twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லத்தி விமர்சனம்: ஆக்‌ஷன் மட்டுமே போதுமா? விஷால் கையில் எடுத்த லத்தி வெற்றியை கொடுத்ததா?

    |

    நடிகர்கள்: விஷால், சுனைனா, ரமணா

    இசை: யுவன் சங்கர் ராஜா

    இயக்கம்: வினோத்குமார்

    Rating:
    2.5/5

    சென்னை: இயக்குநர் ஏ. வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா, பிரபு மற்றும் ரமணா நடிப்பில் உருவாகி உள்ள லத்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

    இந்த படத்திற்காக பல ஊர்களுக்கு சென்றும் கல்லூரிகளுக்கு சென்றும் நடிகர் விஷால் ப்ரமோஷன் நடத்தினார்.

    லத்தி படத்தின் டிரைலர் எல்லாம் விஷால் படத்தில் போட்டிருக்கும் கடின உழைப்பை வெளிப்படுத்திய நிலையில், மொத்த படமும் அதே போல ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..

    Laththi Review: விஷாலுக்கு இந்த படமாவது கைகொடுத்ததா? எப்படி இருக்கு லத்தி? Laththi Review: விஷாலுக்கு இந்த படமாவது கைகொடுத்ததா? எப்படி இருக்கு லத்தி?

    லத்தி கதை

    லத்தி கதை

    லவ் டார்ச்சர் கொடுப்பதாக ஒரு இளைஞர் மீது ஒரு இளம் பெண் போலீஸில் புகார் அளிக்கிறார். அந்த பையனை எச்சரித்து அனுப்புகிறார் கான்ஸ்டபிள் முருகானந்தம் (விஷால்). அதன் பிறகு அந்த இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் கொலை செய்யப்படுகிறார். உடனடியாக லவ் டார்ச்சர் கொடுத்த பையனை லத்தி ஸ்பெஷலிஸ்ட் விஷால் வெளுத்து வாங்க, கொலை அந்த இளைஞர் செய்யவில்லை என்பது தெரிய வருகிறது. உடனடியாக விசாரிக்காமல் அடித்து விட்டார் விஷால் என ஒரு ஆண்டு அவர் சஸ்பென்ட் செய்யப்படுகிறார்.

    பிரபுவால் கிளம்பும் பூகம்பம்

    பிரபுவால் கிளம்பும் பூகம்பம்

    ஆனால், 6 மாதத்திற்குள்ளே விஷாலை நன்னடத்தை காரணமாக உயர் அதிகாரியான பிரபு மீண்டும் வேலையில் சேர்க்கிறார். பிரபுவின் மகளுக்கு வில்லனால் ஏற்படும் தொல்லை பற்றி தெரிய வர சீக்ரெட் ஆக வில்லனை வெளுத்து வாங்க விஷாலை நியமிக்கிறார் பிரபு. விஷாலின் முகத்தை பார்த்து விடும் வில்லன் வெள்ளை முருகானந்தத்தையும் அவரது குடும்பத்தையும் எப்படி பழி வாங்குகிறான் அதில் இருந்து விஷால் யாரை காப்பாற்றினார், இறுதியில் ஒட்டுமொத்த ரவுடிகளையும் என்ன செய்தார் விஷால் என்பது தான் லத்தி படத்தின் கதை.

    வித்தியாசமான விஷால்

    வித்தியாசமான விஷால்

    டிஐஜி, இன்ஸ்பெக்டர், கமிஷனர், எஸ்.ஐ என தமிழ் சினிமாவில் கெத்துக் காட்டிய காவல் துறை அதிகாரியாக எல்லாம் இல்லாமல் வெறும் கான்ஸ்டபிள் முருகானந்தம் ஆக தனது முதிர்ந்த நடிப்பை நல்லாவே படம் முழுக்க வெளிப்படுத்தி இருக்கிறார் விஷால். லத்தியால் விஷால் அடிக்கும் காட்சிகள் நிஜமாகவே போலீஸ் அடி எப்படி இருக்கும் என்பதை உணர்த்துகிறது. வில்லன் ஆட்களிடம் சிக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிக்கவும் அவர்களை சூரசம்ஹாரம் செய்யும் இடங்களிலும் விஷால் நடிப்பு அபாரம்.

    சிம்ப்ளி சுனைனா

    சிம்ப்ளி சுனைனா

    விஷாலின் மனைவியாக படத்தில் நடித்துள்ள நடிகை சுனைனா கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து முடித்து விட்டு ரசிகர்கள் மனங்களில் நிறைவை தருகிறார். விஷாலின் மகனாக நடித்த அந்த சிறுவனின் நடிப்பும் படத்திற்கு தேவையான ஒன்றாக இருந்தது சிறப்பு.

    வில்லனான தயாரிப்பாளர்

    வில்லனான தயாரிப்பாளர்

    விஷாலின் நண்பர்களான ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தான் இந்த லத்தி படத்தை தயாரித்துள்ளனர். அதில், சர்ப்ரைஸ் பேக்கேஜாக தயாரிப்பாளர் ரமணா விஷாலுக்கு வில்லனாகவே இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்டெர்வெல் சீனில் ரமணா கத்தும் காட்சியெல்லாமே கச்சிதமாகவே உள்ளது. ஆனால், வில்லனின் அப்பாவாக வரும் கதாபாத்திரம் கதைக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

    பலம்

    பலம்

    விஷாலின் நடிப்பு மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இந்த படத்தில் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் அது பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் அதிரடியான சண்டைக் காட்சிகள் தான். அந்த கட்டி முடிக்காத பில்டிங்கில் கடைசி 40 நிமிடங்கள் நடைபெறும் காட்சிகள் நிச்சயமாக தியேட்டருக்கு அத்தனை நேரம் பொறுமையாக பார்த்த ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் என்றே சொல்லலாம்.

    பலவீனம்

    பலவீனம்

    அதே சமயம் இயக்குநர் வினோத் குமார் திரைக்கதை மற்றும் வசனம் உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனத்தை செலுத்தி இருக்கலாம். பல இடங்களில் படம் லாஜிக்கே இல்லாமல் நகர்வது, ஆக்‌ஷன் காட்சிகளிலும் எமோஷன் காட்சிகளிலும் ஒரு வித நிறைவு இல்லாமல் நகர்வது உள்ளிட்ட பெரிய பிரச்சனைகள் விஷாலின் லத்திக்கு விலங்காக மாறியுள்ளது ரசிகர்களை ரொம்பவே சோதித்து விடுகிறது! மொத்தத்தில் விஷாலின் இந்த லத்தி படத்தை விஷால் பட்ட கஷ்டத்துக்காக அவரது ரசிகர்கள் மட்டும் ஒரு முறை கண்டு ரசிக்கலாம்!

    English summary
    Vishal Laththi Movie Review in Tamil (நடிகர் விஷாலின் லத்தி விமர்சனம்): Director A Vinoth Kumar's poor screenplay and dialogue upsets Vishal's heavy effort this Laththi Movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X