»   »  'நாச்சியார்' - ட்விட்டர் விமர்சனம்! #Naachiyaar

'நாச்சியார்' - ட்விட்டர் விமர்சனம்! #Naachiyaar

Posted By:
Subscribe to Oneindia Tamil
இந்த வாரம் வந்த படங்களில் எந்த படம் மலையேறும் எந்த படம் மண்ணை கவ்வும்,,?

சென்னை : இன்று தமிழ் சினிமாவில் 'நாச்சியார்', 'வீரா', 'நாகேஷ் திரையரங்கம்' உள்ளிட்ட ஐந்து படங்கள் வெளியாகியுள்ளன. ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா ஆகியோர் நடிப்பில் 'நாச்சியார்' படம் இன்று வெளியாகி இருக்கிறது.

பாலா இயக்கியுள்ள படம் என்பதாலும், டீசர் வெளியானபோதே பல சர்ச்சைகள் கிளம்பியதாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 'நாச்சியார்'.

தற்போது துபாய் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் படம் வெளியாகிவிட்டதால் அங்குள்ள ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படம் பற்றிய விமர்சனத்தை பகிர்ந்து வருகின்றனர்.

பாஸிட்டிவ் படம்

சில காலத்திற்கு பிறகு பாலாவிடம் இருந்து ஒரு பாஸிட்டிவ் படம் வந்திருக்கிறது. பாலாவின் நோக்கம் சரியான பாதையில் போகிறது எனச் சொல்லலாம். படத்தில் சில நகைச்சுவை காட்சிகள் திடீரென சஸ்பென்ஸ் சீரியஸாக மாறுகிறது.

அந்த விளக்கம் செம்ம

உண்மையாகவே அருமையான படம். பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். புதிய இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட விளக்கம் செம்ம... பாலா புதிய ஸ்டைலில் கலக்கியிருக்கிறார்.

நல்ல கிளைமாக்ஸ்

'நாச்சியார்' படத்தின் கிளைமாக்ஸ் நன்கு ரசிக்கும்படியாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு பாலாவிடம் எதிர்பார்க்காத படம் 'நாச்சியார்'.

முதல் பாதி கொஞ்சம் டல்

எளிமையான கதைக்களம்.. அருமையான பிண்ணனி இசை... ஜோ மற்றும் இவானாவின் சிறப்பான நடிப்பு. ஜி.வி.பி தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் பாதி லவ் போர்ஷன் டல்லா ஆரம்பிச்சாலும் இன்டர்வெல்லில் பிக்கப் ஆகி செகண்ட் ஆஃப் சூப்பர்.

ரசிக்கவைக்கிறது

இதுவரைக்கும் நல்லா என்கேஜிங்கா போய்க்கிட்டு இருக்கு... ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஜோதிகாவின் நடிப்பு ஈர்க்கிறது.

படம் - நிறைவு

'நாச்சியார்' படம் பிடிச்சிருக்கு. நல்ல பவர்ஃபுல்லான சப்ஜெக்ட் கொண்ட எளிமையான கதை. ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் அப்புறம் புதுமுகம் இவானா ஆகியோரின் நடிப்பு படத்தை நிறைவாக்கியிருக்கு. நல்ல ரசிக்கத்தக்க அனுபவம்.

English summary
The film 'Naachiyaar' lead by GV Prakash and Jyothika has been released today. As Bala's movie is being many controversies, the fans have a huge expectation for the 'Naachiyar'. Overseas fans have been sharing reviews about the film on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil