twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு நாள் ஒரு கனவு- கேசட் விமர்சனம் தவறே செய்திராத பாசில் இந்தப் படத்தில் சின்னத் தவறு செய்து விட்டார். பேசாமல் இந்தப் படத்திற்கு காற்றில் வரும் கீதம் என்றே பெயர் வைத்திருக்கலாம்.ஒரு நாள் ஒரு கனவு சிடியை கேட்டு முடித்த நிமிடத்தில் இருந்து நம் மனதுக்குள் சூறாவளியாய் சுற்றிக் கொண்டிருப்பது காற்றில் வரும் கீதம் பாடல் தான். அந்தஅளவுக்கு மனதை கொள்ளை கொள்கிறது.இந்தப் பாடலில் ஒரு மெலடி சுனாமியையே உருவாக்கிக் காட்டியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. தென்றலில் நனைந்து, தேனில் குளித்த பரவச அனுபவம் தரும்பாடல். அத்தனை பாடல்களிலும் இந்த ஒரு பாட்டு மட்டுமே போதும், இசை ஞானியால், இந்தப் படம் எந்த அளவுக்கு உயிர் பெறப் போகிறது என்பற்கு.பாடலை வாலியும், ராஜாவும் சேர்ந்து கம்போஸ் செய்வதும் கேசட்டில் வருகிறது. ராஜா ட்யூனைச் சொல்ல, அதற்கு வாலி அனுபவித்து வரிகளைப் போட, ஆஹா!வாலியும், ராஜாவும் போட்டி போட்டு ஜெயிக்கிறார்கள்.எப்போதும், எந்த மன நிலையிலும் கேட்க வைக்கும் பாடல். வாலி திவர பழனி பாரதியும் எழுதியிருக்கிறார். அத்தனை பாடல்களில் மெலடியும், ராஜாவும் சேர்ந்து விளையாடியிருக்கிறார்கள்.காற்றில் வரும் கீதம் பாடல் வரிகளில் தென்றலின் சுகம். அதை வெகு அழகாகப் பாடியிருக்கும் பவதாரணியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அனுபவித்துப்பாடியிருக்கிறார்.அவன் வாய் குழலில் அழகாக,அமுதம் ததும்பும் இசையாக,மலர்ந்தாய்,நடந்தாய் அலை போல் மிதந்து ..என்று ஆரம்பித்து, பசு அறியும் அந்த சிசு அறியும் பாலை மறந்த பாம்பறியும் .. என்று போய்ஆதார சுதி அந்த அன்னை என்பேன்,அதற்கேற்ற லயம் எந்தன் தந்தைஎன்பேன் என்று போகும்போது மனசையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போகிறார்கள் ராஜாவும், வாலியும்.பவதாரணியுடன் சேர்ந்து பாடியிருக்கும் ஸ்ரேயா கோஷ், சாதனா சர்கம், ஹரிஹரன் மற்றும் ராஜா என அத்தனை குரல்களும் சேர்ந்து பாட்டையே ஒரு இசைவிருந்தாக்கியுள்ளன.பழனிபாரதியின் இளமை வரிகளில்கஜூராஹோ கனவிலோர் ... என்று இளமை தெறிக்கும் பாடல். இசையும், வரிகளும் இணைந்து வேகமெடுத்து ஓடி நிற்கும்போது சடாரென பத்து வயசு குறைந்ததுபோனது மாதிரி தோன்றினால் ஆச்சரியமில்லை.ஹரிஹரன், ஸ்ரேயா கோஷ் குரலில் வரிகளில் வாலிபப் பூக்கள் படு வேகமாக மலர்கின்றன.என் தேகம் முழுவதும் மின் மினி ஓடுதே,மார்பினில் சூரியன் காய்கிறதே ...பனியோடு தேன் துளி ஊறுதே ..காமனின் வழிபாடு உடலினைக் கொண்டாடு ..தெய்வம்போல் என்னை நீ ஏந்து,எங்கே நான் என்று நீ தேடு .. மெல்ல மெல்ல விரலில் திரன தீம்தனா ..என பாடல் முழுவதும் மோகத் தீ, சும்மா பரபரவென பற்றி எரிந்து பரவி ஓடுகிறது.பாடல் வரிகளை விட இசையின் சப்தம் சற்றே அதிகம் என்றாலும் குறையொன்றுமில்லை!என்ன பாட்டு வேண்டும் உனக்கு .. என்ற பாடல், யாருக்கோ அட்வைஸ் தருவது போல இருக்கிறது.பழனிபாரதிதான் இதையும் எழுதியிருக்கிறார். குரல் கொடுத்திருப்பவர் சோனு நிகாம்.என்ன பாட்டு வேண்டும் உனக்கு..அதில் என்ன தெரியும் உனக்கு ..அசைந்தாடும் இமை கூட இசை பாடும்..புரியாத பாடை விட்டு புரிகின்ற பாட்டைக் கேளு..ஆகாயம் எங்கும் இந்த கானம் செல்லும்..இசை என்ன இங்கு விளையாட்டா..மைதானக் கூச்சல்கள் போடாதே..நான் என்ற கர்வத்துக்கு நாதங்கள் சொந்தமில்லை..இப்படிப் போகும் பாடலில் இசையின் வேகமும், சோனு நிகாமின் குரலிலும். ரசிக்க வைக்கிறது.வாலியின் இன்னொரு சூப்பர் பாடல் கொஞ்சம், திற கொஞ்சம் திற கண்ணே..இதுவும் சோனு நிகாம், ஸ்ரேயா கோஷ் ஆகியோர் குரல்களில் சந்தோஷிக்க வைக்கும் பாட்டு. உந்தன் கண்கள் வழி உள்ளிறங்க வேண்டும்...உண்மையை சொல்லவா, ஊமை போல நடிக்கிறாய் ..உதட்டிலே கசங்குதே வார்த்தை கூட ..மெளனம் எனும் சாவியால் வாயை நீ பூட்டினாய் ..வாடினேன், தேடினேன் திறவுகோலை என்ற வரிகளில் வழக்கமான வாலியாட்டம்.வாலியின் இன்னொரு கலக்கல் பாட்டு, இளமைக்கோர் வேகம் உண்டு. இளசுகளுகு ரொம்பத் தேவையான அட்வைஸ்களை அள்ளிப் போட்டுக் கொடுத்திருக்கிறார்.அதை தனது ஸ்டைல் அடியில் கொடுத்துக் கலக்கியிருக்கிறார் ராஜா.தூங்காதே துவளாதே தூக்கம் சோறு போடுமா?சிங்கம் சோர்ந்து போகலாமா?முன்னால் போன பின் பின்னால் திரும்பியே நடக்காதே .உன் பேரை நீயுந்தான் ஊரெங்கும் தம்பட்டம் அடிக்காதே என்று பாடல் நெடுகிலும் அட்வைஸ் மழை. இளைஞர்களுக்கான பாட்டு.பொண்ணுக்கு இந்த மாப்பிள்ளையை .. டிபிக்கல் ராஜா பாட்டு. ஜாலியான பாட்டு. இதையும் வாலிதான் எழுதியிருக்கிறார். வரிகளில் பெரிய அளவில் விஷயம்இல்லாவிட்டாலும் ராஜாவின் இசை ரசிக்க வைக்கிறது.ஒரு நாள் ஒரு கனவு- சூப்பர் ஜூகல்பந்தி!

