twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Monster Review: இந்த எலித் தொல்லை தாங்க முடியலடா நாராயணா... மாஸ் காட்டும் மான்ஸ்டர்! விமர்சனம்

    |

    Recommended Video

    Monster Movie Audience Review: மான்ஸ்டர் படம் எடப்பாடி இருக்கு?.. மக்கள் கருத்து- வீடியோ

    Rating:
    3.5/5
    Star Cast: எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி ஷங்கர், கருணாகரன்
    Director: நெல்சன் வெங்கடேசன்

    சென்னை: ஒரு எலியால் நாயகன் அனுபவிக்கும் அவஸ்தைகள் தான் மான்ஸ்டர் படத்தின் ஒன்லைன்.

    அஞ்சனம் அழகிய பிள்ளை - படத்தில் நாயகன் எஸ்.ஜே.சூர்யாவின் பெயர் இது தான். இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் படத்தின் ஹீரோவுக்கு இப்படி ஒரு பெயரை யாரும் வைத்திருக்க மாட்டார்கள். வித்தியாசமான பெயரை கொண்டுள்ள எஸ்.கே.சூர்யாவுக்கு வரும் பிரச்சினைகளும் வித்தியாசமானவை தான். படத்தில் அவரது கதாபாத்திரமும் வித்தியாசமானது தான்.

    Monster: A perfect vacation movie for kids

    முதலில் வாடகை வீட்டில் குடியிருக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு தண்ணீர் முதல் ஹவுஸ்ஓனர் வரை எல்லாமே பிரச்சினைகள் தான். வாடகை வீட்டில் இருப்பதால் திருமணத்திற்கு பெண் தர மறுக்கிறார்கள்.

    சமந்தாவுக்கும், அம்மாவுக்கும் இடையே பிரச்சனையா?: இதை பாருங்க தெரியும் சமந்தாவுக்கும், அம்மாவுக்கும் இடையே பிரச்சனையா?: இதை பாருங்க தெரியும்

    இதனால் அழைந்து திரிந்து சென்னை வேளச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் சொந்தமாக ஒரு வீடு வாங்குகிறார். அந்த வீட்டை இதற்கு முன்பு வைத்திருந்தவர் கடத்தல்காரர் அனில்குமார். இவர் தான் படத்தின் வில்லன்.

    Monster: A perfect vacation movie for kids

    எஸ்.ஜே.சூர்யாவுக்கு பெண் கிடைத்து திருமணமும் முடிவாகிறது. ஒரு நகைக்கடையில் வேலை பார்க்கும் பிரியா பவானி சங்கருடன் (படத்தில் மேகலா) நிச்சயமாகிறது. எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு எலியால் தொல்லை ஆரம்பமாகிறது. எஸ்.ஜே.சூர்யாவின் வீட்டிற்குள் நுழையும் அந்த எலி, அவரை படாதபாடு படுத்துகிறது.

    இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யா வீட்டின் முன்னாள் ஓனர் அனில்குமார் சிறையில் இருந்து விடுதலையாகிறார். அவர் சிறைக்கு செல்வதற்கு முன்னர், எஸ்.ஜே.சூர்யா தற்போது இருக்கும் வீட்டில் விலை உயர்ந்த வைரங்களை ரஸ்கில் ஒலித்து மறைத்து வைக்கிறார். அதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என நினைக்கிறார்.

    Monster: A perfect vacation movie for kids

    எஸ்.ஜே.சூர்யாவை பாடாய்படுத்தும் அந்த எலி என்ன ஆகிறது? ஜீவகாருண்ய உள்ளம் கொண்ட எஸ்.ஜே.சூர்யா அந்த எலியை என்ன செய்கிறார்? வில்லனிடம் வைரம் கிடைக்கிறதா? என்பதை காமெடியாக சொல்கிறது படம்.

    எல்லோர் வீட்டிலும் எலி தொல்லை இருந்திருக்கும். அதனை ஒரு அழகான திரைப்படமாக, விறுவிறுப்பான திரைக்கதையில், வாய்விட்டு சிரிக்கக்கூடிய காமெடியுடன் எடுத்திருக்கும் இயக்குனர் நெல்சன் வெங்கடேசனுக்கு முதல் பாராட்டுகள். இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளுக்கு கைக்கொடுக்கும், பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு இரண்டாவது பாராட்டுகள்.

