»   »  பட விமர்சனம்

பட விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு கட்டத்தில் கண்ணம்மாவின் நிலையைப் பார்த்து அந்த முதலாளியும் அவரதுமனைவியும் கூட வருத்தப்பட ஆரம்பிக்கின்றனர். தங்களது வசதிக்காக, ஒரு குட்டிப்பெண்ணின் உணர்வுகளையும், உரிமைகளையும், கல்வியையும் தாங்கள் பறித்துவிட்டதாக அவர்கள் உணர்ந்து வருத்தப்படுகிறார்கள்.

கண்ணம்மாவுக்கு தனது கிராமத்து சுதந்திரம் ஞாபகம் வருகிறது. தனிமையில்அழுகிறாள். பெட்டிக்கடைக்கார நாடாரிடம் தன்னை எப்படியாவது தனதுகிராமத்துக்கு அனுப்பி வைக்குமாறு கதறுகிறாள். நாடாரின் கண்களில் ரத்தம் கசிகிறது.

அவளை எப்படியாவது ஊருக்கு அனுப்பி வைத்துவிட முடிவு செய்கிறார். ஆனால்அதற்குள் கண்ணம்மாவின் தலையெழுத்து எப்படி மாறுகிறது என்று கூறும்போதுநம்மை பதற வைத்திருக்கிறார்கள்.

சமூகத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கும் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைதான்கதையின் கரு என்றாலும் கூட டாகுமெண்டரி போல அதைக் கூறாமல் இதுதான் நிஜம்,பாருங்கள், பிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள், தீர்வு என்ன என்பதையோசியுங்கள் என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

படத்தில் இரண்டு ஹீரோக்கள். ஒன்று கண்ணம்மாவாக வரும் பேபி ஸ்வேதா. வெகுஇயல்பான நடிப்பு. கண்களில் அத்தனை உணர்ச்சிகளையும் அவள் காட்டும்போதுகண்கள் கலங்காமல் இருப்பது இயலாத காரியம்.

துடிப்புடன் நடித்திருக்கிறாள் ஸ்வேதா. பக்கத்து வீட்டில் வேலைக்காரப் பெண்ணிடம்அந்த வீட்டுக்காரரின் மகன் செய்யும் பாலியல் பலாத்காரத்தைப் பார்க்கும்போதுகண்களில் மிரட்சியைக் காட்டுகிறாள்.

விவேக்கிடம் அழுதுகொண்டே தனது வீட்டு முகவரியை அப்பாவித்தனமாக, எங்ககிராமத்துல மலை இருக்கும், சுற்றிலும் மரம் இருக்கும் என்று கூறும்போது விவேக்மட்டுமல்லாது நாமும்தான் கலங்கிப் போகிறோம்.

அடுத்த ஹீரோ இசைஞானி இளையராஜா. இசை சரியாக இல்லாவிட்டால் வெறும்டாகுமெண்டரியாகிப் போய் விடும் என்பதால் முழு அக்கறை எடுத்து படத்திற்குஉயிரூட்டியிருக்கிறார்.

இந்தப் படத்தின் கதையை கேட்ட உடனேயே இசையமைக்க காசு வேண்டாம் என்றுகூறிவிட்டு இலவசமாகவே இசை அமைத்துத் தந்திருக்கிறார் இசைஞானி. தங்கர்பச்சான் தன்பங்குக்கு கேமராவில் ஓவியம் வரைந்திருக்கிறார்.

கிராமத்துக் கண்ணம்மாவின் அப்பாவாக நாசர், அம்மாவாக ஈஸ்வரி ராவ். அசல்கிராமத்துக் காரர்களாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

பெண்ணை இப்படி விளையாட்டுப் பிள்ளையாக வளர்க்கிறாரே கணவர் என்றுஆதங்கப்படும்போதெல்லாம் அப்ளாஸ் வாங்குகிறார் ஈஸ்வரி ராவ். பெண்ணைப்படிக்க வைக்க வேண்டுமே என்று கவலைப்படும்போதெல்லாம் நம்மையும் கலங்கவைக்கிறார் நாசர். பண்பட்ட நடிப்பில் இருவரும் அசத்துகிறார்கள்.

பட்டணத்து முதலாளியாக ரமேஷ் அரவிந்த், அவரது கல்லூரி ஆசிரியைமனைவியாக கெளசல்யா. நிறைவான ரோல்கள். கண்ணம்மாவைகஷ்டப்படுத்துகிறோமோ என்று கவலைப்பட்டு அவர்கள் பேசும்போது நிஜத்தில்இப்படி அத்தனை பேரும் இருந்து விட்டால் குழந்தைத் தொழிலாளர்களே இல்லாமல்போய் விடுவார்களே என்ற நப்பாசை வருகிறது. அருமையான நடிப்பு.

வில்லியாக எம்.என்.ராஜம். ரமேஷ் அரவிந்தின் அம்மாவாக வரும் அவர்கண்ணம்மாவை குட்டி என்று பெயரிட்டு கிண்டல் செய்கிறார்.

எல்லோரையும் விட நம்மை அசத்துபவர் விவேக். வழக்கமான கேலி, கிண்டல்எதுவும் இல்லாமல் மளிகைக் கடை நாடாராக வந்து கலக்கியிருக்கிறார் விவேக்.

புறக்கணிக்கப்படும் அல்லது கவனிக்காமல் விடப்படும் ஒவ்வொரு சிறுமியும் எப்படிசீரழிந்து போகிறாள் என்பதை இதை விட நச் என்று கூற முடியாது.

படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வருபவர்களின் கண்களில் கண்ணீர். குட்டிஜெயித்துவிட்டாள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil