For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  “பொன்மகள் வந்தாள்“ வெண்பாவாக சுடர் விட்டு பிரகாசிக்கிறார் ஜோதிகா!

  |

  Rating:
  3.5/5
  Star Cast: ஜோதிகா, கே பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் கே போத்தன், பார்த்திபன்
  Director: ஜே.ஜே. ஃப்ரெட்ரிக்

  சென்னை : சந்தோஷமாக துள்ளி குதித்து விளையாடும் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் நடக்கும் கொடூரங்கள். ஒரு பெண்ணோட மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சை கண்டுபிடிக்க, போராடும் ஒரு பெண் வழக்கறிஞரின் கதையே 'பொன்மகள் வந்தாள். அரக்கன்களாக வரும் பணக்கார வீட்டு பாவிகள் .

  நீலகிரி மாவட்டத்தில் 10 வயதுக் குழந்தையை ஜோதி என்கிற ஒரு பெண் துப்பாக்கி முனையில் கடத்திவிட்டதாக சொல்லப்பட்டு கதையில் முதல் முடிச்சு ஆரம்பம் ஆகிறது . இதற்கு பின்னணியில் என்ன நடந்தது யார் அந்த குழந்தையை கடத்தினார்கள், எதற்கு இந்த கடத்தல். இது கடத்தல் தானா என்பது தான் மீதி கதை.

  Ponmagal vandhal Movie Review

  பல ஆண்டுகள் நம் நாட்டில் நடந்த நிர்பயா வழக்கு கடைசியில் ஒரு நாள் தீர்ப்பு வழங்கப்பட்டது. அது போல பல வழக்குகள் இன்னும் தீர்ப்பு வழங்காமல் இன்னும் கிடப்பில் கிடக்கிறது என்பது தான் உண்மை. இந்த படத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த ஒரு கடத்தல் மற்றும் கொலை சம்பந்தப்பட்ட வழக்கை ஜோதிகா கையில் எடுக்கிறாள்.

  Ponmagal vandhal Movie Review

  வாதாட ஆரம்பிக்கும் ஒவ்வொரு காட்சியிலும் உணர்ச்சிகள் கொந்தளிக்க பேசுகிறார், பொதுவாகவே கோர்ட் காட்சிகள் என்று வந்து விட்டால் தமிழ் சினிமா பல விதத்தில் பல படங்களில் பல காட்சிகளில் வாதாடி உள்ளதை நாம் கண்டு இருக்கிறோம். ஆனால் சுவாரஸ்யம் என்பது காட்சி புரிய வைக்கும் வழக்கை பொறுத்ததே. அதை நன்கு புரிந்து கொண்டு இயக்குனர் கோர்ட் சீன்ஸ் எல்லாவற்றிலும் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார்.

  Ponmagal vandhal Movie Review

  சில ஹாலிவுட் படங்களை நமக்கு ஞாபகப்படுத்தினாலும், அவற்றின் சாயல் பெரிதும் இல்லாமல் படத்தை படு மாஸ்ஸாக அதிரடியாக எடுத்துள்ள இயக்குனர் ப்ரட்ரிக் பெரிய கைதட்டல்கள் கொடுக்கலாம். இந்த படத்திற்கு கதாநாயகன் இல்லை, ஆட்டம் பாட்டம் இல்லை ஆனால் விறுவிறுப்புக்கு குறையும் இல்லை என்பது தான் தனி சிறப்பு.

  Ponmagal vandhal Movie Review

  தந்தையின் பண பலம், மகன் காமுகன் என்பதை நாம் பல முறை பல சினிமாவில் பார்த்து இருந்தாலும் கதையின் அழுத்தம் , காட்சி அமைப்பு நம்மை ரசிக்க வைக்கிறது. வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வரும் ஜோதிகா மிகவும் பண்பா நடந்து கொள்கிறார். பல இடங்களில் அழுகையும் சோகமும் பல பெண்களை உறைய வைக்கும் . வெறும் நடிப்பாக தெரியாமல் கதாபாத்திரமாக மாறி தன் அனுபவத்தின் முதிர்ச்சியை செம்மை படுத்தி இருக்கிறார் ஜோதிகா.

