For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Movie Review : மாட்ட வச்சு அரசியல் பேசும்..இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்

  |

  Rating:
  3.5/5
  Star Cast: நடிகர்கள் : மிதுன் மாணிக்கம் ரம்யா பாண்டியன் கோடங்கி வடிவேல்
  Director: இயக்கம் : அரிசில் மூர்த்தி ,இசை : க்ரிஷ்

  சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ரம்யா பாண்டியன் நடித்திருக்கும் திரைப்படம் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்.அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இப்படத்தை இயக்கி இருக்க சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

  மாட்ட காணாம்னு கேஸ் கொடுக்கப் போன இடத்தில் நடக்கும் அரசியலை தெள்ளத் தெளிவாக இந்த திரைப்படம் காட்டியுள்ளது.மாட்ட காணாம்னு கேஸ் குடுத்து அந்த கேஸ் மூலம் நடக்கும் பின்விளைவுகள் தான் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தின் ஒன் லைன் .

  அரண்மனை 3 ல் ஆர்யாவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா!அரண்மனை 3 ல் ஆர்யாவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா!

  இரண்டு மாடுகளை தான் பெற்ற பிள்ளைகள் போல் பாதுகாப்புடன் பாசத்துடன் வளர்த்து அவைகளை சீராட்டி பாராட்டி கொஞ்சிக் குலாவி விளையாடும் ஒரு தம்பதியரின் பற்றிய கதை. இந்த கதையில் வெள்ளையன் கருப்பன் எனும் அந்த இரண்டு குழந்தைகள் ( மாடுகள் ) காணாமல் போக அது அரசியல் கதையாக எப்படி மாறுகிறது என்பதை இயக்குனர் திரைக்கதை மூலம் சொல்லி உள்ளார் .

  ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்

  ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்

  போட்டோ ஷூட், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என படு பிஸியாக வலம் வந்த நடிகை ரம்யா பாண்டியன் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடி பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்களை சரிசமமாக பெற்றார். டம்மி டப்பாசு, ஆண் தேவதை ,ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்.

  பக்கா வில்லேஜ்  பாத்திரத்தில்

  பக்கா வில்லேஜ் பாத்திரத்தில்


  இதுவரை பல கதாபாத்திரங்களின் ரம்யா பாண்டியன் நடித்திருந்தாலும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் பக்கா வில்லேஜ் பாத்திரத்தில் நடித்துள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக இப்படத்தை தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார். கிரிஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

  குழந்தைகள் போல செல்லமாக

  குழந்தைகள் போல செல்லமாக

  திருமணமான கிராமத்து தம்பதியினர் வெள்ளையன் மற்றும் கருப்பன் என இரண்டு மாடுகளை குழந்தைகள் போல செல்லமாக வளர்கின்றனர். ஆனால் அந்த மாடுகள் ஒரு நாள் காணாமல் போக அதை மீட்க ரம்யா பாண்டியன் மற்றும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள மிதுன் மாணிக்கம் எவ்வாறு போராடுகின்றனர், துடிக்கின்றனர், பரிதவிக்கின்றனர் என்பதே இந்த படத்தின் மையக் கருவாக உள்ளது.இருப்பினும் சில பல இடங்களில் லாஜிக் பார்க்காமல் எமோஷனலாக கதையை நகர்த்தி கிராமிய கலாச்சாரம், வட்டார வழக்கு ஆகிய விஷயங்களில் மெனக்கெட்டு நேர்த்தியாக செய்து உள்ளனர்

  தெறிக்கும் அரசியல் வசனங்கள்

  தெறிக்கும் அரசியல் வசனங்கள்

  செல்லப் பிள்ளைகளாக வளர்த்த இரண்டு மாடுகளை கண்டுபிடித்துக் கொடுக்க சென்ற இடத்தில் நடக்கும் அரசியலை வெட்டவெளிச்சமாக இப்படம் காட்டியுள்ளது. ரம்யா பாண்டியன், மிதுன் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து வாணிபோஜன் இதில் ரிப்போர்ட்டர் வேடத்தில் மிக முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இது வெறும் இரண்டு மாட்டை பற்றிய படமல்ல அரசியல் சவுக்கடி என சொல்லும் அளவிற்கு அரசியல் வசனங்கள் அதிகமாக உள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் இந்த திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதி நேரடியாக அமேசான் தளத்தில் வெளியாகி உள்ளது.

  இனப்பெருக்கத்தை தடுத்து

  இனப்பெருக்கத்தை தடுத்து

  மாட்டுக்கு லாடம் அடிப்பதை தாங்கிக்கொள்ள முடியாத மனநிலை அதே மாட்டுக்கு காதில் கவர்மெண்ட் சீல் அடிக்க முயற்சி செய்யும்பொழுது அதை தடுக்கும் கதாநாயகன், பலவகையில் பாசத்தை வெளிப்படுத்துகிறான் . ஆனால் அதே மாடுகளுக்கு இனப்பெருக்கத்தை தடுத்து அடக்கி ஆள்வது நியாயமா என்ற ஒரு கேள்வி பலர் மனதிலும் எழுகிறது.

   சர்ச்சையான கருத்துக்களை

  சர்ச்சையான கருத்துக்களை

  அரசியல் ரீதியாக பல கட்சித் தலைவர்களை குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த பிரபலமான தலைவர்களை தேர்ந்தெடுத்து, இந்த மாடு காணாமல் போன விஷயத்தை அவர்கள் எப்படி அணுகுவார்கள் என்பதை வித்தியாசமாக சித்தரித்து காட்சிப்படுத்திய விதம் ஒருபக்கம் பாராட்ட தக்கதாக இருக்கிறது. இன்னொரு பக்கம் சர்ச்சையான பல கருத்துக்களை இந்த காட்சிகள் ஏற்படுத்தியுள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.

  தவறுகளை சுட்டிக்காட்டி

  செல்லாத 1000 ரூபாய் நோட்டு, ஹிந்தி தெரியாது போடா, வெற்றிலையில் மை தடவி அதை நம்பும் குமாங்கு மக்களின் அவலநிலை, அறியாமையில் இருக்கும் ஒரு பாமரன், வெகுளித்தனமாக செயல்படும் கிராமம்- போன்ற பல விஷயங்களை உள்ளடக்கி அரசு அதிகாரிகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி பல ஆழமான கருத்துக்களை தொடர்ந்து சொல்லி வருகிறது இந்த படம்.

  கால அளவு மட்டும்

  கால அளவு மட்டும்

  ஒளிப்பதிவாளர் சுகுமாரன் மிகவும் அற்புதமாக படத்தை காட்சி படுத்திருக்கிறார். இசையமைப்பாளர் கிரிஷ் இந்தப் படத்தின் மூலம் ஒரு புது அவதாரம் எடுத்துள்ளார். பல இயக்குனர்கள் இனி இவரை பயன்படுத்துவார் என்று பெரிய நம்பிக்கை வந்துள்ளது. படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமாக கோடங்கி வடிவேலு அனைவரது மனதிலும் ஆழமாக பதிகிறார். ஒட்டு மொத்த கால அளவு மட்டும் இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால் ஒரு சிறந்த படமாக மேலும் பலர் பாராட்டி இருப்பார்கள் . இருந்தாலும் கூட குடும்பத்துடன் காணவேண்டிய ஒரு என்டர்டைன்மென்ட் படமாகத்தான் "இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்" என்ற படம் இருக்கிறது.

  English summary
  "2D entertainment " has produced various tamil movies and now recently released movie in amazon directly is "rame aandalum raavana aandalum " . This movie subject is entirely taken in villages and actress ramya pandian along with new comer mithun have done the lead roles.Arsil murthy has directed this movie and singer krish has done the music with different style.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X