    By Staff
    |

    தவறே செய்திராத பாசில் இந்தப் படத்தில் சின்னத் தவறு செய்து விட்டார். பேசாமல் இந்தப் படத்திற்கு காற்றில் வரும் கீதம் என்றே பெயர் வைத்திருக்கலாம்.

    ஒரு நாள் ஒரு கனவு சிடியை கேட்டு முடித்த நிமிடத்தில் இருந்து நம் மனதுக்குள் சூறாவளியாய் சுற்றிக் கொண்டிருப்பது காற்றில் வரும் கீதம் பாடல் தான். அந்தஅளவுக்கு மனதை கொள்ளை கொள்கிறது.

    இந்தப் பாடலில் ஒரு மெலடி சுனாமியையே உருவாக்கிக் காட்டியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. தென்றலில் நனைந்து, தேனில் குளித்த பரவச அனுபவம் தரும்பாடல். அத்தனை பாடல்களிலும் இந்த ஒரு பாட்டு மட்டுமே போதும், இசை ஞானியால், இந்தப் படம் எந்த அளவுக்கு உயிர் பெறப் போகிறது என்பற்கு.

    பாடலை வாலியும், ராஜாவும் சேர்ந்து கம்போஸ் செய்வதும் கேசட்டில் வருகிறது. ராஜா ட்யூனைச் சொல்ல, அதற்கு வாலி அனுபவித்து வரிகளைப் போட, ஆஹா!வாலியும், ராஜாவும் போட்டி போட்டு ஜெயிக்கிறார்கள்.

    எப்போதும், எந்த மன நிலையிலும் கேட்க வைக்கும் பாடல்.

    வாலி திவர பழனி பாரதியும் எழுதியிருக்கிறார். அத்தனை பாடல்களில் மெலடியும், ராஜாவும் சேர்ந்து விளையாடியிருக்கிறார்கள்.

    காற்றில் வரும் கீதம் பாடல் வரிகளில் தென்றலின் சுகம். அதை வெகு அழகாகப் பாடியிருக்கும் பவதாரணியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அனுபவித்துப்பாடியிருக்கிறார்.


    அவன் வாய் குழலில் அழகாக,
    அமுதம் ததும்பும் இசையாக,
    மலர்ந்தாய்,
    நடந்தாய் அலை போல் மிதந்து ..
    என்று ஆரம்பித்து, பசு அறியும் அந்த சிசு அறியும் பாலை மறந்த பாம்பறியும் .. என்று போய்
    ஆதார சுதி அந்த அன்னை என்பேன்,
    அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை

    என்பேன் என்று போகும்போது மனசையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போகிறார்கள் ராஜாவும், வாலியும்.

