»   »  பட விமர்சனம்

பட விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

மும்தாஜ் டான்ஸ் இல்லை, அனல் பறக்கும் சண்டைகள் இல்லை, வெளிநாட்டுலொகேஷன் இல்லை, கிராபிக்ஸ் இல்லை. இத்தனையும் இல்லாமல் ஒரு சூப்பர் ஹிட்படத்தைக் கொடுத்திருக்கிறார்கள் ரமேஷ் அருணச்சாச்சலமும், ஜானகி விஸ்வநாதனும்.கதை பிரபல பெண் எழுத்தாளர் சிவசங்கரியின் கைவண்ணத்தில் உருவானதாகும்.

சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பிரச்சினையை மென்மையாக அதேசமயம் முகத்தில் அடித்தாற் போல சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் குட்டி படத்தில்.

குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையை எத்தனையோ படங்களில், பலவிதங்களில்கூறி விட்டார்கள். ஆனால் இதில் அப்பட்டமாய் முகத்தில் அடித்த மாதிரிசொல்கிறார்கள்.

படத்தில் முடிவு என்ற ஒன்றைக் கூறாமல், அந்த முடிவை நம்மையே யோசிக்கவைத்திருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது இதயம்கனத்துவிடுகிறது.

சின்னக் கிராமத்தில் பானைகள், பொம்மைகள் செய்து வரும் ஒரு குயவர் குடும்பம். 2வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத அந்தக் குடும்பத்தின் சுட்டிப் பெண்கண்ணம்மா.

அப்பாவின் செல்ல மகள். தனது மகளைப் படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும்என்ற தீராத ஆசை அப்பாவுக்கு. ஆனால் பள்ளி ரொம்ப தூரத்தில் இருப்பதால் ஒருசைக்கிள் வாங்கி அவளை கூட்டிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால்சைக்கிள் வாங்குவது பணமின்மையால் தள்ளிப் போகிறது திட்டம்.

இந்த நேரத்தில் சந்தைக்குப் போன அப்பா ஊர் திரும்பும் வழியில் லாரிமோதிஇறக்கிறார். தலைவனை இழந்து அந்தக் குடும்பம் வறுமையில் தத்தளிக்கிறது.

இந் நேரத்தில் தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தான் வேலை பார்க்கும்நிறுவனத்தின் முதலாளியின் வீட்டுக்கு வேலைக்கு ஆள் வேண்டும் என்பதால்கண்ணம்மாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கண்ணம்மாவின் அம்மாவிடம்கேட்கிறார்.

நிறைய யோசனைகளுக்குப் பிறகு கண்ணம்மாவை அனுப்பி வைக்கிறார் அம்மா.

பட்டணத்திற்கு வருகிறாள் கண்ணம்மா. கண்களில் ஆச்சரியமும் பயமும் தாண்டவமாடஅவள் பார்க்கும், சந்திக்கும் ஒவ்வொரு விஷயமும் அவளை பரவசப்படுத்துவதற்குப்பதில் அச்சமூட்டுகின்றன.

கண்ணம்மா வேலைக்கு சேர்ந்த வீட்டின் முதலாளியும், அவரது மனைவியும்கண்ணம்மாவை தங்களது குழந்தைகளுக்கு சமமாக பார்க்கிறார்கள். ஆனால் இதுமுதலாளியின் தாய்க்குப் பிடிக்கவில்லை. வழக்கமான வில்லத்தனத்தைக் காட்டுகிறார்.

குழந்தையைப் பார்க்கும் வேலை என்று முதலில் சொல்லப்பட்டாலும் கூட, பலவேலைகளையும் செய்யும் நிலைக்கு ஆளாகிறாள் கண்ணம்மா. அவளது உணர்வுகள்அங்கு மறுக்கப்படுகின்றன. அடிமை நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil