For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ராஜாவுக்கு செக், ஆடியன்ஸ் அடிக்கலாம் டபுள் டிக்.

  |

  Rating:
  3.5/5
  Star Cast: சேரன், சிருஷ்டி டாங்கே, சரயு, இர்பான்
  Director: சாய் ராஜ்குமார்

  பிக் பாஸ் சென்று நல்ல பெயருடன் திரும்பிய சேரனுக்கு ராஜாவுக்கு செக் படமும் நல்ல கம்பேக்கை கொடுத்து உள்ளது .மேலும் நீண்ட நாட்களுக்கு பின் கனா கானும் காலங்கள் இர்ஃபானும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து இருக்கிறார் .

  சேரனும் அவரது மனைவியும் குடும்ப சூழ்நிலை, கருத்து வேறுபாடு என்று பிரிந்து வாழ்கின்றனர். பல வருடங்களாக கோர்ட்டில் கேஸ் நடந்து வருகிறது தன் ஒரே மகள் அப்பாவை எப்போதாவது சந்திப்பால். வெளிநாடு செல்ல தயாராகும் தன் ஒரே மகளை பத்து நாள் கிட்ட வெச்சு பாத்துக்கணும் என்று ஆசை படும் தந்தை . இப்படி தான் முதல் பாதி ஆரம்பமாகிறது .

  Rajavukku check is a suspense thriller and mind game

  சேரன் ஒரு போலீஸ் அதிகாரியாக வருகிறார்.அவர் தூக்கம் சரியாக இல்லாமல் இருந்து வருகிறார். தூக்கம் இல்லாத காரணத்தால் , தன் நிலை மறந்து பல இடங்களில் அய்ர்ந்து தூங்கி விடுகிறார் . உடல் ரீதியாக பெரிய பிரச்சனையாக அது மாறுகிறது . ஒரு கட்டத்தில் அவர் நான்கு பேரை கைது செய்கிறார்,ஒரு பெண்னை கடத்தி விடுகின்றனர் அதற்காக கைது செய்ய படுகிறார்கள். பணக்கார வீட்டு பசங்க என்பதால் சாமர்த்தியமாக கையாள்கிறார் சேரன் .

  ஒரு வருடம் சிறை வாசம் அனுபவிக்கிறார்கள். அவர்கள் நான்கு பேரும் அவரை பழிவாங்க துடிக்கின்றனர். சேரன் மகளை அவளது பிறந்த நாள் அன்று கடத்துகிறார்கள் . கடத்தி அவளை துன்புறுத்துகிறார்கள். கடைசியில் சேரன் மகளை கண்டு பிடித்தாரா இல்லையா என்பதை விறு விறுப்பாக பல டிவிஸ்ட்களுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சாய் ராஜ்குமார்.

  Rajavukku check is a suspense thriller and mind game

  ராஜாவுக்கு செக் என்றால் சதுரங்க ஆட்டத்தில் ராஜாவுக்கு செக் வைத்து விட்டால் எப்படி ராஜா மாட்டிக்கொள்வாரோ அப்படி சேரனும் படத்தில் பல விஷயங்களில் மாட்டி தவித்து பின் எப்படி எழுந்து வருகிறார் என்பதே திரைக்கதை .

  Rajavukku check is a suspense thriller and mind game

  சேரனின் நடிப்பு அற்புதம் ஒரு அப்பாவாக பிரமாதமாக நடித்து உள்ளார். கிளைமாக்ஸில் சொல்ல பட்ட விஷயம் இந்த படத்திற்கு என்ன தேவையோ அதனை தெரிவித்து இருக்கிறது. திரைக்கதை படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. பல டிவிஸ்ட் அண்ட் டெர்ன் அதிகமாக உள்ளது.

  இன்றைய இனைய வளர்ச்சியில் இனையம் மூலம் காதலித்து பெண்களை கடத்தி பல தவறுகளில் ஈடுபடும் கும்பளை கதை மைய்யப்புள்ளியாக ஒரு பக்கம் வைத்து இருக்கிறது . தனது மகளை மீட்டாரா என்பதை சீட்டின் நுனிக்கு ரசிகர்களை வரவைத்து கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சாய் ராஜ் குமார்.

