twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாசக் கிளிகள் பாடல்கள் வெளியீடு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படத்தை டிவியில் பார்க்கும்போதெல்லாம் விக்கி அழுது விடுகிறேன் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.இயக்குனர் ராம நாராயணனின் தயாரிப்பில், கருணாநதி கதை, வசனத்தில், அமிர்தம் இயக்க, பிரபு, முரளி, நவ்யா நாயர்,மாளவிகா ஆகியோரின் நிடிப்பில் உருவாகியுள்ள பாசக்கிளிகள் படத்தின் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.முதல் கேசட்டை ஏவி.எம். சரவணன் வெளியிட நடிகர் சத்யராஜ் அதைப் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கருணாநதிபேசுகையில்,டேப் என்ற சொல்லின் தமிழ்ப் பதம்தான் நாடா. ஆனால் நாடா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது நாடா? என்று கேள்விஎழுப்புகிற சொல்லாக இருக்கிறது.ஒரு ஆடையை இறுக்கிக் கட்டுகிற துணிக்கு நாடா என்று பெயர். இதுவும் அந்த வடிவத்தில் இருப்பதால் ஒலி நாடா என்றுசொல்கிறார்கள். ஆனால் இன்று நாம் வருந்தி, நாடா இது? என்று சொல்கிற காலகட்டத்தில் இங்கு அமர்ந்திருக்கிறோம்.60, 65 ஆண்டுகளாக திரைத் துறையில் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். 13 வயதில், பெரியாரின் விரலைப் பிடித்துக்கொண்டு, அண்ணாவின் நிழலில் அரசியலுக்கு வந்தவன் நான். என்னுடன் பழகியவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை.ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட சிலர்தான் இருப்பதாக கருதுகிறேன்.ஒரு காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் என்னுடன் யார் யாரெல்லாம் அமர்ந்திருப்பார்கள். இன்று சிவாஜி நம்முடன் இல்லை.அவரது படங்களை டிவியில் பார்க்கும்போதெல்லாம் விக்கி விக்கி அழுது விடுகிறேன். எத்தனை முறை நான் அழுதிருக்கிறேன்என்று பிரபு, என் வீட்டில் வந்து கேட்டால் சொல்வார்கள்.சத்யராஜ் உள்பட இங்கு பேசியவர்கள், நான் நூறு ஆண்டுகாலம் வாழ வேண்டும் என்றார்கள். இவ்வளவு காலம் வாழ்வதிலே ஒருஇன்பம் இருந்தாலும், துன்பமும் இருக்கிறது. நீண்ட நாள் வாழ்ந்து கொண்டிருப்பதால், எத்தனை பேர் மறைவை நான்பார்த்திருக்கிறேன். எத்தனையோ சோகங்களைப் பார்த்திருக்கிறேன்.எனது குடும்பத்துக்காக நான் வாழவில்லை. ஆறரை கோடி பேர் கொண்ட பெரிய குடும்பத்துக்காகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்றார் கருணாநிதி.நிகழ்ச்சியில், ஆர்.எம்.வீரப்பன், நடிகர்கள் சத்யராஜ், பிரபு, முரளி, வடிவேலு, நடிகைகள் மனோரமா, நவ்யா நாயர்,இசையமைப்பாளர் வித்யாசாகர், கவிஞர்கள் வாலி, வைரமுத்து உள்ளிட்டோரும் பேசினர்.

    By Staff
    |

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படத்தை டிவியில் பார்க்கும்போதெல்லாம் விக்கி அழுது விடுகிறேன் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.

    இயக்குனர் ராம நாராயணனின் தயாரிப்பில், கருணாநதி கதை, வசனத்தில், அமிர்தம் இயக்க, பிரபு, முரளி, நவ்யா நாயர்,மாளவிகா ஆகியோரின் நிடிப்பில் உருவாகியுள்ள பாசக்கிளிகள் படத்தின் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

    முதல் கேசட்டை ஏவி.எம். சரவணன் வெளியிட நடிகர் சத்யராஜ் அதைப் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கருணாநதிபேசுகையில்,


    டேப் என்ற சொல்லின் தமிழ்ப் பதம்தான் நாடா. ஆனால் நாடா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது நாடா? என்று கேள்விஎழுப்புகிற சொல்லாக இருக்கிறது.

    ஒரு ஆடையை இறுக்கிக் கட்டுகிற துணிக்கு நாடா என்று பெயர். இதுவும் அந்த வடிவத்தில் இருப்பதால் ஒலி நாடா என்றுசொல்கிறார்கள். ஆனால் இன்று நாம் வருந்தி, நாடா இது? என்று சொல்கிற காலகட்டத்தில் இங்கு அமர்ந்திருக்கிறோம்.

    60, 65 ஆண்டுகளாக திரைத் துறையில் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். 13 வயதில், பெரியாரின் விரலைப் பிடித்துக்கொண்டு, அண்ணாவின் நிழலில் அரசியலுக்கு வந்தவன் நான். என்னுடன் பழகியவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை.ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட சிலர்தான் இருப்பதாக கருதுகிறேன்.


    ஒரு காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் என்னுடன் யார் யாரெல்லாம் அமர்ந்திருப்பார்கள். இன்று சிவாஜி நம்முடன் இல்லை.அவரது படங்களை டிவியில் பார்க்கும்போதெல்லாம் விக்கி விக்கி அழுது விடுகிறேன். எத்தனை முறை நான் அழுதிருக்கிறேன்என்று பிரபு, என் வீட்டில் வந்து கேட்டால் சொல்வார்கள்.

    சத்யராஜ் உள்பட இங்கு பேசியவர்கள், நான் நூறு ஆண்டுகாலம் வாழ வேண்டும் என்றார்கள். இவ்வளவு காலம் வாழ்வதிலே ஒருஇன்பம் இருந்தாலும், துன்பமும் இருக்கிறது. நீண்ட நாள் வாழ்ந்து கொண்டிருப்பதால், எத்தனை பேர் மறைவை நான்பார்த்திருக்கிறேன். எத்தனையோ சோகங்களைப் பார்த்திருக்கிறேன்.

    எனது குடும்பத்துக்காக நான் வாழவில்லை. ஆறரை கோடி பேர் கொண்ட பெரிய குடும்பத்துக்காகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்றார் கருணாநிதி.

    நிகழ்ச்சியில், ஆர்.எம்.வீரப்பன், நடிகர்கள் சத்யராஜ், பிரபு, முரளி, வடிவேலு, நடிகைகள் மனோரமா, நவ்யா நாயர்,இசையமைப்பாளர் வித்யாசாகர், கவிஞர்கள் வாலி, வைரமுத்து உள்ளிட்டோரும் பேசினர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X