    ஒரு எலியை மைய கதாபாத்திரமாக வைத்துக்கொண்டு, அதையொட்டி ஒரு நல்ல கதையை பின்னி, அதற்கு ஏற்றார் போல் கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். இதனால் படத்தின் மீது நம்பகத்தன்மை உருவாகிறது. லாஜிக் மீறல்கள் இருந்தாலும், குழந்தைகள் ரசித்து பார்க்கும் வகையில் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர்.

    எலி சம்மந்தப்பட்ட காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் கிராபிக்ஸ் அதிகம் இல்லாமல், நிஜமான எலியை வைத்து எடுத்திருப்பது. ஒரு எலியை வைத்துக்கூட நல்ல படத்தை தர முடியும் என நிரூபித்திருக்கிறார் நெல்சன்.

    Monster: A perfect vacation movie for kids

    இவரை விட்டால் வேறு யாராலும் எலி அளவுக்கு இறங்கி நடிக்க முடியாது. ஆமாங்க தமிழ் சினிமா ஜிம் கேரி எஸ்.ஜே.சூர்யாவை தவிர வேறு யாராலும் இந்த கதாபாத்திரத்தை இவ்வளவு அருமையாக செய்திருக்க முடியாது. எஸ்.சூர்யாவின் நடிப்பு வாழ்க்கையில் மான்ஸ்டர் ஒரு முக்கியமான படம்.

    அழகு தேவதையாக படம் முழுவதும் ஜொலிக்கிறார் பிரியா பவானி சங்கர். செம ஹோம்லியாக இருக்கிறார். இப்படியே நல்ல படங்களை தேர்வு செய்து நடித்தால், நதியா விட்டுச் சென்ற இடத்தை பிரியாவால் நிரப்ப முடியும்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு சிரிக்கும்படியாக காமெடி செய்திருக்கிறார் கருணாகரன். வில்லன் அனில்குமாரும் காமெடிக்கு கைக்கொடுத்திருக்கிறார். நான் ஈ படத்தையும் சில இடங்கள் நினைவூட்டுவதை தவிர்க்க முடியவில்லை.

    Monster: A perfect vacation movie for kids

    படத்தின் மிகப்பெரிய பலம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனும், ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயும் தான். தேவையான இடங்களில் மென்மையான இசையை ஒலிக்கவிட்டு, மற்ற நேரங்களில் அமைதி காத்து சிறப்பாக பின்னணி கோர்த்திருக்கிறார் ஜஸ்டின். அந்திமழை பாட்டு, புதுமண ஜோடிகளின் ரிங்டோனாக ஒலிக்கும்.

    தேவையான காட்சிகளை மட்டும் வைத்து படத்தின் விறுவிறுப்பை தக்க வைத்திருக்கிறார் எடிட்டர் சபு ஜோசப். எலி சம்மந்தப்பட்ட காட்சிகளை நறுக்கென வெட்டி இருக்கிறார்.

    சுந்தரா டிராவல்ஸ் படத்தில் பார்த்த சில காட்சிகளை இதிலும் நாம் பார்க்க முடிகிறது. ஆனால் எலியை பற்றி நிறைய ஆய்வு செய்து புத்திசாலித்தனமாக திரைக்கதை அமைத்திருப்பதால், சில இடங்கள் புதிதாக தெரிகிறது.

    இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச காட்சிகள், புகை, மது இல்லாத படமாக வந்திருக்கிறது மான்ஸ்டர். திரையரங்குக்கு குழந்தைகளை தைரியமாக அழைத்து செல்லலாம். நிச்சயம் குழந்தைகள் கொண்டாடக்கூடிய, குழந்தைகளை சந்தோஷப்படுத்தக்கூடிய படம் மான்ஸ்டர்.

    English summary
    The Tamil movie Monster, starring SJ Surya, Priya Bhavanishankar, Karunakaran in the lead roles, directed by Nelson Venkatesan, is a fun filled family entertainer for this summer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X