twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மோகன்லால் – பிருத்விராஜ் இணைந்து கலக்கிய 'ப்ரோ டாடி' படம் எப்படி இருக்கு ?

    |

    லூசிஃபர் படத்திற்கு படத்திற்கு மோகன்லால் - பிருத்விராஜ் இணைந்துள்ள இரண்டாவது படம் Bro daddy. அதே போல் த்ரிஷ்யம் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து மோகன்லால் - மீனா மீண்டும் இணைந்துள்ள படம். லூசிஃபரில் ஆக்ஷன், த்ரிஷ்யத்தில் த்ரில்லிங்கில் கலக்கிய இந்த ஜோடிகள், கலகலப்பான படத்தையும் எங்களால் தர முடியும் என காட்டி உள்ளனர்.

    பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், ஆன்டனி பெரம்பாவூர் ஆசிர்வாத் சினிமாஸ் பேனரில் தயாரித்துள்ள காமெடி கலந்த பொழுதுபோக்கு படம் ப்ரோ டாடி. மோகன்லால், பிருத்விராஜ், மீனா, லாலு அலெக்ஸ், கல்யாணி பிரியதர்ஷன், கனிகா, ஜெகதீஷ், மல்லிகா சுகுமாரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் குடியரசு தினத்தை முன்னிட்டு டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டுள்ளது.

    54 வயதில் 5 முறை விவாகரத்து செய்த பிரபல நடிகை... ஷாக்கான ரசிகர்கள் 54 வயதில் 5 முறை விவாகரத்து செய்த பிரபல நடிகை... ஷாக்கான ரசிகர்கள்

    இது தான் படத்தின் கதை

    இது தான் படத்தின் கதை

    மோகன்லால் - மீனா தம்பதியின் மகன் பிருத்விராஜ். லாலு அலெக்ஸ் - கனிகா தம்பதியின் மகள் கல்யாணி. தொழிலதிபர்களான மோகன்லாலும் லாலுவும் நண்பர்கள். இவர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் பிருத்விராஜ் - கல்யாணி இருவரும் அதற்கு நோ சொல்கிறார்கள். யதார்த்தமாக நிகழ்ச்சி ஒன்றில் சந்திக்கும் இருவரும் முதல் முறையாக சந்திப்பதை போல் காட்டுகிறார்கள். ஆனால் பெங்களூருவில் வேலை செய்யும் பிருத்விராஜும், கல்யாணியும் 4 வருடங்களாக லிவ்விங் டூகெதரில் உள்ளனர்.

    இந்நிலையில் கல்யாணி திடீரென கர்ப்பமாகிறார். அதே சமயம் மகன் பிருத்விராஜிற்கு அவசரமாக போன் செய்யும் மோகன்லால், மறுநாள் வெட்கப்பட்டுக் கொண்டே மீனாவும் கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறார். ஒரே நேரத்தில் அப்பா, மகன் இருவரின் வாழ்க்கையில் நடக்கும் இந்த சம்பவம், அதற்கு பிறகு நடக்கும் நிகழ்வுகள் ஆகியவற்றை நகைச்சுவையுடன், அவ்வப்போது ட்விஸ்ட் வைத்து சொல்லி இருப்பது தான் ப்ரோ டாடி படத்தின் ஒட்டுமொத்த கதை.

    செம கெமிஸ்ட்ரி

    செம கெமிஸ்ட்ரி

    முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் படத்தை எடுத்து, அதில் வெற்றியும் கண்டுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஜாலியான, ரொமான்டிக்கான மோகன்லாலை இந்த படத்தில் பார்க்க முடிகிறது. மோகன்லால் - மீனா, பிருத்விராஜ் - கல்யாணி இடையேயான கெமிஸ்ட்ரி மிக நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படாதது சற்று வருத்தம் அளிக்கிறது.

    மோகன்லால் நண்பரான லாலு அலெக்ஸ், மோகன்லால் மனைவி மீனா இருவரும் சிறு வயது நண்பர்கள். மீனா மீதான ஒருதலைக்காதல் காரணமாக அவர் மீனாவை சந்திக்கும்போதெல்லாம் நகைச்சுவையாக 96 பட இசை போடுவது, மோகன்லால் அதை லேசாக கவனித்து தொண்டையை செருமி கலைப்பது, கடைசியில் பிரிதிவிராஜை ஏற்க முடியாது என்று சொல்லும் லாலு, கோபமாக மோகன்லாலுக்கு போன் செய்ய ,மீனா போனை எடுக்க இவர் வழிந்தப்படி முடிவை மாற்றிக்கொள்வது சுவைபட உள்ள காட்சிகள்.

    படம் எப்படி இருக்கு

    படம் எப்படி இருக்கு

    ஒரு நல்ல பொழுபோக்கு படமாக ப்ரோ டாடி படத்தை எடுத்துள்ளனர். ஃபஸ்ட் ஆஃப் முரட்டு தனமான செம கலகலப்பாக போகிறது. செகண்ட் ஆஃப் கொஞ்சம் சுமார் தான். இருந்தாலும் ரசிகர்களுக்கு போர் அடிக்காமல் படத்தின் திரைக்கதை நகர்த்தி சென்றுள்ளனர். முதல் அரை மணி நேர படம், வழக்கமான கதை தானே என்று நினைக்க வைத்தாலும், பிறகு போக போக ட்விஸ்டுகளை வைத்து ரசிக்க வைத்துள்ளனர். மோகன்லால்,பிருத்விராஜ் காம்போ மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. பிருத்விராஜும், மீனாவும் டயலாக்கை விட எக்ஸ்பிரஷனில் காமெடியில் பின்னு இருக்கிறார்கள். படம் முழுக்க இவர்களின் சேட்டை ரசித்து சிரிக்க வைக்கிறது. ஒரு அழகான க்ளைமாக்சையும் கொடுத்து ரசிகர்களிடம் பாராட்டை வாங்கி உள்ளனர்.

    டைரக்டராக ஜெயித்த பிருத்விராஜ்

    டைரக்டராக ஜெயித்த பிருத்விராஜ்

    ஒரு நடிகரிடம் எந்த அளவிற்கு வேலை வாங்க வேண்டும் என தெரிந்து, அதை சரியாக பயன்படுத்தி செய்திருக்கிறார் பிருத்விராஜ். மோகன்லாலின் ரசிகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களை மனதில் வைத்தே ஒவ்வொரு சீனையும் அமைத்துள்ளனர். ப்ருத்விராஜ் மீண்டும் ஒரு டைரக்டராக ஜெயித்துள்ளார். தீபக் தேவ் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது. 96 படத்தின் இசை அவ்வப்போது வந்து போகிறது. இரண்டு மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடும் ப்ரோ டாடி படம் கொஞ்சமும் தொய்வடையால் உள்ளது. ஸ்ரீஜித் மற்றும் பிபின் மலைக்கலின் திரைக்கதை அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.

    என்ன ரேட்டிங் கொடுத்திருக்காங்க

    என்ன ரேட்டிங் கொடுத்திருக்காங்க

    பல சீன்களில் மோகன்லாலின் நடிப்பு இப்படி ஒரு நண்பரைப் போன்ற அப்பா நமக்கு இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தை அனைவரின் மனதிலும் வந்து போக செய்கிறது. மீனா மற்றும் கல்யாணி வழக்கம் போல் க்யூட்டான எக்ஸ்பிரஷன், காமெடி ஆகியவற்றால் அனைவரையும் கவர்ந்துள்ளனர். மொத்தத்தில் திருப்தியான ஒரு பொழுதுபோக்கு படத்தை பார்த்து, சிரித்த நிறைவு ஏற்படுகிறது. ரசிகர்கள் இந்த படத்திற்கு 5 க்கு 3.5 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

    English summary
    Bro Daddy Movie Review in Tamil (ப்ரோ டாடி மலையாள பட விமர்சனம்): லூசிஃபர் படத்திற்கு படத்திற்கு மோகன்லால் – பிருத்விராஜ் இணைந்துள்ள இரண்டாவது படம் Bro daddy. அதே போல் த்ரிஷ்யம் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து மோகன்லால் – மீனா மீண்டும் இணைந்துள்ள படம். லூசிஃபரில் ஆக்ஷன், த்ரிஷ்யத்தில் த்ரில்லிங்கில் கலக்கிய இந்த ஜோடிகள், கலகலப்பான படத்தையும் எங்களால் தர முடியும் என காட்டி உள்ளனர்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X