Don't Miss!
- News
அதானி விவகாரம்.. எல்ஐசி, எஸ்பிஐ வங்கி சேமிப்புகளுக்கு பாதிப்பா.. வேல்முருகன் வைத்த முக்கிய டிமாண்ட்
- Lifestyle
இறந்த உடலை சாப்பிட்ட அரசர்கள் முதல் அரசவையில் சுயஇன்பம் செய்த அரசர் வரை தலைசுற்ற வைத்த மன்னர்கள்...!
- Finance
அதானி குழுமத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டி பார்த்த ஹிண்டர்ன்பர்க்.. 3 நாளில் 29% மதிப்பு சரிவு!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஜோதிகா எக்ஸ்பிரஷன்லேயே கொன்னுட்டாங்க.. கருத்துதான் தாங்க முடியல.. உடன்பிறப்பே டிவிட்டர் விமர்சனம்!
சென்னை: ஜோதிகாவின் 50வது படமான உடன்பிறப்பே படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில் படம் குறித்து சமூக வளைதளங்களில் தங்களின் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிம்பு என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5...Danger Zone ல் இருக்கும் மூன்று பேர் இவங்க தான்
சூர்யாவுடன் படங்களில் சேர்ந்து நடித்த போது அவருடன் ஜோதிகாவுக்கு காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து பல ஆண்டுகள் காத்திருந்த இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

சினிமாவில் மீண்டும் என்ட்ரி
திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார் ஜோதிகா. ஜோதிகா - சூர்யா தம்பதிக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு 2015ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார் ஜோதிகா. திருமணத்திற்கு

நாயகிக்கு முக்கியத்துவம்
இதனை தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாத்திரங்களிலேயே நடித்து வருகிறார் ஜோதிகா. அந்த வகையில் மகளிர் மட்டும், நாச்சியார். செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் பெரும்பாலும் அவரை மைய்யப்படுத்தியே வெளி வந்துள்ளது.

உடன்பிறப்பே படம்
இந்நிலையில் நடிகை ஜோதிகா தனது 50வது படமாக உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்து உள்ளார். கத்துக்குட்டி படத்தை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்கி வருகிறார். கத்துக்குட்டி படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதும் வசூல் ரீதியாக சோபிக்கவில்லை. இந்நிலையில் ஜோதிகாவின் 50வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் சரவணன்.

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில்
இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஜோதிகாவுக்கு அண்ணனாக சசிக்குமாரும், கணவராக சமுத்திரகனியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

பர்ஃபெக்ட் சாய்ஸ்..
இந்நிலையில் இப்படம் குறித்த விமர்சனங்களை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் உடன் பிறப்பே படத்தை பார்த்த இந்த நெட்டிசன் குறிப்பிட்டிருப்பதாவது, இப்போதான் உடன்பிறப்பே படம் பார்த்தேன்.. ஜோதிகா தன்னோட எக்ஸ்பிரஷன்ஸாலேயே கொன்னுட்டாங்க... ஜோதிகாவின் 50வது படத்துக்கு பர்ஃபெக்ட் சாய்ஸ்.. எல்லோருமே அவர்களின் கேரக்டரை சிறப்பாக செய்துள்ளனர். வேற மாதிரி பண்ணிட்டீங்க என்று குறிப்பிட்டு நட்சத்திரங்களில் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டுள்ளார்.

அரைமணி நேரம் கூட பார்க்க முடியல
உடன் பிறப்பே படத்தை பார்த்த இந்த நெட்டிசன், என்ன கருமம் டா இது.. அரைமணி நேரம் கூட முழுசா பார்க்க முடியலயேடா என குறிப்பிட்டுள்ளார்.

ஆக்ட்டிங் வேற லெவல்..
உடன்பிறப்பே படத்தை இந்த நெட்டிசன், உடன்பிறப்பே.. முழுக்க ஃபேமிலி எமோஷனல் படம்.. படத்தை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.. ஜோதிகா அண்ணி ஆக்ட்டிங் வேற லெவல்... சமுத்திரக்கனி, சசிக்குமார் நடிப்பும் தீயாய் இருக்கு.. இமான் இசை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

கருத்து சொல்லிட்டு இருக்கீங்க
உடன் பிறப்பே படத்தை பார்த்த இந்த நெட்டிசன், என்னடா ஒவ்வொரு நிமிசமும் கருத்து சொல்லிட்டு இருக்கீங்க என குறிப்பிட்டுள்ளார்.

ஜீன்ஸ் பிரசாந்த் மாதிரி
உடன் பிறப்பே படத்தை பார்த்த இந்த நெட்டிசன், உடன்பிறப்பே படத்தில் சமுத்திரகனி மீசை இல்லாம ஜீன்ஸ் பிரசாந்த் மாதிரி இருப்பதாக பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.