For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  movie review Labam : விஜய் சேதுபதியின் ‘லாபம்’ திரைப்படம் யாருக்கு அனுகூலம்?- லாபம் திரைவிமர்சனம்

  |

  Rating:
  2.5/5

  நடிகர்கள்:

  விஜய் சேதுபதி
  ஸ்ருதி ஹாசன்

  இசை டி இமான்

  இயக்கம் : எஸ்.பி.ஜனநாதன்

  சென்னை : விஜய் சேதுபதி தயாரிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகி இருக்கும் படம் லாபம். பெருவயல் எனும் ஒரு சிறு கிராமத்தில் விவசாய பூமியை அபகரித்து, மக்களை துன்புறுத்தி, அடிமையாக்கி வைத்து இருக்கிறார் ஜெகபதி பாபு எனும் வில்லன் கதாபாத்திரம். காலம் காலமாக நம்பியார் காலத்தில் இருந்து இப்படிப்பட்ட கதைகளை தமிழ் சினிமா பார்த்து வருகிறது .

  இந்த படத்தை பொறுத்த வரையில் பல வருடங்களுக்கு பிறகு கிராமத்திற்கு வருகை தரும் விஜய் சேதுபதி, ஜெகபதி பாவுவை எதிர்த்து விவசாய சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்.சங்க தலைவர் ஆன விஜய் சேதுபதி என்ன என்ன போதிக்கிறார், சாதிக்கிறார் என்பது தான் மீதி கதை .

  மொட்டை தலை… முறுக்கு மீசை… வாடிவாசல் படத்திற்காக காட்டுத்தனமாக மாறிய அமீர்!மொட்டை தலை… முறுக்கு மீசை… வாடிவாசல் படத்திற்காக காட்டுத்தனமாக மாறிய அமீர்!

  புது சங்க தலைவர் மீது கோபமடையும் வில்லன் ஜெகபதி பாபு, விஜய் சேதுபதியை அழிக்க நினைக்கிறார். வழக்கம் போல் நீச்சல் குளம், சுற்றி பெண்கள், பங்களா வாசிகளின் பந்தாவான போக்கு போன்ற காட்சிகள் மூலம் நம்மை சலிப்பு தட்டுகிறார்.

  பாடம் எடுக்கிறார்

  பாடம் எடுக்கிறார்

  இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க, விஜய் சேதுபதி மக்களை திரட்டி புது சிந்தனைகளை புகட்டி பாடம் எடுக்கிறார் . கூட்டு பண்ணை திட்டத்தை செயல்படுத்த படாத பாடு படுகிறார். கடைசியாக ஜெகபதி பாபு, விஜய் சேதுபதியை வென்றாரா ? கூட்டு பண்ணை திட்டம் பற்றி மக்கள் புரிந்து கொண்டார்களா? என்பதே படத்தின் ஒட்டு மொத்த ஒன் லைன் .

  நடிகர்கள் தேர்வு

  நடிகர்கள் தேர்வு

  லாபம் படத்தில் நடிகர்களை தேர்வு செய்த விதம் நன்றாக இருந்தாலும் ,அவர்களுக்கு ஏற்ற பலமான கதாபாத்திரம் கொடுக்கப்படவில்லை என்பது தான் படத்தின் மிகப்பெரிய தோல்வியாக கருதப்படுகிறது. ப்ளாக்பஸ்டர் வெற்றி படங்களை கொடுத்த விஜய் சேதுபதிக்கும், தன்ஷிகாவிற்கும் இப்படம் மிகப்பெரிய சறுக்கலாகவே இருக்கின்றது. வில்லனுக்கு கையாளாக நிற்கும் தன்ஷிகாவின் கதாப்பாத்திரம் திருப்புமுனையை கொண்டு வரும் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்த தன்ஷிகாவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது .

  நீண்ட எதிர்பார்ப்பு

  நீண்ட எதிர்பார்ப்பு

  இப்படத்தின் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வரவேற்பை பெற்று வந்த ஸ்ருதி ஹாசனுக்கு,தமிழ் சினிமாவில் தனது திறமையை நிரூபிக்க இன்னும் நேரம் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .விவசாயம் சம்மந்தப்பட்ட படம் என்றால் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றி ஜெயித்துவிடலாம் என்று சில பல இயக்குனர்கள் கருதுவது உண்டு. ஆனால் எஸ் பி ஜனநாதன் அப்படி பட்ட ஒரு மனிதர் கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே . ஆனால் அமெச்சூர் மேக்கிங், போர் அடிக்கும் ஸ்க்ரீன்பிளே என்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு மிக பெரிய சோதனை தான் .

