»   »  'பேட் மேன்' படம் சுமார்தான்... ஆனாலும் பாராட்டு மழையில்! #PadMan

'பேட் மேன்' படம் சுமார்தான்... ஆனாலும் பாராட்டு மழையில்! #PadMan

Posted By:
Subscribe to Oneindia Tamil

பால்கி இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள பேட் மேன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

பேட் மேன் (Pad Man) கதை குறைந்த விலையில் பெண்களுக்கு சானிடரி நாப்கினை தயாரித்துக் கொடுத்து, சிறந்த சமூக ஆர்வலரான கோவை அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது.

Mixed reviews for Pad Man

வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து தன் திறமையை நிரூபிப்பதோடு, நல்ல கருத்துகள் மக்களைச் சென்று சேர வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர் அக்ஷய் குமார். அதனால்தான் இந்தக் கதையைக் கேட்டதும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இன்று உலகெங்கும் வெளியான இந்தப் படத்துக்கு ஒரு பக்கம் வரவேற்பும் மறு பக்கம் கலவையான விமர்சனங்களும் கிடைத்துள்ளது.

Mixed reviews for Pad Man

படம் குறித்து எதிர்மறை விமர்சனங்களை வெளியிட்டுள்ள பத்திரிகைகளும்கூட அக்ஷய் குமாரின் அலட்டலில்லாத நடிப்புக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்துள்ளன.

English summary
R Balki's Pad Man gets mixed reviews but most of the reviews praises Akshay Kumar,

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil