு, கறிக்கடை பாய், ஊர்நாயகம் (எம்.எஸ்.பாஸ்கர்) என மொத்தம் ஐந்து பேர் கொண்ட பாண்டவாஸ் அணி இது. இவர்களுக்கு எதிரணி ராக்கெட் (ஜி.வி.பிரகாஷ்) தலைமையிலான கவுரவாஸ் கேங். இந்த அணியின் வைஸ் கேப்டன் பெயர் கைசாமான் (யோகி பாபு).

  Kuppathu raja review: A very local entertainer

  பெரிசுங்க கேங்குக்கும், சிறிசுங்க கேங்குக்கும் எப்போதுமே ஆகாது. இவங்களுக்குள்ள நடக்குற போட்டியால ஏரியாவே அடிக்கடி கலாயா மாறிடும். இந்த கேப்புல சீட்டுக்காரக்கா பொண்ணு கமலாவோட (பாலக் லால்வானி) டாவு, எதிர்த்த வீட்டு மேரி ஆன்டியோட (பூனம் பஜ்வா) சைட்டு, பைக் சீசிங் என ஜாலியாக ஊர் சுத்துர ராக்கேட்டுக்கு, அவரோட நைனா ஊர்நாயகம் மீது கொள்ள பாசம். மவனுக்கு எப்டியாவது ஒரு பைக் வாங்கித்தரனும்கிறது ஊர்நாயகத்தோட ஆசை.

  Kuppathu raja review: A very local entertainer

  இப்படி போய்ட்டு இருக்கிற ஸ்டோரில திடீர்ன்னு ஒரு டிவிஸ்ட். அந்த ஏரியா கவுன்சிலருக்கும், ஊர்நாயகத்துக்கும் ஒரு பங்ஷன்ல முட்டிக்குது. இதனால காண்டாகுற கவுன்சிலர், ராக்கெட் லவ் மேட்டர கமலாவோட அம்மாவாண்ட போட்டுக்கொடுத்திடுறாரு. சீட்டுக்காரக்கா ஊர்நாயகத்தாண்ட சண்டைக்கு வர, நடுவுல ராஜி எண்ட்ரிக்கொடுக்க, பஞ்சாயத்தாகிடுது. அந்த கேப்ல, நம்ம ராக்கேட்டு ராஜி மேல கை வெச்சிடுறாரு. அடுத்த சீன்ல பார்த்த ஊர்நாயகம் குப்பத்தொட்டியில டெட்பாடியா கெடுக்குறாரு. அவர யார் மட்டப்பண்ணது? ராஜிக்கும் ராக்கெட்டுக்கும் இருந்த பிரச்சினை என்னாச்சிங்கிறது தான் மீதிப்படம்.

  Kuppathu raja review: A very local entertainer

  மேலே உள்ள வரிகளை போலத்தான் படமும் செம லோக்கல். வடசென்னை நேட்டிவிட்டியுடன், அதேசமயம் பச்சையான கெட்ட வார்த்தைகள் எதுவும் இல்லாமல் எடுத்திருக்கிறார் இயக்குனர் பாபா பாஸ்கர். பார்த்திபன் - ஜி.வி.பிரகாஷ் மோதல் என ஜாலியாக நகரும் முதல் பாதி, இரண்டாம் பாதியில் அப்படியே யூடர்ன் எடுக்கிறது.

  Kuppathu raja review: A very local entertainer

  குப்பத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, அங்குள்ள காதல், நட்பு,பாசம், குடும்பங்கள், ரவுடியிசம் என அனைத்தையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். ஆனால் வடசென்னை பாஷை என படத்தில் பேசப்படும் மொழி அவ்வளவாக ஒட்டவில்லை. நிறைய இடங்களில் யதார்த்தம் மீறப்பட்டுள்ளது.

  Kuppathu raja review: A very local entertainer

  சாஃப்ட் பாயாக நடித்து வந்த ஜி.வி.பிரகாஷை, ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியிருக்கிறது குப்பத்து ராஜா. லோக்கல் பையனாக, கலக்கியிருக்கிறார். குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகளிலும் சரி, தந்தையுடனான பாசக்காட்சிகளிலும் சரி நன்றாகவே நடித்திருக்கிறார்.

  Kuppathu raja review: A very local entertainer

  ஜெயலலிதாவாக நடிக்க மறுத்த தல ஹீரோயின்: இதெல்லாம் ஒரு காரணமா?

  புதிய பாதை பார்த்திபனுக்கு, தனது பழைய பாதையை நினைவுப்படுத்தும் படம் இது. இந்த ஆளு நல்லவனா, கெட்டவனா என யோசிக்க வைக்கும் அளவுக்கு குழப்பியிருக்கிறார். காமெடியன் என்பதை தாண்டி, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்துள்ளார் யோகி பாபு. அதனால் தானோ என்னவோ, ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிப்பு வரவழைக்கிறார். யோகி பாபுவின் இடத்தை பூர்த்தி செய்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். நிறைய இடங்களில் இவர் செய்யும் அலப்பறைகளே சிரிப்பு வரவைக்கிறது.

  Kuppathu raja review: A very local entertainer

  ஹீரோயின் பாலக் லால்வானி நல்ல அறிமுகம். லோக்கல் பெண்ணாகவே தெரிகிறார். ஆனால் வாய் அசைவு தான் நான்சிங்கில் இருக்கிறது. அவரது தோழியாக நடித்துள்ள மதுமிதா, வழக்கம் போல் கலக்கியிருக்கிறார். பூனம் பஜ்வா நிறைய கிளாமர் காட்டி, ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.

  ஒவ்வொரு பாடல்களையும் ரசித்து ரசித்து கம்போஸ் செய்துள்ளார் ஜி.வி. அதிலும், 'எங்க ஊட்ல மீன் குழம்பு சோறு' பாடல் செம லோக்கல் பிளேவர். பின்னணி இசையும் சிறப்பு.

  Kuppathu raja review: A very local entertainer

  இது செட் அல்ல, ரியல் லொக்கேஷன் தான் என நம்ப வைக்கிறது மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு. அதேபோல், படத்தை போரடிக்காமல் நகர்த்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல்.

  ஏற்கனவே பல படங்களில் பார்த்த பழைய ஜெய்சங்கர் காலத்து கதை இது. அதேபோல் திரைக்கதையும் சுவாரஸ்யமாக இல்லை. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்துவிடுகிறது.

  Kuppathu raja review: A very local entertainer

  கதையும், திரைக்கதையும் கைக்கொடுத்திருந்தால், இந்த குப்பத்து ராஜா அரியாசனம் ஏறியிருப்பான்.

  English summary
  The tamil movie Kuppathu raja is action family drama, starring G.V.Prakash in the lead role, directed by Baba bhaskar.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X