twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாயா? மனிதனா? காமெடியில் கலக்கும் சதீஷ் ஹீரோவாக ஜெயித்தாரா?? நாய் சேகர் விமர்சனம்

    |

    சென்னை : புதுமுக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கி உள்ள படம் நாய் சேகர். பொங்கலை முன்னிட்டு தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் காமெடியனாக தன்னை அடையாளப்படுத்திய சதீஷ் இந்த படத்தில் தன்னை ஹீரோவாகவும் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். கல்பாத்தி எஸ்.அகோரமின் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது.

    Recommended Video

    Sathish & Pavithra நடித்த Naai Sekar படம் எப்படி இருக்கு?? | Naai Sekar Public Review

    குக் வித் கோமாளி பிரபலம் பவித்ர லட்சுமி ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். இவர்களுடன் ஜார்ஜ் மரியம், ஸ்ரீமன், லிவிங்ஸ்டன், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். இவர்களை விட மிக முக்கியமான ரோலில் லேப்ரடார் நாய் நடித்துள்ளது. இந்த நாய்க்கு மிர்ச்சி ஷிவா வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.

    Film review...’கடைசீல பிரியாணி’...சைகோ கொலையாளியும், சிறுவனும், கடவுள் விஜய் சேதுபதியும்Film review...’கடைசீல பிரியாணி’...சைகோ கொலையாளியும், சிறுவனும், கடவுள் விஜய் சேதுபதியும்

    இது தான் கதை

    இது தான் கதை

    நாயை போல் நடந்து கொள்ளும் மனிதன், மனிதனை போல் நடந்து கொள்ளும் நாய். இவர்கள் இருவரிடையே நடக்கும் யதார்த்தமான நிகழ்வுகளை காமெடி கலந்து சொல்லி இருக்கிறார்கள். நாய் வந்த பிறகு நடக்கும் ஃபஸ்ட் ஆஃப் கதை மிகவும் ஃபன்னாக, அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. சதீஷ், ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படத்திலேயே தனது வித்தியாசமான நடிப்பை காட்டி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

    ரஜினியும் வந்து போறார்

    ரஜினியும் வந்து போறார்

    ஹீரோயின் பவித்ர லட்சுமியும் மிக க்யூட்டாக வந்து, அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படத்தின் பல இடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் Reference பார்க்க முடிகிறது. ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகவே மிக கவனமாக திரைக்கதையை அமைத்துள்ளனர். மக்கள் எதிர்பார்த்து வந்த காமெடியை மிக தாராளமாக வழங்கி உள்ளனர்.

    பொங்கல் ரேசில் முதலிடம்

    பொங்கல் ரேசில் முதலிடம்

    ஜாதி பற்றிய விஷயங்களையும் மிக சரியான அளவில் கையாண்டுள்ளார்கள். கொஞ்சம் மிகுதியாக கூறி இருந்தால் பட ஜாதிய விஷயங்கள் பற்றி பேசும் படம் என விமர்சனங்களை சந்தித்திருக்கும். அதே சமயம் பல விஷயங்களை மிக குறைத்து பேசி இருந்தால் இந்த படம் ஃபிளாப் ஆகி இருக்கும். ஆனால் காமெடி முதல் அனைத்து விஷயங்களையும் மிக சரியாக கையாண்டு பொங்கல் ரேசில் முதல் இடத்தில் இருக்கிறார் நாய் சேகர்.

    யதார்த்தமாக கதை

    வழக்கம் போல் அனிருத் இசையில் கலக்கி இருக்கிறார். பின்னணி இசை ஆகட்டும், பாடல்கள் ஆகட்டும் ரசிக்கும் படியாக உள்ளது. ஒரு நாயை மையப்படுத்தி, நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை வைத்தே கதையை அமைத்துள்ளனர்.

    தமிழிலும் நல்ல படம்

    யதார்த்தமான கதையை சுவாரஸ்யமாக, நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார்கள். அரைத்த மாவையே அரைத்து, வழக்கமாக தமிழ் சினிமாக்களை போல் ரசிகர்களை கடுப்பேற்றாமல், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் தமிழிலும் வந்துள்ளது என அனைவரையும் சொல்ல வைத்துள்ளார் நாய் சேகர்.

    English summary
    Naai Sekar Review in Tamil [நாய் சேகர் திரைவிமர்சனம்]: Comedian Sathish's hero debut movie Naai sekar released today as pongal special in theatres. In the first day it gets positive reviews. In pongal race movies, naai sekar beats others and it is seen as Fully Comedy Entertainment Movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X