»   »  பட விமர்சனம்

பட விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கண்களில் நீர் குளமிட சுபமாக முடித்து வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.

கிரேஸி மோகன் வசனம், எஸ்.வி.சேகர் நடிப்பு என்பதால் நாடகம் பார்க்கும் உணர்வு தான் மிஞ்சுகிறது. அதிலும் கிரேசி மோகனுக்கு ஜோடிமனோரமா என்பது சகிக்க முடியவில்லை. ஆச்சியின் ஓவர் ஆக்ட் தாங்க முடியவில்லை.

வெண்ணிறை ஆடை போலிச் சாமியாராக வந்து கலர், கலராக பவுடர் அடித்து கலக்கியிருக்கிறார். வழக்கம் போல பல சத்தங்கள் எழுப்பி வாய் மூலம்நடித்திருக்கிறார்.

விசு கட்டப் பஞ்சாயத்துத் தலைவராக வருகிறார். (பவுடரை கொஞ்சம் ஓவரா தெளிச்சிட்டாங்க போல, முகத்தில் பொங்கலுக்கு வெள்ளையடித்தது மாதிரிஒரு செயற்கையான உஜாலா பளபளப்பு!). தனது வழக்கமான பாணியில் பேசிப்பேசியே பிரச்சினைகளைத் தீர்க்கிறார்.

ஊர்வசியின் நடிப்புதான் படத்தில் ஹை-லட். படத்தில் இவர் மட்டுமே இயல்பாக நடித்திருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் காட்டுக் கத்தல்கத்துகிறார்கள். மாமியாரையும், நாத்தனாரையும் கையில் கரண்டியுடன் ஊர்வசி வாங்கு வாங்கு என வாங்கும்போது தியேட்டரே கலகலக்கிறது.

விசுவின் ஆஸ்தான நடிகர் திலீப்பும் படத்தில் இருக்கிறார். வழக்கம்போல தமிழ் பேச்சி கொல்கிறார். ஆனால் அவர் எதற்காக படத்தில்இருக்கிறார் என்று தான் தெரியவில்லை. விசுவுக்கும் இந்த சந்தேகம் வந்து விட்டதோ என்னவோ அவரதுமெதுவாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

விசு நாடகங்களில் (படங்களில்) வழக்கமாக குடும்பத் தலைவரின் அப்பாவோ அல்லது மாமாவோ அல்லதுதாத்தாவோ, யாராவது ஒருவர், வெற்றிலைக் குதப்பலுடன் அல்லாத காது கேட்காதவராக (சென்டிமெண்ட்!)அவ்வப்போது வந்து செல்வார்கள். இந்தப் படத்தில் அந்த ரோலை செய்திருப்பவர் ஆர்.சுந்தர்ராஜன். வழக்கமாககிஷ்முதான் இதைச் செய்வார். ஆனால் அவர் இல்லாததால், சுந்தர்ராஜனுக்கு கிடைத்திருக்கிறது இந்த அரியவாய்ப்பு!.

அவரும் வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் வந்து செல்கிறார்.

படத்தை ராஜ் டிவியின் திரைப்படத் தயாரிப்புப் பிரிவான ராஜ்கோ நிறுவனம் தயாரித்துள்ளது. சந்திரபோஸின்இசை. நாடகத்துக்கு இவ்வளவு தான் இசையமைக்க முடியும். அந்த அளவுக்குத் தான் இருக்கின்றன பாடல்கள்.

மொத்தத்தில், டிவியில் நாம் தினசரி காணும் நடிக, நடிகையர் நிறையவே படத்தில் காணப்படுவதால் ஒரு மெகாசீரியலை ஒரே நேரத்தில் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.

-தாயுமானவர் அறிவழகன்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil