Just In
- 42 min ago
மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்!
- 1 hr ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
- 1 hr ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 2 hrs ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
Don't Miss!
- Finance
மாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..!
- Sports
நடுவர்களின் பாரபட்சம்.. எல்லா பக்கமும் சுற்றி வளைக்கும் ஆஸ்திரேலிய அணி.. களத்தில் ஏற்பட்ட சர்ச்சை!
- News
"2 விஷயத்தை" அமித்ஷாவிடம் முன்வைத்த எடப்பாடியார்.. நல்லது நடக்குமா.. பலத்த எதிர்பார்ப்பு
- Automobiles
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Oru adaar love review: இளமையிலே கல்வியோடு காதலும் வேண்டும்... 'ஒரு அடார் லவ்'! விமர்சனம்

பள்ளியில் 11-வது படிக்கும் ரோஷனுக்கு, அவரது வகுப்புத் தோழியான பிரியா வாரியார் மீது காதல் மலர்கிறது. அவரது தோழியான நூரின் ஷெரிப்பு ரோஷனின் காதலுக்கு உதவுகிறார். பிரியாவுக்கும் ரோஷன் மீது காதல் மலர்கிறது. ஆனால் ரோஷனும், நூரினும் சகஜமாக பழகுவது பிரியாவுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. இதனால் காதலில் விரிசல் ஏற்படுகிறது. அந்த இடைவெளியில் ரோஷனுக்கும் நூரினுக்குமான நட்பு காதலாக மாறுகிறது. இருவரும் நெருக்கமாக பழகுவதை பார்க்கும் பிரியா, ரோஷனிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் காதலிக்க தொடங்குகிறாள். கடைசியில் ரோஷன் யாருடன் சேர்ந்தார் என்பதை இளமை துள்ளலாக சொல்லுகிறது ஒரு அடார் லவ்.
ஒரு பள்ளி வகுப்புறையில் சில பல கேமராக்களை பொருத்தி வைத்து, கேன்டிட்டாக பதிவு செய்தால் எப்படி இருக்குமோ, அப்படித் தான் இருக்கிறது ஒரு அடார் லவ். பதின்வயது பள்ளி மாணவர்கள், ஒருவருக்கொருவர் எப்படி ஈர்க்கப்பட்டு காதலில் விழுவார்கள், அவர்களுக்குள்ளான நட்பு, காதல், காமெடி, சண்டை என எல்லாமே மிக எதார்த்தமாக இருக்கிறது.
குறிப்பாக உருகவைக்கும் அந்த க்ளைமாக்ஸ் காட்சி மனதைவிட்டு அகல மறுக்கிறது. விளையாட்டு விபரீதமாகும் என்பதை அறியாமல், மாணவர்கள் செய்யும் சில வேலைகள், அவர்களுக்கு எவ்வளவு பெரிய தீங்கை ஏற்படுத்தும் என்பதை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குநர் ஒமர் லுலு. பசங்க என்றால் இப்படி தான் இருப்பார் என்பதை அழகாக காட்சிப் படுத்தியிருக்கிறார். நிறைய காட்சிகள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.
ரோஷன் அண்ட் டீமில் உள்ள ஒவ்வொரு மாணவனும் நம் பள்ளி பருவத்தை நினைவு படுத்துகிறார்கள். படத்தில் வரும் பசங்களில் யாராவது ஒருவர் நம் பால்ய நண்பர்களை ஞாபகப்படுத்தலாம். அந்தளவிற்கு ஒவ்வொருவரும் கதாபாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார்கள்.
படம் வெளியாவதற்கு முன்பே பிரபலமாகிவிட்ட பிரியா வாரியர் படத்தின் டெம்போவை ஏற்றுகிறார். முத்தத்தை துப்பாக்கி தோட்டாவாக அவர் அனுப்பும் அந்த காட்சிக்காகவே மொத்தம் தியேட்டரும் காத்திருக்கிறது. அந்த காட்சி வந்ததும், தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது. ரோஷனுடனான காதல் காட்சிகளில் சொக்க வைக்கும் பிரியா, படம் முழுக்க இளசுகளை ஜொள்ளுவிட செய்கிறார்.
புருவ அசைவு வீடியோவைப் பார்த்ததில் இருந்து, ஒரு அடார் காதல் என்றாலே பிரியா வாரியர் தான் நம் மனதுக்குள் சட்டென வந்து நின்றார். ஆனால் படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் மனதில், பிரியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு நூரின் ஷெரிப்பு தான் வீற்றிருக்கிறார். 'ச்ச இப்படி ஒரு கேர்ள் ப்ரெண்ட் நமக்கு கிடைக்கவில்லையே' என ஏங்க வைத்துவிடுகிறார் நூரின் ஷெரிப்பு. இந்த பொண்ணுக்கு நிச்சயம் பெரிய எதிர்காலம் இருக்கு.
ஷான் ரஹ்மானில் இசையில் அனைத்து பாடல்களுமே ஆட்டம் போட வைக்கின்றன. ப்ரீக் பெண்ணே பாடல் செம பீட்டு என்றால், பார்யெவர் ப்ரெண்ட் உருகவைக்கும் மெலடி. பின்னணி இசையிலும் இளமை துள்ளுகிறது.
கேரளாவையும், அதன் அழகையும், பதின் மாணவர்களின் இளமை துள்ளலையும் அதன் போக்கிலேயே படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த். படத்தின் கதையோட்டத்தை சிறிதும் சீர்குலைக்காமல், விறுவிறுப்பாக எடிட் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அச்சு விஜயன்.
மலையாளப் படத்தை பார்க்கும் உணர்வே இல்லாத அளவுக்கு கச்சிதமாக டப்பிங் செய்திருக்கிறார்கள். குறிப்பாக வசனங்கள் அனைத்தும் இயல்பாக காட்சியோடு பொருந்தியிருக்கின்றன.
துள்ளுவதோ இளமை போன்று ஏற்கனவே தமிழில் இதுபோன்ற படங்கள் வந்துவிட்டன. அதன் அப்டேட்டட் வெர்ஷனாகவே இந்த படத்தை பார்க்க முடிகிறது. படத்தில் கருத்து எல்லாம் சொல்லவில்லை. அதேபோல் ரொமான்ஸ் காட்சிகளையும் தமிழ் டப்பிங்கில் கத்தரித்துவிட்டார்கள்.
வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர்னு ஏற்கனவே நம்ம பசங்க பண்ணும் அலம்பல் தாங்க முடியல. இதுல இந்த படத்த வேற பார்த்துட்டு வந்து என்ன பண்ண போறாங்களோ என்ற எண்ணம் தான் ஒரு அடார் லவ் பார்க்கும் பெற்றோருக்கு ஏற்படும். ஆனால் இது அவர்களுக்கான படம் அல்ல. இளமை காதலின் இனிமையை ருசிக்க காத்திருக்கும் இளைஞர்களின் கொண்டாட்டம் தான் ஒரு அடார் லவ்.
நம்ம ஆர்யாவா?: சயீஷா அம்மா சொல்வதை நம்பவும் முடியல, நம்பாமல் இருக்கவும் முடியலயே