»   »  பிச்சைக்காரன் - விமர்சனம்

பிச்சைக்காரன் - விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: விஜய் ஆன்டனி, சாதனா டைட்டஸ்


ஒளிப்பதிவு: பிரசன்ன குமார்


இசை: விஜய் ஆன்டனி


தயாரிப்பு: ஃபாத்திமா விஜய் ஆன்டனி


இயக்கம்: சசி


தலைப்பில் சென்டிமென்ட் பார்க்கும் கோடம்பாக்கத்தில் முதல் முறையாக அதை உடைத்து, புதிய ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறார் விஜய் ஆன்டனி. தலைப்பில் உள்ள இந்த புதுமை படத்தில் தொடர்கிறதா... பார்க்கலாம்.


கதை...? சொல்ல எளிமையானது. ஆனால் எடுக்க ரொம்பவே சவாலானது. அந்த சவாலை சரியாகவே சமாளித்திருக்கிறார் இயக்குநர் சசியும் அவரது ஹீரோ விஜய் ஆன்டனியும்.


Pichaikkaran Review

கோடீஸ்வரர் மகன் விஜய் ஆன்டனி. அப்பா இல்லை. எல்லாமே அம்மாதான் என்றிருப்பவருக்கு பேரிடியாக ஒரு நாள் அவரது அம்மாவுக்கு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்குப் போய்விடுகிறார். செய்யாத வைத்தியமில்லை.


அப்போதுதான் சாமியார் ஒருவர் 'அம்மா சரியாக வேண்டுமென்றால், நீ 48 நாட்கள் பிச்சைக்காரனாக வாழ வேண்டும். உன் அடையாளம் தெரியக்கூடாது,' என்று கூற, அதை ஏற்று பிச்சைக்காரனாகிறார் விஜய் ஆன்டனி.


Pichaikkaran Review

இதில் அவர் சந்திக்கிற பிரச்சினைகள், அவற்றைச் சமாளித்து அம்மாவுக்காக ஒரு மண்டல பிச்சைக்கார விரதத்தை எப்படி நிறைவேற்றுகிறார் என்பது மீதி.


மேலோட்டமாகப் பார்த்தால் லக்கிமேன் டைப் கதைதான். ஆனால் இந்தக் கதைக்கு இயக்குநர் சசி கொடுத்திருக்கும் ட்ரீட்மென்ட் பாக்யராஜின் புத்திசாலித்தனத்துக்கு இணையானது.


Pichaikkaran Review

விஜய் ஆன்டனி நடிப்பில் படத்துக்குப் படம் பக்குவம் கூடுகிறது. இந்தப் படத்தில் அம்மாவுக்கு பாசமான மகனாக, கோடீஸ்வர இளைஞனாக, ஒரு அசல் பிச்சைக்காரனாக... வாழ்ந்து காட்டியிருக்கிறார். இதுவரை அவரது நடிப்பில் வந்த படங்களில் பிச்சைக்காரனுக்கு சந்தேகமில்லாமல் முதலிடம் தரலாம்.


அழகு நடிப்பு இரண்டிலுமே குறை சொல்லமுடியாத நாயகி சாதனா டைடஸ்.


Pichaikkaran Review

அம்மாவாக நடித்திருக்கும் தீபாவும், பெரியப்பாவாக வரும் முத்துராமனும் ஏற்ற வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். பகவதி பெருமாள், மூர்த்தி ஆகியோர் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறார்கள்.


ஆரம்ப காட்சிகளில் ரொம்பவே ஆமை வேகம். விஜய் ஆன்டனியின் உபதேசங்கள், சாமியார் சொல்லும் பரிகாரக் காட்சிகள் எல்லாம் படத்தை வஞ்சிக் கோட்டை வாலிபன் காலத்துக்கு கொண்டுபோவது போன்ற பிரமை.


Pichaikkaran Review

படத்தின் முக்கிய ப்ளஸ் சசியின் வசனங்கள். 'ஏந்தற கைக்கு, ஓங்கற பழக்கம் வராது' ஒரு பருக்கைப் பதம்.


பிரசன்னாவின் ஒளிப்பதிவும் விஜய் ஆன்டனியின் பின்னணி இசையும் படத்துக்கு கூடுதல் பலங்கள்.


பெயரில்தான் பிச்சைக்காரன். தரத்தில் கோடீஸ்வரனாக இல்லாவிட்டாலும் லட்சாதிபதியாக நிறைக்கிறான்!

English summary
Vijay Antony's latest out Pichaikkaran is impressing viewers with intelligent screenplay and meaningful dialogue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil