twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    nethraa review - கனடாவில் காணாமல் போகும் காதலனைத் தேடும் காதலியின் தவிப்பு - நேத்ரா விமர்சனம்!

    கனடாவில் காணாமல் போகும் காதலனைத் தேடும் காதலியின் தவிப்பு தான் நேத்ரா திரைப்படம்.

    |

    Rating:
    2.5/5
    Star Cast: வினை ராய், தமன் குமார், சுபிக்சா, ரித்விகா, ஜி கே ரெட்டி
    Director: ஏ வெங்கடேஷ்

    சென்னை: பெற்றோருக்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற இடத்தில் காணாமல் போகும் காதலனைத் தேடும் பெண்ணின் கதை தான் நேத்ரா.

    தமன் குமாரும், சுபிக்‌ஷாவும் காதலர்கள். சுபிக்‌ஷாவுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடப்பதால், கனடாவில் இருக்கும் தனது நண்பர் வினய்யிடம் உதவி கேட்கிறார். வினய் உதவியுடன் இருவரும் கனடா தப்பிச் செல்கின்றனர். ஆனால் காதலர்கள் சென்ற நேரம் அவசர வேலையாக வேறு நாட்டிற்கு சென்று விடுகிறார் வினய்.

    Nethraa movie review

    இதனால், அந்நாட்டு போலீஸ் உதவியுடன், இமான் அண்ணாச்சியின் அறிமுகம் கிடைக்க, அவர் வேலை பார்க்கும் ஹோட்டலிலேயே தமன் வேலைக்கு சேர்கிறார். காதலர்கள் சந்தோசமாக தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கும் வேலையில், திடீரென மாயமாகிறார் தமன். இதனால் மீண்டும் போலீசை நாடுகிறார் சுபிக்‌ஷா. ஆனால், அப்படி ஒருவர் இங்கு வரவேயில்லை என்கிறார்கள் அனைவரும் சொல்லி வைத்தது போல். இது குறித்து விசாரிக்க தொடங்குகிறார் வெங்கடேஷ்.

    Nethraa movie review

    இந்த பிரச்சினைகளுக்கு இடையே வெளிநாடு சென்ற வினய், மீண்டும் கனடா திரும்ப, தமன் எப்படி மாயமானார்? அவர் கடத்தப்பட்டாரா? மீண்டும் காதலர்கள் இணைந்தார்களா? என்பது தான் நேத்ரா படத்தின் மீதிக்கதை.

    தமனும் சரி, சுபிக்‌ஷாவும் சரி தங்களது கதாபாத்திரத்துக்கு தேவையான அளவு சரியாக நடித்திருக்கிறார்கள். படம் முழுவதும் பயணிக்க வேண்டிய கனமான பாத்திரம் சுபிக்‌ஷாவுக்கு. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். கதையின் முக்கிய திருப்பங்களுக்கு காரணமானவராக வலுவான கதாபாத்திரத்தில் வினய்.

    இமான் அண்ணாச்சியிடம் வழக்கமான காமெடி மிஸ்ஸிங். ஓரிரு இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார். ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன் என காமெடிக்கு பலர் இருந்தும், நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு காமெடி படத்தில் இல்லாதது ஏமாற்றமே.

    Nethraa movie review

    மற்றபடி வெங்கடேஷ், ரித்விகா, வின்சென்ட் அசோகன், ஜி.கே.ரெட்டி என எல்லோருமே கதையின் நகர்வுக்கு மட்டுமே உதவியிருக்கின்றனர்.

    புல்வாமா எதிரொலி: இந்திய படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை புல்வாமா எதிரொலி: இந்திய படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை

    படத்தின் பெரும்பாலான காட்சிகள் கனடாவிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது. முதல் பாதியில் படத்தின் வேகம் இருக்கும் அளவிற்கு இரண்டாம் பாதி இல்லை. நீளமான இரண்டாவது பாதி கொஞ்சம் அலுப்பைத் தருகிறது.

    என்.கணேஷ் குமாரின் படத்தொகுப்பும், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் படத்தை கொஞ்சம் தாங்கிப் பிடிக்கிறது. கனடாவின் அழகை ஏ.ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவு கண் முன் கொண்டு வருகிறது.

    Nethraa movie review

    ஆள் தெரியாத ஒரு ஊரில் காதலனை இழந்து தவிக்கும் ஒரு பெண்ணின் கதையை முழுநீள படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கடேஷ். திரைக்கதையை கொஞ்சம் வலுப்படுத்தியிருந்தால் நேத்ரா ரசிக்கும்படி இருந்திருப்பாள்.

    English summary
    Nethraa is an Tamil thriller film co-produced and directed by A. Venkatesh. The film features a cast including Vinay, Thaman Kumar, Rithvika and Subiksha in the lead roles.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X