Just In
- 13 hrs ago
பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் !
- 13 hrs ago
வலிமை நாயகி ஹூமா குரேஷியின் ஹாலிவுட் பட டிரைலர் ரிலீஸ்
- 13 hrs ago
காட்டுப்பேச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து… நன்றி கூறிய தனுஷ்!
- 13 hrs ago
நெகடிவ் ஆன விஷயத்தை சந்தோஷமாக பகிர்ந்த ஆலியா...ரசிகர்கள் மகிழ்ச்சி
Don't Miss!
- Finance
அவசரமா 10 லட்சம் வேண்டுமா..? இதுதான் சரியான வழி..!
- News
குட் நியூஸ்... சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு... இன்று என்ன விலை தெரியுமா?
- Automobiles
மின்சாரம்-டீசல் இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் டிராக்டர் அறிமுகம்... விவசாயிகள் காச மிச்சப்படுத்த இதுவே உகந்தது!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 15.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்துவது நல்லது…
- Sports
சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்
- Education
மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம்! தேர்வு கிடையாது! மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
movie review : குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம்
சென்னை: ஆர்யா, சாயிஷா, மகிழ் திருமேனி நடிப்பில் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ள படம் டெடி.
இந்த படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார், இமான் இசையமைத்துள்ளார், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
சந்திரமுகி 2 வருமா வராதா? லாரன்ஸ் சொன்ன பதில்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
நீண்ட இடைவெளிக்கு பின் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பேன்டஸி திரைப்படம்
உடல் உறுப்பு கடத்தல் செய்யும் மெடிக்கல் மாபியாவால் ஸ்ரீ (சயீஷா) கடத்தப்படுகிறார். அவருக்கு மருந்து செலுத்திய பிறகு கோமா நிலைக்கு சென்றுவிடுகிறார். அதன் பிறகு சாயீஷாவின் ஆத்மா ஒரு டெடி பொம்மைக்குள் சென்றுவிடுகிறது (பேன்டஸி படம் என்பதால் இவ்வாறாக கதை அமைக்கப்பட்டுள்ளது). அந்த டெடி பொம்மை சிவாவுடன் (ஆர்யா) நட்பாகி ஸ்ரீ உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்கிறது. அதைத்தொடர்ந்து மீதமுள்ள கதை நகர்கிறது.

புதுமையான கதை
மிருதன், டிக் டிக் டிக், நாய்கள் ஜாக்கிரதை என வித்தியாசமான வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இந்த படத்தையும் புதுமையான கதையை கொண்டு இயக்கியுள்ளார். படத்தின் கதையில் வரும் விஷயங்கள் முன்னரே சில படங்களில் பார்த்தது போல இருந்தாலும், டெடி பொம்மையை வைத்து புதுமையாக முயற்சித்துள்ளார். சக்தியின் முந்தைய படங்களை ஒப்பிடும் போது இதில் சுவாரசியம் சற்று குறைவாகவே அமைந்துள்ளது. மற்றபடி தனது புது முயற்சியால் நல்ல படத்தையே வழங்கியுள்ளார்.

திறன் கொண்ட கதாபாத்திரம்
சிவா எனும் அமைதியான தோற்றத்தை கொண்ட அதிபுத்திசாலியான கதாபாத்திரமாக நடித்துள்ளார் ஆர்யா.
ஆக்ஷன் காட்சிகளை தவிர்த்து மற்ற காட்சிகளில் ஒரே மாதிரியாக படத்தில் ஆர்யா தோன்றுகிறார்.இருந்தாலும் பல இடங்களில் ஸ்கிரீன் பிரசன்ஸ் ரசிக்கும் படி உள்ளது. வழக்கம் போல தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார் ஆர்யா.சாயிஷாவிற்கு படத்தில் பெரிதும் சொல்லி கொள்ளும் அளவில் காட்சிகள் இல்லையென்றாலும் வருகின்ற இடங்களில் நன்றாக நடித்துள்ளார். ஆர்யா, சாயீஷா இடையேயான எமோஷனல் காட்சிகள் படத்திற்கு கைகொடுத்துள்ளது.

பாரட்டிற்குரிய முயற்சி
படத்தில் பேன்டஸி எலமெண்டாக டெடி பொம்மையை இயக்குனர் பயன்படுத்தியுள்ளார். அதை சரிவர பயன் படுத்தினாரா, இல்லையா என்பதை தாண்டி இந்த புதிய முயற்சி பாரட்டிற்குரியது. டெடியின் விஎஃப்எக்ஸ் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. டெடி பொம்மை செய்யும் காரியங்கள், அதற்கும் ஆர்யாவிற்கும் இடையேயான காட்சிகள் ரசிகர்களை கவர்கிறது.குறிப்பாக டெடி பொம்மைக்கு உயிரோட்டமாக டப்பிங் பேசியவர் அதிக பாராட்டுகளை பெறுகிறார் .

சரியான பங்களிப்பு
படத்தில் ஆர்யாவை தவிர மற்ற நடிகர்களுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஹீரோவின் நண்பனாக நடித்திருக்கும் சதீஷ் வழக்கம் போல தன் வேலையை செய்துள்ளார். கருணாகரணின் கதாபாத்திரம் பெரிதாக கவரவில்லை. வில்லனாக மகிழ் திருமேனி தன் பங்கை சிறப்பாக அளித்துள்ளார்.

குழந்தைகள் விரும்பி பார்க்க
படத்தின் பாடல்கள் முன்னரே நல்ல வரவேற்பை பெற்றது, குறிப்பாக என் இனிய தனிமையே பாடல். இமானின் பின்னணி இசை, யுவாவின் ஒளிப்பதிவு படத்திற்கு சரியான பங்களிப்பு. A சென்டர் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் குழந்தைகள் விரும்பி பார்க்கும் வகையில் டெடி அமைந்துள்ளது.குடும்பத்துடன் தைரியமாக பார்த்து ரசிக்கலாம் . வீட்டில் இருக்கு குட்டி சுட்டி குழந்தைகளுக்கு கண்டிப்பாக இந்த படம் ஒரு இன்பமயமான படம் தான் .