Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பயணிகள் கவனிக்கவும் விமர்சனம்...கவனிக்கப்பட்டதா? காற்றில் விடப்பட்டதா?
நடிகர்கள் : விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமெளலி, கவிதாயலா கிருஷ்ணன்
இசை : ஷாமந்த் நாகின்
இயக்கம் : எஸ்.பி.சக்திவேல்
ரேட்டிங் 3/5
சென்னை : தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு வித்தியாசமான கதை. அதுவும் சோஷியல் மீடியாவால் வரும் பிரச்சனைகளை சொல்கிற மற்றொரு படம். ஆரம்பம் முதலே படத்தில் வரும் பல சீன்கள் பார்ப்பவர்களின் வாழ்க்கையோடு கனெக்ட் ஆகும் வகையில் எடுத்திருக்கிறார்கள்.
Recommended Video
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மற்றும் தவறான தகவலினால் பாதிக்கப்படும் ஒரு குடும்பம் பற்றி பேசும் படம் தான் இந்த "பயணிகள் கவனிக்கவும்". இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் ஏப்ரல் 29 ம் தேதி நேரடியாக வெளியிடப்பட்டுள்ளது.
விஜய்கிட்ட இருந்து இப்படி ஒரு படமா? தளபதி 66 தயாரிப்பாளர் சொன்ன தகவல்... இது நம்ப லிஸ்ட்லயே இல்லயே!

படத்தின் கதை என்ன
துபாயில் வேலை செய்யும் கருணாகரன் லீவுக்கு சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு வருகிறார். மெட்ரோ ரயிலில் கருணாகரன் பயணிக்கும் போது, அதே ரயிலில் படுத்து தூங்கி கொண்டிருக்கும் வாய் பேச முடியாத விதார்த்தை தன்னுடைய மொபைல்போனில் வீடியோ எடுத்து அதை சோஷியல் மீடியாவில் பகிர்கிறார். விதார்த் மது போதையில் தூங்கிக் கொண்டிருப்பதாக பதிவிடுகிறார் கருணாகரன். ஆனால் விதார்த்தின் மகள் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார், அதற்காக அலைந்து திரிந்த களைப்பில் அசதியில் மெட்ரோ ரயில் பயணத்தின் போது தூங்கி இருப்பார் விதார்த்.

அப்புறம் என்ன ஆகும்
விதார்த் பற்றி கருணாகரன் பகிர்ந்த அந்த வீடியோ, டிவியில் செய்தியாக வந்து அதனால் விதார்த்திற்கு வேலை போய் விடுகிறது. விதார்த்தின் குடும்பத்தில் குழப்பம் உண்டாகிறது. இந்த வீடியோவில் உள்ள தவறான தகவல் என விதார்த்தின் வீட்டு ஓனரான ‘கவிதாலயா' கிருஷ்ணனின் மகள், விதார்த்தை போலீசில் புகார் கொடுக்க வைக்கிறார். உண்மையில் என்ன நடந்தது என்பதையும் விளக்குகிறார்.

கடைசியில் என்ன நடக்கும்
லீவுக்காக சென்னை வந்த கருணாகரன் தான் லவ் பண்ணிய பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். விதார்த்திடம் புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ், தவறான வீடியோ பதிவை சோஷியல் மீடியாவில் பதிவிட்ட குற்றவாளியை சைபர் க்ரைம் உதவியுடன் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். இந்த தகவலை செய்திகள் மூலமாக கருணாகரன் அறிந்து கொள்கிறார். தவறாக வீடியோவை பரப்பிய கருணாகரன் போலீசிடம் சிக்குகிறாரா, பாதிக்கப்பட்ட விதார்த்திற்கு நியாயம் கிடைக்கிறதா, அவருக்கு வேலை மற்றும் குடும்பம் திரும்ப கிடைக்கிறதா என்பது தான் படத்தின் மீதி கதை.

சபாஷ் வாங்கிய விதார்த்
இந்த படத்தில் முதல் முறையாக வாய் பேசாத ஒருவராக நடித்து தன்னுடைய சைகையான நடிப்பிலும், உடல்மொழியிலும் அசத்தி உள்ளார் விதார்த். விதாரத்தின் வாய் பேச முடியாத மனைவியாக நடித்துள்ள லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி தன்னுடைய கேரக்டரில் மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கருணாகரனும் புதிய பரிமானத்துடன் ஒரு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை காட்டி உள்ளார்.

கச்சிதமான கேரக்டர் தேர்வு
கருணாகரனின் ஜோடியாக நடித்திருக்கும் மாசும் ஷங்கர், எஸ்.ஐ.,யாக நடித்திருக்கும் பிரேம் குமார், வீட்டின் உரிமையாளராக நடித்திருக்கும் ‘கவிதாலயா' கிருஷ்ணன், மூனார் ரமேஷ் எப்போதும் போல் தங்கள் கேரக்டரை சரியாக செய்துள்ளனர். இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் தேர்ந்தெடுத்துள்ள கதைக்களம் பாராட்டுதலுக்குரியது. திரைக்கதையை சீராக எழுதி நேர்த்தியாக இயக்கியுள்ளார்.

மக்களின் ரேட்டிங் என்ன
நமது வாழ்க்கையோடு ஒன்றாக கலந்து விட்ட சோஷியல் மீடியாவை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும். அதனால் ஏற்படும் பின் விளைவுகளை மிக அழகாக எடுத்துச் சொல்லி உள்ளனர். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம். மக்கள் இந்த படத்திற்கு 5 க்கு 3 என்ற அளவில் ரேட்டிங் கொடுத்துள்ளனர்.