twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'Puzhu' movie Review: மம்முட்டியின் ’புழு’ எப்படி இருக்கு...இதுவரை நடிக்காத நெகட்டிவ் ரோலில் அசத்தல்

    |

    Rating:
    2.5/5

    நடிகர்கள் : மம்முட்டி, பார்வதி திருவோத்து, நெடுமுடி வேணு

    இயக்கம் : ரதீனா

    தயாரிப்பு : எஸ்.ஜார்ஜ்

    இசை : ஜேக்ஸ் பிஜோய்

    ரேட்டிங் : 2.5 / 5

    சென்னை : மலையாளத்தில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று மம்முட்டி நடித்துள்ள புழு. படத்தின் வித்தியாசமான டைட்டிலே படத்தின் மீதான ஆர்வத்தை அனைவரிடத்திலும் அதிகரிக்க செய்தது.

    அறிமுக இயக்குனரான ரதீனா இயக்கி உள்ள இந்த படம் நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது. சோனி லைவ் சேனலில் மே 13 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 115 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு, பிறகு இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது.

    கோலிவுட் 'டான்' சிவகார்த்திகேயன்… தயாரிப்பாளர்களின் பேவரைட் ஹீரோவும் இவர் தான்!கோலிவுட் 'டான்' சிவகார்த்திகேயன்… தயாரிப்பாளர்களின் பேவரைட் ஹீரோவும் இவர் தான்!

    இது தான் படத்தின் கதை

    இது தான் படத்தின் கதை

    போலீஸ் அதிகாரியான குட்டன் கேரக்டரில் நடித்துள்ள மம்முட்டியை சுற்றியே கதை நகர்கிறது. மனைவியை இழந்த குட்டன் தனது மகன் கிச்சாவுடன் அப்பார்ட்மென்ட்டில் தனியாக வசித்து வருகிறார். மகனை ஒழுக்கம், கண்டிப்புடன் வளர்க்கிறார் குட்டன். ஆனால் அதை பிடிக்காத கிச்சா, தனது அப்பா சாக வேண்டும் என நினைக்கிறான். தன்னை யாரோ கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள் என்பதை உணரும் குட்டன், பார்க்கும் அத்தனை பேரையும் சந்தேகப்படுகிறார். தன்னை கொல்ல முயற்சி செய்யும் மர்ம நபரை கண்டுபிடிக்க பல முயற்சிகள் செய்கிறார்.

    கடைசியில் என்ன நடக்கும்

    கடைசியில் என்ன நடக்கும்

    குட்டனின் தங்கை பாரதி (பார்வதி). இளம் விதவையான இவள், நாடக நடிகரான தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவரை காதலித்து, வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறாள். பலரும் வாடகைக்கு வீடு மறுத்ததால் வேறு வழியில்லாமல் தனது நண்பர்கள் மூலம், அண்ணன் குட்டன் குடியிருக்கும் அப்பார்ட்மென்டிற்கே தற்காலிகமாக தங்க வருகிறார்.அண்ணன் - தங்கை மறுபடி ஒன்று சேர்கிறார்களா, குட்டன் தன்னை கொல்ல வந்தவர்களை கண்டுபிடிக்கிறாரா, எப்படி கண்டுபிடிக்கிறார், அவர்களிடம் இருந்து தப்பிக்கிறாரா என்பது தான் படத்தின் மீதி கதை.

    படத்தின் பிளஸ் என்ன

    படத்தின் பிளஸ் என்ன

    ரொம்ப சிம்பிளான கதை. அதை வித்தியாசமாக சொல்ல முயற்சித்துள்ளார் டைரக்டர். படத்தின் பிளஸ் என்று பார்த்தால் வழக்கம் போல் மம்முட்டி, பார்வதி ஆகியோர் நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள். பார்வதி சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், அழுத்தமான நடிப்பை, மிக இயல்பாக, அழகாக வெளிப்படுத்தி உள்ளார். ஜேக்ஸ் பிஜோயின் மிரட்டலான பின்னணி இசை படத்தை செம த்ரில்லிங்காக கொண்டு சென்றுள்ளது. கடைசி வரை மம்முட்டியை கொலை செய்ய முயற்சிப்பது யார் என கண்டுபிடிக்க முடியாத வகையில் படத்தை கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரியது. மம்முட்டி - அவரது மகன் இடையேயான உறவு பார்க்க மிக அழகாக உள்ளது.

