»   »  முன்னோடி - விமர்சனம்

முன்னோடி - விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: ஹரீஷ், யாமினி பாஸ்கர், அர்ஜுனா, சித்தாரா


ஒளிப்பதிவு: வினோத் ரத்னசாமி


இசை: பிரபு சங்கர்


தயாரிப்பு: சோஹம் அகர்வால், எஸ்பிடிஏ குமார்


இயக்கம்: எஸ்பிடிஏ குமார்


யாருக்கும் அடங்காத பிள்ளை, ரவுடி சகவாசம், அந்த ரவுடியே பின்னால் குடும்பத்துக்கு எமனாக மாறுவது என பார்த்துப் பழகிய கதைக் களம்தான். ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்ட முயன்றிருக்கிறார் புது இயக்குநர் குமார்.


படித்து முடித்து வேலையின்றி ஊர் சுற்றும் கோபக்கார இளைஞன் ஹரீஷ். தன்னை விட தன் தம்பி மீது அதிக செல்லம் காட்டுகிறாரே என அம்மா மீதே கோபப்படும் இளைஞன். யாமினியைப் பார்த்ததும் லவ்வாகிறான்.


Munnodi Review

ஒரு சந்தர்ப்பத்தில் லோக்கல் தாதா அர்ஜுனாவின் உயிரைக் காக்கிறான் ஹரீஷ். இதில் இருவருக்கும் நல்ல நெருக்கம். ஒரு கட்டத்தில் அர்ஜுனாவின் வலது கரமாகிவிடுகிறான் ஹரீஷ்.


இடையில் தம்பியையும் அம்மாவையும் புரிந்து இனி குடும்பத்துடன் ஐக்கியமாகிறான். அர்ஜுனாவை விட்டு விலகுகிறான்.


விளைவு... அதே தாதா அர்ஜுனாவின் தம்பி உயிருக்கு எமனாய் வந்து நிற்க, அடுத்து என்ன செய்கிறான் ஹரீஷ் என்பது க்ளைமாக்ஸ்.


யாரிடமும் சினிமா கற்காமல் நேரடியாக ஒரு முழுப் படம் எடுத்திருக்கிறார் எஸ்பிடிஏ குமார். வாழ்த்துகள். முதல் பாதியில் இன்னும் விறுவிறுப்பாக காட்சிகளை வைத்திருக்கலாம். ஆனால் இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகளில் நல்ல விறுவிறுப்பு.


Munnodi Review

முரட்டுத்தனமான இளைஞன் வேடத்தை இயல்பாகச் செய்திருக்கிறார் ஹரீஷ். தம்பியை எதிரியாகக் கருதி கொல்லப் பார்ப்பதும், அதே தம்பி தன் காதலுக்கு உதவுவதைப் பார்த்து நெகிழ்வதும் சுவாரஸ்ய திருப்பம்.


யாமினி பாஸ்கருக்கு வழக்கமான நாயகி வேடம்தான். காதல் காட்சிகளில் முதல் படத் தயக்கம் தெரிகிறது. இன்னும் பயிற்சி தேவை.


கங்காரு அர்ஜூனாவுக்கு இதில் அதிரடி வில்லன் வேடம். மிரட்டியிருக்கிறார் மனிதர். குறிப்பாக அந்த கோயில் சண்டை அனல் பறக்கிறது.


Munnodi Review

படத்தின் ஸ்பெஷலே சண்டைக் காட்சிகள்தான். ஸ்டன்ட் மாஸ்டர் பெயர் டேஞ்சர் மணியாம். செம்ம..


அதிரடி திருப்பங்கள் என்ற பெயரில் வரும் நம்ப முடியாத காட்சிகள் மற்றும் கடுப்பேற்றும் காமெடிக்கு கத்தரி போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.


வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் பிரமாதம். பிரபு சங்கரின் இசையும் கேட்கும்படி உள்ளது.


Munnodi Review

நல்ல முடிச்சைத்தான் பிடித்திருக்கிறார் இயக்குநர் குமார். ஆனால் இன்னும் திருத்தமாகச் சொல்லியிருந்தால், அழுத்தமான தடம் பதித்திருப்பார்.

English summary
Review of debutant director SPTA Kumar's Munnodi movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil