twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    MOVIE REVIEW : "சில நேரங்களில் சில மனிதர்கள்" படம் எப்படி இருக்கு ?

    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள் :

    அசோக் செல்வன்
    ரேயா
    நாசர்
    பானுப்பிரியா
    கே எஸ் ரவிக்குமார்
    மணிகண்டன்
    பிரவீன்
    அபிஹாசன்
    ரித்விகா

    இசை: ரதன்

    இயக்கம் : விஷால் வெங்கட்

    சென்னை: விஷால் வெங்கட் என்கிற ஆறுமுக இயக்குனர் இயக்கத்தில் நாசர், அசோக் செல்வன், ரேயா, அபிஹாசன், மணிகண்டன், ரித்விகா, பானுப்பிரியா, அஞ்சு குரியன், பிரவீன் பாலா, கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சில நேரங்களில் சில மனிதர்கள்.

    Recommended Video

    Sila Nerangalil Sila Manidhargal Review | Yessa ? Bussa ?|Ashok Selvan|Manikandan|Vishal Venkat

    அட்வைஸ் என்கின்ற பெயரில் அதிகப்படியான போர் அடிக்கும் காட்சிகளை வைக்காமல் மிகவும் எதார்த்தமான, வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட, நாம் சந்தித்த மனிதர்களின் உரையாடல்களை அழுத்தமான வசனங்களாக பதிவுசெய்து காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர் விஷால்.

    எப்படி போட்டாலும் கண்டு பிடிச்சிடுறாங்களே? பிக் பாஸ் அல்டிமேட்டின் 7வது போட்டியாளர் யார் தெரியுமா?எப்படி போட்டாலும் கண்டு பிடிச்சிடுறாங்களே? பிக் பாஸ் அல்டிமேட்டின் 7வது போட்டியாளர் யார் தெரியுமா?

    நான்கு வித்தியாசமான கதைகள், வெவ்வேறு கதாபாத்திரங்கள் தங்களுக்கு தெரிந்த வாழ்க்கைமுறையை, அவர்களை சுற்றி இருக்கும் சூழ்நிலையை பிடித்துக்கொண்டு எது சரியோ அதையே செய்து வாழ்கின்றனர். எது சரியில்லை எது தவறு என்பதை ஒவ்வொருவரும் தனித்தனியாக உணரும் பொழுது படத்தின் ஒட்டு மொத்த கதையும் வீரியம் பெறுகிறது.

    வடிவமைத்த விதம்

    வடிவமைத்த விதம்

    படத்தின் முதல் காட்சி நாசர் தனிமையில் நின்று கொண்டிருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அவர் எங்கு நின்றாரோ அதே இடத்தில் டைரெக்டோரியல் டச்சுடன் நிறைவு பெறுகிறது. இதற்கு இடையில் நாசர் என்னும் அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்த விதமும் அவரை சுற்றி நடந்த நிகழ்வுகளும் உணர்வுபூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது.

    மீண்டும் உறுதி செய்து

    மீண்டும் உறுதி செய்து

    மணிகண்டன் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் கடந்து தனித்துவமாக

    ஸ்கோர் செய்ய ஒரு தனி வாய்ப்பு . கிடைத்த அந்த வாய்ப்பை அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி நெகிழ வைக்கிறார். எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை திறம்பட நடிக்க முடியும் என்பதை இந்தப் படத்தின் மூலம் அவர் மீண்டும் உறுதி செய்துள்ளார். படத்தில் நடித்து இருப்பது மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு வசனங்களையும் எழுதியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

    இணையத்தளத்தில் பிரபலமாக

    இணையத்தளத்தில் பிரபலமாக

    அபிஹாசன் சினிமா நடிகராகவே கதாபாத்திரம் ஏற்று நடித்து உள்ளார். தான் நடித்த ஒரு படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பல படங்களில் நடித்தவர் போல தலைகணமாக பேசுவது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. இவருடைய இந்த கதாபாத்திரம் சமீபத்தில் மேடைப் பேச்சால் பெரும் சர்ச்சைக்குள்ளான ஒரு நடிகரை நினைவுக்குக் கொண்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் இணையத்தளத்தில் பிரபலமாக இருக்கும் மூன்று பேர் கொண்ட வலை பேச்சு நிகழ்ச்சியை மேற்கோள் காட்டுவது , மற்றும் கோபி சுதாகர் போன்றவர்களை சரியான நேரத்தில் பயன்படுத்தி ரணகள படுத்தி சிரிப்பலையை வர வைக்கிறார் இயக்குனர் .

    புரிந்தும் புரியாமலும்

    புரிந்தும் புரியாமலும்

    ரதனின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் சுமார் ரகம். நடிகர் தனுஷ் பாடி இருந்தாலும் படத்தின் திரைக்கதை தான் மனதில் நிற்கிறது. திறமையான ஒளிப்பதிவு மூலம் ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன்.மெய்யேந்திரன் பாலுமகேந்திரா பட்டறை என்பதால் அவரது பிரேமிங் சென்ஸ் எட்டி பார்க்கிறது . முதல் பாதி கதையை நீட்டிக் கொண்டே போக ஒரு மிகப்பெரிய தொய்வு புரிந்தும் புரியாமலும் நமக்கு ஏற்படுகிறது . இரண்டாம் பாதியில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதும் அவர்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளும் போதும் மனித இயல்புகளை சுட்டிக்காட்டும் பொழுதும் நாம் திரை மொழியை தாண்டி பல விதத்தில் சிந்திக்க ஆரம்பித்து விடுகிறோம். கதையின் அழுத்தம் நம்மை இரண்டாம் பாதியில் தொற்றிக்கொள்கிறது என்பதை உணரும் பொழுது இயக்குனர் வெற்றி பெறுகிறார் .

    குறுகிய நேரம் என்றாலும்

    மனிதர்கள் ஒருவருக்கொருவர் நேசிப்பதும் கருத்துக்களில் முரண்படுவதும், அலட்சியங்களால் பல சூழ்நிலைகளில் அவலப்படுவதும் , எதார்த்த வாழ்க்கையை மீறி ஒரு பகட்டான, போலியான மனநிலைக்கு தள்ளப்படும்போது என்னவெல்லாம் நடக்கிறது என்பதை நிறுத்தி நிதானமாக சொன்னவிதம் அருமை. கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று இந்த படத்தை பார்க்கலாம். எந்த விதமான அடல்ட் கண்டன்ட்டும் இல்லை என்பது மிகப் பெரிய ஆறுதல். பானுப்பிரியா என்கின்ற ஒரு அசாத்திய திறமை கொண்ட நடிகையை இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை என்பதுதான் இந்தப்படத்தின் வேதனை. எல்லா கதாபாத்திரத்திற்கும் குறுகிய நேரம் என்றாலும் பானுப்பிரியா கதாபாத்திரம் சொற்ப நேரமே வருவது மிகப்பெரிய மைனஸ். மற்றபடி படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து மனிதநேயம் மற்றும் மனிதன் ஏற்றுக்கொள்ள வேண்டிய மனமாற்றம் பற்றி விவரிக்கும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" கண்டிப்பாக ரசிக்க வைக்கும்.

    English summary
    MOVIE REVIEW : Sila Nerangalil Sila Manidhargal
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X