Don't Miss!
- Lifestyle
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்... கேரட் சட்னி
- Sports
எங்க கிட்டயும் படைகள் இருக்கு..கேஜிஎப் வசனத்தை பேசிய பாட் கம்மின்ஸ்..இந்திய அணிக்கு பாராட்டு
- News
செந்தில் முருகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி.. ‘கைம்மாறு’ செய்யும் ஓபிஎஸ்.. அப்போ கன்ஃபார்மா?
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நீ செய்தா நீதி… நான் செய்தா பாவமா? மஹா சமுத்திரம் டிரைலர்… எப்படி இருக்கு ?
சென்னை : சித்தார்த், சர்வானந்த் நடிப்பில் உருவாகிவுள்ள மஹா சமுத்திரம் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி உள்ள இப்படத்தில், அனு இமானுவேல், அதிதி ராவ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
வில்லனாக கருடா ராம், ஜெகபதி பாபு, சரண்யா பொண்வண்ணன ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரியல் 'Contractor நேசமணி’ வடிவேலு தான்.. யோகி பாபு, ஓவியா டைட்டிலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!

ஆர்எக்ஸ் 100
கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஆர்எக்ஸ் 100 திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இதில், கார்த்திகேயா ஹீரோவாக நடித்திருந்தார். பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் நடிகர் ராம்கி இதில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மஹா சமுத்திரம்
ஆர் எக்ஸ் 100 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அஜய் பூபதி இப்பொழுது மஹா சமுத்திரம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் சித்தார்த், சர்வானந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் அனு இமானுவேல், அதிதி ராவ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வில்லனாக கருடா ராம் என்கிற ராமச்சந்திர ராஜூ நடிக்கிறார்.

சமுத்திரம் அற்புதமானது
இந்நிலையில், மகா சமுத்திரம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதில், படத்தின் பெயருக்கு ஏற்றார் போல சமுத்திரம் காட்டப்பட்டு ஒரு படகு அப்படியே தலைகீழாக கவிழ்கிறது. மேலும் சமுத்திரம் அற்புதமானது... அது நிறைய ரகசியங்களை மறைத்து வைத்துள்ளது என்ற வசனத்துடன் டிரைலர் தொடங்குகிறது.

மிரட்டும் இசை
காதல் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு சைட்டம் பரத்வாஜ் இசையில் பின்னியெடுத்துள்ளார். அடி தடி, சண்டை, கொலை என டிரைலர் சும்மா மிரட்டுகிறது. கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு பார்ப்பாவர்களை எல்லாம் பொட்டு.. பொட்டுனு போட்டுத்தள்ளுகிறார் சித்தார்த்... நீ செய்தா நீதி... நான் செய்தா பாவமா என்று கேட்டு, மிரட்டி உள்ளார். இணையத்தில் வெளியான இந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.