For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Movie Review : குரூப் திரை விமர்சனம் .ஜி கே எனும் சுதாகர் குரூப் ,அலெக்ஸ்சாண்டராக மாறிய கதை

  |

  Rating:
  3.0/5
  Star Cast: நடிகர்கள் : துல்கர் சல்மான் ஷோபிடா துலிபலா டோவினோ அனுபமா பரமேஸ்வரன்
  Director: இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன்

  சென்னை: கேரளாவில் சுகுமார குருப் என்பவரின் ரியல் ஸ்டோரி தான் குரூப் .இந்த கதையை அடிப்படையாக வைத்து குரூப் என்னும் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.

  விமான படையில் ட்ரெயினிங் எடுத்து பாம்பேயில் வேலை செய்கிறார் துல்கர் சல்மான்.உடல் நலக்குறைவு காரணமாக விடுமுறை எடுத்து செல்லும் துல்கர் சில நாட்களில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் பரவுகிறது . ஆனால், உயிருடன் இருக்கும் (கோபாலக்ரிஷ்ணன் -ஜி .கே ) துல்கர் சல்மான், தனது பெயரை சுதாகர் குருப் என்று மாற்றி வெளிநாடு பயணம் செல்கிறார்.

  தனது பெயரில் இன்ஸ்சுரன்ஸ் இத்தனை லட்சங்கள் என்று காப்பீட்டு திட்டம் ஒன்று கையெழுத்து இட்டு ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் .அந்த இன்ஸ்சுரன்ஸ் பணத்தை ஏமாற்றி அபகரிக்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து பல சதி திட்டங்கள் முயற்சி செய்கிறார்கள் .முடிவில் இன்ஸ்சுரன்ஸ் பணத்தை ஏமாற்றி கைப்பற்றினாரா, இல்லையா?,காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது , தற்கொலை செய்து கொண்டதாக ஊரை நம்ப வைக்க காரணம் என்ன?,மாட்டிக்கொண்ட நண்பர்கள் என்ன வாக்குமூலம் கொடுத்தார்கள் என்பதே படத்தின் ஒட்டு மொத்த மீதிக்கதை.

   படத்தின் வெற்றிக்கு துணை

  படத்தின் வெற்றிக்கு துணை

  சினிமாவிற்கு ஏற்றார்போல் ஸ்க்ரீன்பிலே அமைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன். முதல் பாதி பல முடிச்சுகளுடன் மிகவும் ஸ்லோவாக செல்ல, பிற்பாதியில் அந்த முடிச்சுகளை ஒவொன்றாக கழட்டும் விதம் பாராட்டுக்குரியது .நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும் மிகவும் நேர்த்தி. கலை இயக்குனரின் வேலையும் படத்தின் வெற்றிக்கு துணை நிற்கிறது -குறிப்பாக டபுள் டக்கர் பஸ் ,அந்த காலத்து லேண்ட் லைன் டெலிபோன் , பழைய பாக்ஸ் டைப் டிவி ,கம்ப்யூட்டர் , கட்டிடங்களின் சுவர்கள் என்று அடுக்கி கொண்டே போகலாம் . சுசின் ஷாம் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஈர்க்கிறது . 1980 முதல் 1985 வரை குறிப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதால், ஒளிப்பதிவு, காட்சியமைப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கிறார் இயக்குனர் . ஆர்ட்டிஸ்ட் செலெக்ஷன் அவர்களிடம் வேலை வாங்கிய விதம் அனைத்திலும் சூப்பர் என்று சொல்லும் விதமாக குரூப் திரைப்படம் அமைந்து உள்ளது .