  Ponmagal vandhal Movie Review

  பாக்யராஜ் , பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன் , வினோதினி, பிரதாப் போத்தன் என்று ஒரு மிக பெரிய நடிப்பு பட்டாளமே இருந்தாலும் ஜோதிகா தனித்துவமாக மின்னுகிறார். இப்படி பட்ட கதையை தேர்ந்து எடுத்து பல சவால்களை மேற்கொண்டு , பெண்களுக்காக வாதாடி பெண்கள் மனதில் மிகவும் இடம் பிடிக்கிறார் ஜோ.

  Ponmagal vandhal Movie Review

  ராம்ஜி ஒளிப்பதிவு, எடிட்டர் ரூபன் அவர்களது வேலையை கனகச்சிதமாக முடித்து உள்ளனர். படத்தில் வரும் பி.ஜி.எம் மிக அழகு , மிகவும் நேர்த்தியாக செய்து உள்ளார் கோவிந்த் வசந்தா. அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி பார்க்கும் செய்திகள் , பிஞ்சு குழந்தைகளுக்கு ஏற்படும் அவல நிலை அனைத்தையும் வேதனையின் உட்சத்தோடு , அற்புதமாக திரைக்கதை அமைத்து ஒரு நல்ல டீம் ஒர்க் என்று பெயர் வாங்குகிறது பொன் மகள் வந்தாள் .

  Ponmagal vandhal Movie Review

  பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோரும் பார்க்க வேண்டிய படம் , (need of the society ) என்று சொல்வது போல எல்லா தரப்பினரையும் திருப்தி படுத்தியுள்ளது. கதையின் ஓட்டத்தில் அடுத்த அடுத்த காட்சிகளை கொஞ்சம் யூகிக்க முடிகிறது என்பது தான் படத்தின் கொஞ்சம் மைனஸ்

  தரமான படம்.. எமோஷனல்.. த்ரில்லிங்.. ட்விஸ்ட் எல்லாமே இருக்கு.. பொன்மகள் வந்தாள் டிவிட்டர் ரிவ்யூஸ்!தரமான படம்.. எமோஷனல்.. த்ரில்லிங்.. ட்விஸ்ட் எல்லாமே இருக்கு.. பொன்மகள் வந்தாள் டிவிட்டர் ரிவ்யூஸ்!

  ஜோதிகாவின் அப்பாவாக வரும் பாக்யராஜ் பல காட்சிகளில் மனதை நெகிழ வைக்கிறார். பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் இடையே நடக்கும் நக்கல் கலந்த வம்பு சண்டை சிரிக்க வைக்கிறது. இந்த வழக்கை ஏன் இத்தனை வருடங்கள் கழித்து ஜோதிகா கையில் எடுத்தார் ? இதன் பின்னணி என்ன ? இவருக்கும் இந்த வழக்கிற்கும் என்ன சம்பந்தம் என்பது தான் படத்தின் பலம்.

  Ponmagal vandhal Movie Review

  செம்மலர் அன்னம் படத்தில் சில காட்சிகளே வந்தாலும் , நெஞ்சை உருக்கும் காட்சிகள் அவருக்கு. கிடைத்த வாய்ப்பை மிகவும் அற்புதமாக செய்து மிரட்டி இருக்கிறார்.

  Ponmagal vandhal Movie Review

  Surya & Jothika Live together • Injury • Ponmagal Vandhal • Soorarai Pottru

  நீதியை நிலை நாட்ட , பெண் குழந்தைகளின் பிரச்சனைகள் தீர்க்க போராடுகிறாள் வெண்பா . நீதி கிடைத்ததா ? வெண்பா வென்றாளா என்பதை அமேசான் இணையதளத்தில் தான் பார்க்க வேண்டும். கண்டிப்பாக நிறைய பெற்றோர்கள் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம் தான் பொன்மகள் வந்தாள் .

  English summary
  Ponmagal vandhal Movie Review
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X