    இப்படியும் படம் எடுக்கலாம்

    இப்படியும் படம் எடுக்கலாம்

    ஹீரோவின் மாஸ் என்ட்ரி, பாடல், சண்டை காட்சிகள், வில்லத்தனம் என எதுவும் இல்லாமல் சிம்பிளான கதையை வைத்தும், த்ரில்லிங்காக ஒரு படத்தை எடுக்க முடியும் என காட்டி உள்ள டைரக்டரை பாராட்டியே தீர வேண்டும். படத்தில் எதையோ சொல்ல வந்து, ஆனால் வேறு ஒன்றை சொல்லி கதையை சட்டென்று முடித்து விட்ட உணர்வு அனைவருக்குள்ளும் ஏற்படுத்துகிறது. மம்முட்டியின் மகனான நடித்துள்ள சிறுவனின் அப்பாவித்தனமான நடிப்பு தத்ரூபமாக உள்ளது.

    ஒரே வரியில் கதை

    ஒரே வரியில் கதை

    மைனஸ் என்றால், மிக ஸ்லோவான திரைக்கதை. ஆரம்ப 30 நிமிடங்கள் என நடக்கிறது, என்ன சொல்ல வருகிறார்கள் என புரியாமல் ஜவ்வாக இழுத்து செல்கிறார்கள். இன்டர்வெல் வரை போரடிக்க வைத்து பிறகு சுவாரஸ்யமாக திரைக்கதையை நகர்த்தி உள்ளனர். ஒரே வரியில் சொல்லப் போனால் போலீஸ்காரரை கொலை செய்ய நடக்கும் முயற்சி த்ரில்லிங் ஒரு பக்கம், சாதி உணர்வு மறுபக்கம். இந்த இரண்டையும் சம அளவில் கொண்டு செல்வது தான் ஒட்டுமொத்த படமே.பார்வதியின் நடிப்பை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம்.

    இதெல்லாம் ரொம்ப ஓவர்

    இதெல்லாம் ரொம்ப ஓவர்

    சந்தேகத்தின் பேரில் விசாரிக்க வந்த மம்முட்டி எதிரிலேயே, விசாரித்ததற்காக கழுத்தை அறுத்துக் கொண்டு சாவது, கண் எதிரே ஒருவர் கழுத்தை அறுத்துக் கொள்வதை பார்த்தும் மிக சாதாரணமாக ரியாக்ட் செய்து விட்டு, அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் இங்கும் அங்கும் மம்முட்டி நடப்பது எல்லாம் நம்பும்படியாக இல்லை. தன்னுடைய ஆக்சிஜன் மாஸ்கில் விஷம் கலந்திருப்பதாக வந்த சந்தேகத்திற்காக நாய்க்கு அதை மாட்டி விட்டு செக் செய்வது எல்லாம் ரொம்பவே ஓவர்.

    புழுவுக்கு என்ன ரேட்டிங்

    புழுவுக்கு என்ன ரேட்டிங்

    யாரும் எதிர்பாராத ஒரு க்ளைமாக்சை வைத்து செகண்ட் ஆஃபில் ஸ்கோர் செய்து விட்டார் டைரக்டர். ஸ்லோவான திரைக்கதை போரடிக்க வைத்தாலும், மம்முட்டி - பார்வதியின் நடிப்பிற்காக புழு படத்தை ஒரு முறை பார்க்கலாம். சராசரிக்கும் கீழ் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது. இந்த படத்திற்கு மக்கள் 5 க்கு 2.5 என்றே ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள்.

    English summary
    Mammooty, Parvathy starred Puzhu released May 13th on SonyLIV. This film had a dead slow paced screenplay. But has carried a mystrey factor throughtout. BGM and casting is looking good. Mammooty steers an absorbing tale of the haunted and the hunted.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X