For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Parole Review: ஆபாச காட்சிகள், கெட்ட வார்த்தைகள்.. ரத்தத்திற்கு நடுவே தாய்ப்பாசம்.. பரோல் விமர்சனம்

  |

  நடிகர்கள்: லிங்கா, ஆர்.எஸ். கார்த்திக்
  இசை: ராஜ்குமார் அமல்
  இயக்கம்: துவாரக் ராஜா

  Rating:
  2.5/5

  சென்னை: காதல் கசக்குதய்யா படத்தை இயக்கிய துவாரக் ராஜா ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு வடசென்னை படத்தை இயக்கி உள்ளார்.

  வடசென்னை என்றாலே ரவுடிசம், ஆபாசம், கெட்ட வார்த்தைகள் தானா? என்கிற கேள்வியை மீண்டும் எழுப்பி இருக்கிறது இந்த பரோல் திரைப்படம்.

  மற்ற இடங்களில் உள்ள வட்டார வழக்கை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்களோ அதே போல வடசென்னை வட்டார வழக்கான கெட்ட வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என சமீபத்தில் வெளியான ப்ரோமோவுக்கே ஏகப்பட்ட எதிர்ப்புகள் உருவான நிலையில், படமாக பரோல் எப்படி இருக்கு என இங்கே விரிவாக பார்ப்போம்..

  காதல் மனைவிக்கு ஆடம்பர பங்களா..தங்க வைர நகைகளை பரிசளித்த கணவர்..நெகிழ்ந்த நடிகை பூர்ணா!காதல் மனைவிக்கு ஆடம்பர பங்களா..தங்க வைர நகைகளை பரிசளித்த கணவர்..நெகிழ்ந்த நடிகை பூர்ணா!

  பரோல் கதை என்ன

  பரோல் கதை என்ன

  அம்மா இறந்து விட அம்மாவுக்கு ரொம்ப பிடித்த சிறையில் இருக்கும் அண்ணன் லிங்காவை எப்படியாவது பரோலில் வெளியே எடுக்க போராடும் தம்பி ஆர்.எஸ். கார்த்திக்கின் முயற்சியும் இருவருக்குள்ளும் இருக்கும் மோதல்கள் தான் இந்த பாரோல் படத்தின் கதை. படத்தின் கிளைமேக்ஸில் நல்ல கருத்தை முன் வைத்திருப்பதற்காக இயக்குநருக்கு நிச்சயம் பாராட்டுக்கள் கிடைக்கும்.

  ரத்தக்கறை

  ரத்தக்கறை

  ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு கேங்ஸ்டர் படம் எடுக்கிறேன் என இயக்குநர் துவாரக் ராஜா இந்த முறை வரிந்து கட்டிக் கொண்டு வடசென்னை பேக்ட்ராப்பில் எடுத்துள்ள படம் தான் இந்த பரோல். டிரைலரிலேயே விஜய்சேதுபதியின் வாய்ஸ் ஓவர் படத்துக்கு பெரிய பிளஸ் ஆக அமைந்தது. ஆனால், நல்ல கருத்தை சொல்ல வந்திருக்கும் இந்த படத்தில் ஏன் இவ்வளவு ரத்தக்கறை காட்சிகள் என்கிற கேள்வி எழுகிறது.

  ஆபாச காட்சிகள்

  ஆபாச காட்சிகள்

  சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருக்கும் போதே ஹீரோ லிங்காவுக்கு சிறு வயதிலேயே பாலியல் தொல்லைகள் கொடுக்கும் காட்சிகள், அதனால் வெறிப்பிடித்தவனாக மாறும் லிங்கா கொலை செய்யும் ஆளாகவும், வளர்ந்து பெரியவனானதும் எப்படி ரவுடியாக மாறுகிறான் என்கிற காட்சிகளை காட்ட ஆபாச காட்சிகளை அதிகளவில் புகுத்தி உள்ளனர். அதே போல கெட்ட வார்த்தைகளும் பல இடங்களில் வருவது படத்திற்கு பலமாக அமையவில்லை.

  நடிப்பு அபாரம்

  நடிப்பு அபாரம்

  லிங்கா மற்றும் ஆர்.எஸ். கார்த்தி இருவருமே அண்ணன் தம்பியாக அப்படியொரு கெமிஸ்ட்ரியில் நடித்துள்ளனர். எவ்வளவு தான் அண்ணன் தப்பு செய்தாலும், அம்மா ஜானகி சுரேஷ் அவனை தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார் என பிளம்பிங் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வரும் ஆர்.எஸ். சுரேஷ் பொறாமைப்படும் காட்சிகள் எல்லாம் தரமான நடிப்பு என்று தான் சொல்ல வேண்டும். ஹீரோயின்களாக வரும் கல்பிகா, மோனிஷா கொஞ்சம் நேரம் வந்தாலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

  பிளஸ்

  பிளஸ்

  அம்மா இறந்த பிறகு சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் அண்ணனை எப்படியாவது வெளியே கொண்டு வந்து இறுதிச் சடங்கை செய்ய வைக்க வேண்டும் என ஆர்.எஸ். கார்த்திக் போராடும் காட்சிகள் படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. இசை, எடிட்டிங், மேக்கிங் என அத்தனையும் ராவான ஒரு கேங்ஸ்டர் படத்தை கண் முன் நிறுத்துகிறது. இயக்குநர் துவாரக் ராஜா கிளைமேக்ஸில் சொன்ன அந்த விஷயத்திற்காக படத்தை தாராளமாக பார்க்கலாம்.

  மைனஸ்

  மைனஸ்

  அதே நேரத்தில் தேவையில்லாத வன்முறை காட்சிகளையும், ஆபாச காட்சிகளையும் அதிக அளவில் வைத்து ரசிகர்களை கவர வேண்டும் என நினைத்த யுக்தி படத்திற்கு பெரிதும் கைகொடுக்கவில்லை. இன்னும் கொஞ்சம் சில இடங்களில் கத்தரி போட்டிருந்தால் படம் மிரட்டலாக வந்திருக்கும். பரோல் - ஒரு முறை!

  English summary
  Parole Movie Review in Tamil (பரோல் விமர்சனம்): Linga and RS Karthick done a great job in Dwarak Raja's Parole movie. This film is based on a Vada Chennai backdrop and using many bloodshed moments.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X