»   »  ஒன் ஹார்ட் விமர்சனம்

ஒன் ஹார்ட் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
2.5/5
-எஸ் ஷங்கர்

ஒரு இசையமைப்பாளர் தன் இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசைப் பயணத்தை எப்படி வெற்றிகரமாக மேடையேற்றுகிறார் என்பதை தன் சொந்த அனுபவத்தை வைத்துப் படமாக்கி இருக்கிறார் ஆஸ்கர் விருது வென்ற ஏ ஆர் ரஹ்மான். தமிழில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் இப்படி ஒரு படம் வருவது இதுதான் முதல் முறை.

அமெரிக்காவில் தான் நடத்திய இசைப் பயணத்தை மையப்படுத்தியே இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் ஏஆர் ரஹ்மான். ஒரு லைவ் கன்சர்ட் நடத்துவதற்கு முன் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், இசைக் கலைஞர்களுடன் இணைந்து செய்ய வேண்டிய பணிகளையெல்லாம் விரிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ரஹ்மான்.

One Heart Review

ரஹ்மானின் இசையில் வெளிவந்த பாடல்களில் சிறந்தவற்றை, சின்னச் சின்ன மாற்றங்களுடன் இந்தப் படத்தில் தொகுத்திருக்கிறார்கள்.

ஹரிச்சரண், ரஞ்சித் பரோட், தேவி ராணி ராஜீவ், ஜொனிதா காந்தி, அன்னடெ பிலிப் போன்றவர்களுடன் இணைந்து எப்படி ஒரு இசைக்குழுவை உருவாக்கினார் என்பதையும் இதில் காட்டியுள்ளார் ரஹ்மான்.

படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, திரையரங்கிலிருந்து ஒரு லைவ் கச்சேரிக்குப் பயணமாகும் உணர்வை இந்தப் படத்தின் சில காட்சிகளில் உணரமுடிகிறது.

முதல் லைவ் கன்சர்டை அரங்கேற்றும் முன் தனக்கு இருந்த மன அழுத்தம், அதேபோல, ஒரு சிறுவனாக முதல் கச்சேரியைப் பார்த்த பரவச அனுபவம் போன்றவற்றை நேர்த்தியாகக் காட்டியிருக்கிறார் ரஹ்மான்.

ஒரு அரை நிமிடம் வந்து போகும் ரஹ்மானின் குடும்ப விடுமுறை வீடியோ, இறுக்கமான காட்சிகளுக்கு நடுவே சின்ன ரிலாக்ஸ்.

ஆனால் ரொம்பவே ஆவணப்பட நெடி படம் நெடுக. தனது ஆரம்பகால இசைக் கூட்டாளிகளான சுரேஷ் பீட்டர்ஸ், பிரவீண் மணி, ட்ரம்ஸ் சிவமணி என யாரைப் பற்றியும் ரஹ்மான் மூச்சுக்காட்டவில்லை. ஒரு எளிய ரசிகனால் இந்தப் படத்துக்குள் அத்தனை சுலபத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியுமா.. என்றால் சந்தேகம்தான். பளபளப்பு மின்னும் ஒரு காஸ்ட்லி ரஹ்மான் கச்சேரியைக் காண முடியாமல் ஒதுங்கும் மனநிலைதான் அவர்களுக்கு மிஞ்சும்!

இன்னொரு விஷயம்.. இந்தப் படத்தை டால்பி அட்மோஸ் மாதிரி ஒலித்தரம் கொண்ட அரங்குகளில் பார்த்தால் மட்டுமே, அந்த துல்லிய இசைக்காக ரசிக்க முடியும்.

English summary
AR Rahman's One Heart movie Review

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil