Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பெரும் சர்ச்சைகளுக்கு இடையே ரிலீஸ் ஆன புஷ்பா படம் எப்படி? அமீரகத்தில் இருந்து வந்த முதல் ரிவ்வியூ!
சென்னை: அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் எப்படி உள்ளது என்பது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து முதல் ரிவ்வியூ வெளியாகியுள்ளது.
Recommended Video
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மரக் கடத்தலை மைய்யப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் புஷ்பா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.
புஷ்பா படத்தின் “ஓ சொல்றியா மாமா” பாடலை தடை செய்ய வேண்டும்.. ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வார்னிங்!

சமந்தா நடனம்
இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜூன் லாரி டிரைவராக நடிக்கிறார். இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இரண்டாவது சிங்கிள் பாடல்
புஷ்பா படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியானது. தெலுங்கில் ஊ அண்டவா மாவா... ஊஊ அண்டவா மாவா என்றும் தமிழில் ஊ சொல்றியா மாவா... ஊஊ சொல்றியா மாவா என்றும் இப்பாடல் வெளியானது.

பாடலுக்கு கண்டனம்
இதேபோல் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. இதில் ஆண்களின் புத்தி அலையிற புத்தி என்பதை போன்ற வரிகள் இடம்பெற்றதால் இப்பாடலுக்கும் கடும் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்தது.

கர்நாடகாவிலும் எதிர்ப்பு
ஆந்திராவில் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் இந்த பாடலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இதேபோல் தமிழிலும் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகத்திலும் புஷ்பா பாடலுக்கு எதிர்ப்பு எழுந்தது. இதனால் புஷ்பா படத்தை அங்கு ரிலீஸ் செய்யக்கூடாது என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

அமீரகத்தில் இருந்து ரிவ்வியூ
இந்நிலையில் புஷ்பா படத்தின் முதல் பாகமான புஷ்பா தி ரைஸ் திரைப்படம் இன்று உலகம் முழுக்க ரிலீஸ் ஆகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புஷ்பா படத்தின் முதல் ரிவ்வியூ வெளியாகியுள்ளது.

ரேஸி... அன்ட் டெர்ரிஃபிக்...
அதாவது, வெளிநாட்டு தணிக்கை வாரிய உறுப்பினர் உமைர் சந்து, புஷ்பாவின் முதல் பாதியின் விமர்சனத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, புஷ்பா படத்தின் முதல் பாதி Racy Terrific... என்று பதிவிட்டுள்ளார். சில மணிநேரங்களுக்குப் பிறகு, சென்சார் போர்டில் புஷ்பாவின் திரையிடலை முடித்துவிட்டதாகவும், விரைவில் தனது முழு விமர்சனத்தையும் வெளியிடுவதாகவும் பதிவிட்டுள்ளார்.

படம் பிரம்மாதம்..
அவரது விமர்சனத்தின் படி புஷ்பா படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும் பிரமாதமாகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சுகுமாரும், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் பங்கேற்கவில்லை. அவர்கள் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருந்ததால் ப்ரீ ரிலீஸில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.