  ஆறாம் விறல் போல் சிகரட்

  ஆறாம் விறல் போல் சிகரட்

  படத்தில் நாயகனாக நடித்திருக்கும் துல்கர் சல்மான், மிகவும் அசால்டாக நெகடிவ் கதாபாத்திரத்தில் மிரளுகிறார் . படத்திற்காக பல கெட்டப்புகள்,பல விதமான நவநாகரீக உடைகள் என்று அசத்தி இருக்கிறார். எல்லா உடைகளும் கச்சிதமாக பொருந்திருக்கிறது. நடை, உடை என தன் கதாபாத்திரத்தை மெருகேற்றி தனித்துவம் பெறுகிறார் .அடிக்கடி சிகரட் பிடிக்கும் கட்சி தான் கொஞ்சம் ஓவர் டோஸ் .ஒரு ஏர் போர்ஸ் ட்ரைனிங் முடித்த நபர் கையில் ஆறாம் விறல் போல் எப்பொழுதும் சிகரட் இருப்பது கொஞ்சம் எரிச்சல் மூட்டுகிறது .

  மிகவும் பிரபலமான

  மிகவும் பிரபலமான

  துல்கரின் உறவினராக வரும் ஷைன் டாம் சாக்கோவின் இயல்பான நடிப்பு படத்திற்கு பெரிய பலம். சின்ன சின்ன உடல் அசைவுகளில் கூட கவனம் இருக்கிறார். சின்ன ரோல் தான் செய்து உள்ளார் டோவினோ ஆனால் அதிலும் மிகவும் நேர்த்தி. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான அனுபமா பரமேஸ்வரன் இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் செய்து உள்ளார் அதுவும் எமோஷனலாக உள்ள இடத்தில் மிகவும் இயல்பாக ஸ்கோர் செய்கிறார். போலீசாக வரும் இந்திரஜித் சுகுமாரன், நண்பராக வரும் பரத் ஆகியோர் கொடுத்த வேலையை நமக்கு புரிந்து செயல்பட்டு உள்ளார்கள்.

  திரில்லர் படங்களை

  திரில்லர் படங்களை

  முதல் பாதி தான் கொஞ்சம் குழப்பம்.நீண்ட நாட்களுக்கு பிறகு துல்கர் சல்மானின் குருப் படம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து வரவேற்கப்பட்டு மிகவும் பாராட்டுகளை பெற்று வருகிறது. திரில்லர் படங்களை நேசிக்கும் சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக குரூப் படத்தை தியேட்டர் சென்று கண்டிப்பாக பார்க்கலாம் . கதாநாயகியாக நடித்திருக்கும் ஷோபிடா அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், கண்களை உருட்டி நளினமாக நடந்து அனைவரையும் மயக்குகிறார் . ஜியோகிராபிகள் லொகேஷன்ஸ் என்று கேரளாவை காட்டிய விதம் , பெர்சியா நாட்டு வாழ்க்கை என்று காட்டிய காட்சிகள் அனைத்தும் சிம்பலி சுபெர்ப் . ஜி கே எனும் சுதாகர் குரூப் ,அலெக்ஸ்சாண்டராக மாறிய கதை என்று பல சுவாரஸ்யங்களை ஒளித்து வைத்து ஒவொன்றாக சொல்லிய விதம் நம்மை ஆச்சரிய படுத்தும். அடல்ட் கன்டென்ட் என்று சொல்லும் அளவுக்கு பெரிதாக எதுவும் இல்லை இருந்தாலும் எச்சரிக்கையுடன் இப்படி பட்ட கதைகளை அடுத்த தலைமுறைக்கு காட்ட கொஞ்சம் பயம் வர தான் செய்கிறது.

  Read more about: kurup movie review
  English summary
  "Kurup"longest waited fugitive, came to unfold itself on 12th November 2021 .To see the cinematic portrayal of the Notorious Kurup in a stylish crime drama filled with above average performance of the lead actors , brilliant cinematography, electrifying bgm ,stylish costumes ,and overly beautiful locations mostly signifying the 80's timeline gave an head-on to the overall experience. Director Srinath Rajendran ,the project that got into shape through 10 years of research and hard work never failed to satisfy the mass audience,but for a person who took keen interest in finding out the real events that took place on 1984 January 22 might not be fully satisfied from the 2hr 20 min onscreen Portrayal.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X