»   »  பாட்டு எப்படி?

பாட்டு எப்படி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய், சிம்ரன் நடிப்பில் பிரியமானவேள. குஷி பாடல் வெற்றிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது. பாடல்களும்ஏமாற்றவில்லை.

பாடல்களை வாலி எழுதியிருக்கிறார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் 7 பாட்டுகள். அத்தனையும், ரசிகர்களின் நாடித் துடிப்புக்கேற்ப. அப்படி ஒரு வெரைட்டிபாடல்களில்.

விஜய் மீண்டும் பாடியிருக்கிறார். அவரும் அனுராதா ஸ்ரீராமும் சேர்ந்து "மிஸிஸிபி நதி குலுங்க .. என்று பாடியிருக்கிறார்கள். டக்கரு டக்கருதான் போன்றநல்ல இலக்கிய வார்த்தைகளும் இருக்கிறது. இந்த ட்யூன் இளசுகளைஆட வைக்கும். ஹிட் பாட்டாகலாம்.

டேக் இட் ஈஸ் பாலிசி டைப்பில் "வெல்கம் பாய்ஸ் வெல்கம் கேர்ள்ஸ் .. சுக்வீந்தர் சிங் பாடியிருக்கிறார். கனீர் குரலில் இந்த பஞ்சாபி இளைஞர்ரொம்பவே நன்றாகவே பாடுகிறார். தமிழ் தான் இவரது நாக்கில் நுழைய மறுக்கிறது. ஆனாலும் பாடும் விதத்தில் வித்தியாசத்தைக்காட்டுவதால் இந்தத் தவறை சிரித்துக் கொண்டே மன்னித்துவிடத் தோன்றுகிறது.

பாட்டுக்களில் நல்ல வார்த்தைகள் தர மறுத்த வாலி தான் ஆனந்த விகடனில் பாண்டவர் பூமியில் வரிக்கு வரி கலக்கினார். இந்த விகடன் வாலி மீண்டும்வார்த்தை தூரலில் நனைய வைக்கிறார்.

மெலடியும் உண்டு. "என்னவோ என்னவோ .. நிச்சயம் மனதுக்குள் என்னவோ செய்யும் - சம்பந்தப்பட்டவர்களுக்கு!.

ஹரிகரன், ஹரினி பாடியிருக்கிறார்கள். படத்தின் தலைப்பும் இதிலேயே வந்து விடுகிறது (அப்பாடா!).

"எனக்கொரு ஸ்நேகிதி .. இதுவும் ஒரு இன்ஸ்டன்ட் ஹிட் பாட்டு. ஹரிகரன் உருகியிருக்கிறார். குரலில் தெரியும் பாவம் ரசிக்க வைக்கிறது. துணைக்குமகாலட்சுமி.

ஒரு அடிதடி, அட்டகாச பாட்டும் உண்டு. அப்படி ஒரு ஃப்ரீக் பாட்டில். "ஜூன் ஜுலை மாதத்தில் .. சங்கர் மகாதேவன், ஹரிணி அன்ட் கோபாடியிருக்கிறார்கள். பசங்க, பொண்ணுங்களுக்கு டான்ஸுக்கு ஒரு பாடல் கிடைச்சாச்சு. அப்படி ஒரு வேகம் பாட்டில். நல்லா இருக்கு.

பிறகு, இரண்டு பாடல்கள் இருக்கிறது. உன்னிகிருஷ்ணன் பாடிய "அழகே அழகே, சித்ரா பாடிய "ஆயுளின் அந்திவரை. இரண்டுமே கொஞ்சம் போர்அடிக்கும். இந்தப் பாடல்களின்போது ரசிகர்களை நிச்சயம் தியேட்டர் கேண்டீனில் பார்க்கலாம். டேப் ரெக்கார்டர் என்றால், பார்ஸ்ட் பார்வர்ட்பட்டனுக்கு வேலை தரலாம்.

பிரியமானவளே - பல மலர்கள் சேர்ந்த ஒரு பூவாளி மாதிரி இருக்கிறது.

தெனாலி ..கண்ணுக்கு கண்ணாக ...

சீனு ... வானவில் ...

வண்ணத் தமிழ் பாட்டு...சினேகிதியே ...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil