twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Kamali From Nadukkaveri Review: பாராட்டுக்களை அள்ளி உள்ள கமலி ஃபரம் நடுகாவேரி - திரைவிமர்சனம்

    |

    Rating:
    4.0/5
    Star Cast: ஆனந்தி, இமான் அன்னாச்சி, அழகம் பெருமாள், பிரதாப் கே போத்தன்
    Director: ராஜசேகர் துரைசாமி

    சென்னை: கயல் ஆனந்தி நடிப்பில் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ள படம்
    "கமலி from நடுகாவேரி".

    இந்தப் படத்தை அபுண்டு ஸ்டூடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது. ராஜசேகர் துரைசாமி படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

    தற்போது சினிமா துறையினை சார்ந்தவர்களுக்கு இந்த படம் ஸ்பெஷல் ஷோ காண்பிக்கப்பட்டு பெரிய ஆதரவை பெற்ற வண்ணம் உள்ளது.

    குழப்பும் வயது

    குழப்பும் வயது

    பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர கூடிய தருணம், படிப்பு, கனவு, காதல் என அனைவரும் எதிர்கொள்ளும் குழப்பமான சூழ்நிலைக்கு தள்ளப்படும் கமலி. காதல் ஒரு புறமும், கனவு ஒரு புறமும் இருக்க இவை இரண்டையும் கமலி அடைந்தாளா என்பதே படத்தின் கதை.

    ஈர்க்கிறார் கமலியாக

    ஈர்க்கிறார் கமலியாக

    படத்தின் கதாநாயகியான கயல் ஆனந்தி எப்போதும் போல தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படம் பார்ப்போரை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இதற்குமுன் ஆனந்தியின் சில கதாபாத்திரங்கள் நன்றாக பேசப்பட்டாலும் அந்த வரிசையில் கமலி கதாபாத்திரம் முதன்மை வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவிற்கு கமலியாக வாழ்ந்துள்ளார் ஆனந்தி. இனி கயல் ஆனந்தி கமலி ஆனந்தியாக அழைக்க பட்டால் ஆச்சிர்ய படுவதுகில்லை .

    கேமரா பதிவுகளோடு

    கேமரா பதிவுகளோடு

    படத்தின் பல காட்சிகளில் எதார்த்தங்களை மிகவும் அழகாக கையாண்டு , ரசிகர்களை அழ வைத்து எமோஷனலாக நம் மனதை வருடி செல்வதோடு உன்னதமான நிறைவுடன் சிரிப்பையும் கச்சிதமாக பதிவு செய்து மெய் சிலிர்க்க வைக்கிறார் இயக்குனர் ராஜசேகர் . மிகவும் அழகான கேமரா பதிவுகளோடு கிராமம் , நகரம் , பெருநகரம் என்று மெனக்கெட்டு விசுவல் ட்ரீட் கொடுத்து உள்ளது ஒட்டு மொத்த குழுவும் .

    தெளிவான திரைக்கதை

    தெளிவான திரைக்கதை

    பிரபல இயக்குனர்களான உதய சங்கர், லிங்குசாமி ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் ராஜசேகர் துரைசாமி. தன்னுடைய முதல் படத்திலேயே தெளிவான திரைக்கதையின் மூலம் கவனிக்கவைக்கிறார் இயக்குனர் ராஜசேகர் துரைசாமி. உயர் கல்வி நிறுவனங்களில் நடுத்தர குடும்பத்தை சார்ந்த மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தெளிவுற படமாகியுள்ளார் இயக்குனர்.அது மட்டும் அல்லாமல் ஒரு ஆண் படிப்பதற்கும் ஒரு பெண் படிப்பதற்கும் சமுதாயத்தில் உண்டான வித்தியாசங்களையும் ஏற்ற தாழ்வுகளையும் அழகாக பதிவு செய்து உள்ளார் .

    குணச்சித்திர நடிகர்கள்

    குணச்சித்திர நடிகர்கள்

    படக்குழுவினர் தனது பணிகளை கச்சிதமாக செய்துள்ளனர். குறிப்பாக பின்னணி இசையும், பாடல்களும் திரைக்கதைக்கு ஏற்ற வகையில் அழகாக அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் தீனதயாளன். கமலியுடன் இணைந்து நடித்துள்ள ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஶ்ரீஜா பிரியதர்ஷினி, அபிதா , கார்த்தி ஶ்ரீனிவாசன் ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
    கிராமத்து தோழியாக ஶ்ரீஜா செம்ம சூப் . நகரத்து தோழியாக வரும் அபிதா அலட்டி கொண்டே அற்புதம் செய்கிறார் .

    ஸ்பெஷல் கோச்

    ஸ்பெஷல் கோச்

    கமலியின் உயர் கல்விக்காக பாடுபடும் பிரதாப் போத்தன் கதாபாத்திரம் மிக சிறப்பாக வடிவமைக்க பெற்று உள்ளது . குறிப்பாக அவர் பேசும் ஆங்கிலம் மற்றும் சொல்லி கொடுக்கும் முறை , எதார்த்தமான கோவம் அளவான பாசம் ,கிராமம் மீது கொண்ட காதல் , கமலின் மீது காட்டும் அக்கறை , வெற்றி பெற துடிக்கும் அவளின் உந்து சக்தியாக மிகவும் சிறப்பாக நடித்து உள்ளார் பிரதாப் . அவர் வீட்டில் இருக்கும் அப்துல் கலாம் படம் மாற்றப்படும் பொழுது பலருக்கும் திரையரங்கில் பெருமிதம் . இயக்குனரின் டைரெக்டோரியல் டச் மிக பிரமாதம் .

    பார்க்கவேண்டிய படம்

    பார்க்கவேண்டிய படம்

    படிக்கும் மாணவர்களும், மாணவர்களுடைய பெற்றோர்களும் என அனைவரும் பார்த்தே தீர வேண்டிய படம் தான் "கமலி from நடுகாவேரி". பிற மொழி படங்களை கண்டு வியக்க காரணம், நம் மொழியில் வெளிவரும் நல்ல படங்களை ஆதரவு அளிக்காமல் இருப்பது தான். அதுவும் குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் செல்வதை மக்கள் இன்னமும் பெரிதும் தவித்து தான் வருகின்றனர் . தரமான கதைகளத்தை கொண்ட கமலி from நடுகாவேரி படத்தை முடிந்த அளவிற்கு திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என்பதே ரசிகர்களுக்கு சினிமா வட்டாரம் இடும் கோரிக்கை ஆகும். இப்படி பட்ட நல்ல படங்கள் வசூல் ரீதியாக சாதனை செய்தால் தான் மீண்டும் மீண்டும் நல்ல படங்கள் வரும் என்பது நிதர்சனமான உண்மை .

    Read more about: கமலி kamali
    English summary
    movie review : kamali from nadukaveri
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X