    பவதாரணியுடன் சேர்ந்து பாடியிருக்கும் ஸ்ரேயா கோஷ், சாதனா சர்கம், ஹரிஹரன் மற்றும் ராஜா என அத்தனை குரல்களும் சேர்ந்து பாட்டையே ஒரு இசைவிருந்தாக்கியுள்ளன.

    பழனிபாரதியின் இளமை வரிகளில்

    கஜூராஹோ கனவிலோர் ... என்று இளமை தெறிக்கும் பாடல். இசையும், வரிகளும் இணைந்து வேகமெடுத்து ஓடி நிற்கும்போது சடாரென பத்து வயசு குறைந்ததுபோனது மாதிரி தோன்றினால் ஆச்சரியமில்லை.

    ஹரிஹரன், ஸ்ரேயா கோஷ் குரலில் வரிகளில் வாலிபப் பூக்கள் படு வேகமாக மலர்கின்றன.

    என் தேகம் முழுவதும் மின் மினி ஓடுதே,

    மார்பினில் சூரியன் காய்கிறதே ...
    பனியோடு தேன் துளி ஊறுதே ..
    காமனின் வழிபாடு உடலினைக் கொண்டாடு ..
    தெய்வம்போல் என்னை நீ ஏந்து,

    எங்கே நான் என்று நீ தேடு ..

    மெல்ல மெல்ல விரலில் திரன தீம்தனா ..

    என பாடல் முழுவதும் மோகத் தீ, சும்மா பரபரவென பற்றி எரிந்து பரவி ஓடுகிறது.

    பாடல் வரிகளை விட இசையின் சப்தம் சற்றே அதிகம் என்றாலும் குறையொன்றுமில்லை!

    என்ன பாட்டு வேண்டும் உனக்கு .. என்ற பாடல், யாருக்கோ அட்வைஸ் தருவது போல இருக்கிறது.

    பழனிபாரதிதான் இதையும் எழுதியிருக்கிறார். குரல் கொடுத்திருப்பவர் சோனு நிகாம்.

    என்ன பாட்டு வேண்டும் உனக்கு..

    அதில் என்ன தெரியும் உனக்கு ..
    அசைந்தாடும் இமை கூட இசை பாடும்..
    புரியாத பாடை விட்டு புரிகின்ற பாட்டைக் கேளு..

    ஆகாயம் எங்கும் இந்த கானம் செல்லும்..
    இசை என்ன இங்கு விளையாட்டா..
    மைதானக் கூச்சல்கள் போடாதே..
    நான் என்ற கர்வத்துக்கு நாதங்கள் சொந்தமில்லை..

    இப்படிப் போகும் பாடலில் இசையின் வேகமும், சோனு நிகாமின் குரலிலும். ரசிக்க வைக்கிறது.

    வாலியின் இன்னொரு சூப்பர் பாடல் கொஞ்சம், திற கொஞ்சம் திற கண்ணே..

    இதுவும் சோனு நிகாம், ஸ்ரேயா கோஷ் ஆகியோர் குரல்களில் சந்தோஷிக்க வைக்கும் பாட்டு.

    உந்தன் கண்கள் வழி உள்ளிறங்க வேண்டும்...

    உண்மையை சொல்லவா, ஊமை போல நடிக்கிறாய் ..
    உதட்டிலே கசங்குதே வார்த்தை கூட ..
    மெளனம் எனும் சாவியால்
    வாயை நீ பூட்டினாய் ..
    வாடினேன், தேடினேன் திறவுகோலை என்ற வரிகளில் வழக்கமான வாலியாட்டம்.

    வாலியின் இன்னொரு கலக்கல் பாட்டு, இளமைக்கோர் வேகம் உண்டு. இளசுகளுகு ரொம்பத் தேவையான அட்வைஸ்களை அள்ளிப் போட்டுக் கொடுத்திருக்கிறார்.

    அதை தனது ஸ்டைல் அடியில் கொடுத்துக் கலக்கியிருக்கிறார் ராஜா.

    தூங்காதே துவளாதே தூக்கம் சோறு போடுமா?
    சிங்கம் சோர்ந்து போகலாமா?
    முன்னால் போன பின் பின்னால் திரும்பியே நடக்காதே .
    உன் பேரை நீயுந்தான் ஊரெங்கும் தம்பட்டம் அடிக்காதே என்று பாடல் நெடுகிலும் அட்வைஸ் மழை.

    இளைஞர்களுக்கான பாட்டு.

    பொண்ணுக்கு இந்த மாப்பிள்ளையை .. டிபிக்கல் ராஜா பாட்டு. ஜாலியான பாட்டு. இதையும் வாலிதான் எழுதியிருக்கிறார். வரிகளில் பெரிய அளவில் விஷயம்இல்லாவிட்டாலும் ராஜாவின் இசை ரசிக்க வைக்கிறது.

    ஒரு நாள் ஒரு கனவு- சூப்பர் ஜூகல்பந்தி!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X