  Rajavukku check is a suspense thriller and mind game

  படத்திற்கு மிக பெரிய பலம் பின்னணி இசை தான் ஒவ்வொரு காட்சியையும் தாங்கி பிடித்து கொண்டு செல்கிறது. ஒரு படத்திற்கு இசை எங்கு தேவை எங்கு தேவையில்லை என்று புரிந்துகொண்டு மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் வினோத் எஜமானியா . இவர் தமிழுக்கு புது வரவு என்றாலும் அட்டகாசம் செய்திருக்கிறார்.

  Rajavukku check is a suspense thriller and mind game

  ஒரு சிறிய பட்ஜெட்டில் இப்படி ஒரு படம் எடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். சுவாரசியமான திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்தது.யார் என்னவென்று தெரியாமல் இனையதள காதல் போன்ற பிரச்சினைகளையும் , பிரிந்து வாழும் தாய் தந்தையின் குழந்தைகள் பற்றி தோல் உறிக்கிறது இப்படம்.

  சேரன் சொந்த வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் படத்தில் எங்கோ ஒரு இடத்தில் ஒத்து போகிறது. படத்தின் மைனஸ் என்று சொன்னால் ரொம்ப சினிமாதனமாக சில காட்சிகள் இருந்தது, போலீஸ் நண்பர்களாக வந்த நான்கு பேர் இன்னும் கொஞ்சம் மிரட்டி இருக்க வேண்டும் , ஏதோ பல இடங்களில் ஒட்டவில்லை. திரைக்கதை வைத்து படத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

  30 வருஷத்துக்கு முன்னால முதல் டேட்டிங்... 5 முறையாக பமீலா கல்யாணம்... 74 வயது தயாரிப்பாளர் ஹேப்பி

  சேரனுக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல மெசேஜ் உடன் வந்த படம்.

  அப்பா ஒரு மகளை எப்படி பார்த்து கொள்ள வேண்டும். பெண்னை பெற்ற ஒவ்வொரு அப்பாவும் பார்க்க வேண்டிய படம்.படத்தின் ஓட்டத்திற்கு பெரிய தூண் என்றால் அது பின்னனி இசை தான் . இவ்வளவு சிறிய பட்ஜட்டில் இவ்வளவு நல்ல படம் என்று கூற வைக்கும் அளவுக்கு அந்த பின்னனி இசை இருந்ததே காரணம் .

  ஸ்ருஷ்டி டாங்கே சில காட்சிகள் மட்டுமே நடித்திருந்தாலும் படத்திற்கு மிக முக்கியமான காட்சிகள். பெண்ணுடைய அழகு எப்போதும் அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் பிரச்சனை கொடுக்கிறது என்பது போன்ற கதாபாத்திரம். புரிந்து கொண்டு மிக நேர்த்தியாக நடித்து இருக்கிறார் .

  இர்ஃபானுக்கு இனி நிறைய படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் , அந்த அளவுக்கு கொடூரமான , கெட்ட எண்ணங்கள் பிடித்த ஒருவனது முக பாவங்களை கொடுப்பதில் மிகவும் பொருந்தி இருக்கிறார் . படத்தில் சேரனும் செறி வில்லன்களும் செறி அடிக்கடி குடிப்பதும் , தம் அடிப்பதும் கொஞ்சம் ஓவராக காட்ட பட்டது தான்

  சலிப்பு தட்டுகிறது. அதை தவிர்த்து இருந்தால் இன்னும் இது நல்ல படம் .

  மொத்தத்தில் ராஜாவுக்கு செக் அடுத்தடுத்து ரசிகர்களை சீட்டின் நுனிக்கு எடுத்து வந்து ராஜாவுக்கு செக் வைத்து அந்த செக்கை ராஜா எப்படி முறியடித்தார் என்பதை மிக சுவாரஸ்யமாக கூறியுள்ள படம்,சில பல பிரச்சனைகள் படத்தில் இருந்தாலும் திரைக்கதை படத்தை காப்பாற்றி விட்டது என்றே சொல்லலாம். கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படமாக தான் கருத படுகிறது .

  ராஜாவுக்கு செக் , தயாரிப்பாளருக்கு செக் மட்டும் வைக்காமல் கேஷ்ஷும் நிறைய கலெக்ஷன் ஆகும் என்று நம்புவோம் .

  English summary
  Rajaavukku check is a movie directed by sairajkumar and he has done a good screenplay with minimum budget . Strength of the movie is its music and bgm give by vinod yejamanya who is fresh to tamil industry. its a note worthy film and must watch in theaters . apart from few logical mistakes its a complete entertainment with human emotions and tensions of an common man.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X