  எஸ்.பி. ஜனநாதன் படம் தானா ?

  எஸ்.பி. ஜனநாதன் படம் தானா ?

  படத்தின் முதல் பாதியாவது பார்த்துவிடலாம் ,ஆனால் இரண்டாம் பாதி, இது எஸ்.பி. ஜனநாதன் படம் தானா என்று கேள்வி கேட்க தோன்றுகிறது .நீண்ட நாட்கள் கழித்து படம் திரையரங்குகளில் வெளிவருவதால் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டு வந்த ரசிகர்களை விஜய் சேதுபதி ஏமாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

  லாபம் படம் யாருக்கு லாபம் ?

  லாபம் படம் யாருக்கு லாபம் ?

  லெனின்,கார்ல் மாக்ஸ் கொள்கைகளை அதிகம் படிக்காதவர்கள்,அவர்களை பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள் இந்த படத்தை பார்த்தால் கொஞ்சம் லாபம் . விவசாயிகள் பொறுமையுடன் இந்த படத்தை பக்குவமாக பார்த்தால் சில உண்மைகள் புரிந்து லாபம் பெறலாம் . ஆனால் இவை அனைத்தும் கொஞ்சம் தான் என்பது நிதர்சனமான உண்மை . உலக பொருளாதாரம், பருத்தியின் விலை நிர்ணயம்,பங்கு சந்தை என்று பல விஷங்களை அலசி சில விஷயங்களை நன்றாக குழப்பி நமக்கு தருவதால் லாபம் படம் யாருக்கு லாபம் என்பதில் அதிக சிக்கல் ஏற்படுகிறது .

  வில்லன் கதாபாத்திரம்

  வில்லன் கதாபாத்திரம்

  இப்படத்தின் வில்லன் ஜெகபதி பாபு பல வெற்றி படங்களை கொடுத்து இருந்தாலும் ,சொல்லும் அளவிற்கு இப்படத்தில் மிரட்டலான வில்லத்தனம் ஏதும் செய்ய வில்லை .படத்தின் முதல் பாதியிலேயே நான்கு பாடல் வருவதால் ,படத்தின் மீது உள்ள ஈர்ப்பு குறைய தொடங்குகிறது .ஆனால் அதில் காதல் பாடல் ஏதும் இல்லை என்பது தான் மிகப்பெரிய பிளஸ் .படத்தின் ஒன் லைன் கதை நன்றாக இருந்தாலும் அதை திரைக்கதை மூலம் படமாக்கிய விதம் தான் மனதை ஈர்க்கவில்லை .பல நடிகர்கள் நடித்து இருந்தாலும், ஒன்று கூட சொல்லும் அளவிற்கு இல்லை என்பது மிகவும் சோதனை

  சமுதாயத்திற்கு சொல்ல வேண்டும்

  மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன் எங்கு சென்றாலும் ஜனா சார் ஜனா சார் என்று மிகவும் மதிக்கும் அளவிற்கு மக்களையும், தன்னை சுற்றி உள்ளவர்களையும் ஈர்த்து உள்ளார் .பல நல்ல கமர்சியல் படங்களை கொடுத்த ஜனநாதன் இந்த லாபம் படத்தை வியாபார நோக்கத்துடன் செய்யவில்லை என்பது நன்கு புரிகிறது. அவர் மனதில் பட்ட விஷயங்களை படத்தின் இறுதியில் ஒரு வீடியோவாக 2 நிமிடம் காட்டுகிறார்கள். அது மட்டுமே போதுமானது .ஆனால் அந்த 2 நிமிட வீடியோ ஒரு பெரிய படமாக மாறும் பொது பல சிக்கல்களை சந்தித்து உள்ளது .ஆனாலும் கூட ஒரு சிறந்த கருத்தை சமுதாயத்திற்கு சொல்ல வேண்டும் என்று நினைத்து அவர் எடுத்த இந்த முயற்சியை ஒரு கோணத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர் . அந்த பாராட்டுக்களோடு அவர் ஆத்மா சாந்தி அடைய இந்த படத்தின் காட்சிகள் பலர் மனதில் எதோ ஒரு நல்ல பாதிப்பை ஏற்படுத்தும் .

  English summary
  movie review : labam
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X