twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பட விமர்சனம்

    By Staff
    |

    மின்னல் போல வந்துள்ள இந்தப் படம், இளைஞர் உலகை வசீகரித்து விட்டது. அலைபாயுதே மாதவன்,காதல்தேசம் அப்பாஸ், கலக்கல் புயல் ரீமா சென், என இளைஞர் குழாமே படத்தில் கொட்டமடித்துக்கலக்கியிருக்கிறது.

    இதுதான் கதை. அப்பாஸும், மாதவனும் கல்லூரி மாணவர்கள். அப்பாஸ், நன்றாக படிக்கும் மாணவன். மாதவன்கொஞ்சம் குஜால் பேர்வழி. கலாட்டா செய்வது அவருக்கு திருநெல்வேலி அல்வாவை, தேனில் போட்டுச்சாப்பிடுவது போல.

    அப்பாசுக்கும், மாதவனுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இருவரும் கல்லூரியை விட்டுஎதிரிகளாகவே பிரிகிறார்கள். அப்பால் வேலை கிடைத்து அமெரிக்கா சென்று விடுகிறான். மாதவன் சென்னையில்,ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்து அங்கு போகிறான்.

    அதன் பிறகு மாதவன் ஒருமுறை பெங்களூர் செல்கிறான். அங்கு ஒரு மின்னலை (ரீமா சென்) சந்திக்கிறான். அதுஒரு மழை பெய்யும் இரவு. ரீமாவைச் சந்தித்த மாதவன், பார்த்தவுடன் தன் மனதை வழக்கம் போல அவள் வசம்இழக்கிறான். மீண்டும் தன் நண்பன் திருமணத்தின்போது அவளை சந்திக்கிறான்.

    மனதை பெங்களூரில் விட்டு விட்டு அவன் மட்டும் சென்னைக்கு வருகிறான். தன் நணபன் விவேக்குடன்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது மீண்டும் அவன் முன் அந்த பெங்களூர் மின்னல். அவளைப் பற்றியதகவல்களை அவளது நண்பி மூலம் கறக்கிறான். சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகி இங்கு வந்து அவள் வேலைபார்ப்பது தெரிய வருகிறது.

    மின்னலுக்குத் திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதும், மாப்பிள்ளை அமெரிக்காவிலிருந்து 5 நாட்களில்வரவிருப்பதும் தெரியவருகிறது. இருந்தாலும் தனது மனதிலிருந்து ரீமாவை மறக்க முடியாமல் தவிக்கிறான்மாதவன். அப்போது தாத்தா நாகேஷ் ஒரு யோசனை கொடுக்கிறார். அதன்படி அமெரிக்க மாப்பிள்ளையாகஅவதாரம் எடுக்கிறான் மாதவன். ரீமாவின் வீட்டுக்குள் நுழைகிறான்.

    உண்மையான மாப்பிள்ளையிடமிருந்து போன் எதுவும் வந்து விடக் கூடாது என்பதற்காக வீட்டு டெலிபோன்இணைப்பைத் துண்டிக்கிறான் மாதவன். இப்போது காதலைத் தொடங்குகிறார்கள். விழியில் விழி மோத இதயக்கதவு திறக்கிறது. 5 நாட்கள் முடிகிறது. இவர்களது காதலும்தான்.

    நிச்சயதார்த்த நாளின்போது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார் ரீமா. மாதவன் தனது தவறை உணர்கிறான்.அவளிடம் மன்னிப்பு கேட்க வீடு செல்கிறான். ஆனால் அவனை அவள் விரட்டி விடுகிறாள். ஆனால் மாதவன்,அவளை பல இடங்களில் சந்தித்து மன்னிப்பு கோருகிறான். ஆனால் பலனோ பூஜ்யம்தான்.

    இறுதி முயற்சியாக, தன் நண்பர்கள் புடை சூழ, அமெரிக்க மாப்பிள்ளையிடமே தனது காதலைச் சொல்லச்செல்கிறான். அங்கு அவனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. கல்லூரியில் விரோதியாக நினைத்த அப்பாஸ்தான்மாப்பிள்ளை என்றால் அவனுக்கு அதிர்ச்சியாக இல்லாமல் வேறு எப்படி இருக்கும்?

    அதை மறைத்துக் கொண்டு தனது காதலைச் சொல்கிறான் மாதவன். ஆனால் அப்பாஸ், அவனை விரோதியாகவேகருதி வெளியே அனுப்பி விடுகிறான். இருந்தாலும் தனது முயற்சியை விடவில்லை மாதவன். அப்பாஸ், ரீமாசெல்லும் இடங்களில் தொடர்கிறான். பேச முயற்சிக்கிறான். ஆனால் பலனில்லை.

    இந்த நேரத்தில், மாதவனுடன் பழகிய நாட்களை மனதிற்குள் அசை போட்டு உள்ளுக்குள் அழுகிறாள் ரீமா.தோற்றுப் போன காதலோடு, மாதவன் சிங்கப்பூரில் வேலை கிடைத்து, அங்கு செல்வதற்காக ஏர்போர்ட்செல்கிறான். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது. அது சஸ்பென்ஸ்!

    மாதவனும், அப்பாசும் அசத்தியிருக்கிறார்கள். நடிக்க நல்ல வாய்ப்பு இருவருக்கும். அதே போலவே ரீமாசென்னும். இவரைப் பார்க்கும்போது மார்கழிக் குளிர் போல குளுமையாக இருக்கிறது. கவர்ச்சிக்குப் பஞ்சமேஇல்லை (ஹி..ஹி). நடிப்பு சுமார்தான்.

    காமடிக்கு விவேக். மீண்டும் ஒரு காமடி விருந்தைப் படைத்திருக்கிறார். படத்திற்கு மிகப் பெரிய பலம் இசை.ஹாரிஸ் ஜெயராஜ், ஹார்ஸ் வேகத்தில் பாய்ந்திருக்கிறார். பாடல்கள் எல்லாமே பளிச்சிடுகிறது. குறிப்பாக பம்பாய்ஜெயஸ்ரீயின் வசீகரா, வசீகரிக்கிறது. வெண்மதி வெண்மதியே நில்லு நம்மை கட்டிப் போடுகிறது.

    மின்னலென வந்து போகும் படங்களுக்கு மத்தியில் இடி போல வலுவான கதையுடன் வந்திருக்கிறது மின்னலே.

    Read more about: abbas madavan minnale reema sen
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X