For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மிரள வைக்கும் ரெஜினாவின் சூர்ப்பனகை டிரைலர்...எப்படி இருக்கு ?

  |

  சென்னை : சமீப காலமாக தென்னிந்திய நடிகைகளிலேயே மிகவும் துணிச்சலான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகையாக இருந்து வருகிறார் ரெஜினா. விஷால் நடித்த சக்ரா படத்தில் வில்லி கேரக்டரில் நடித்த ரெஜினா, காமெடியன் பிரேம்ஜி அமரனுக்கு ஜோடியாக கசடதபற படத்தில் நடித்துள்ளார்.

  என் கவர்ச்சி உடையின் ரகசியம் | OPEN TALK WITH REGINA CASSANDRA-P-02|FILMIBEAT TAMIL

  அதே சமயம் அருண் விஜய்யுடன் இணைந்து பார்டர் படத்தில் அசத்தலான கேரக்டரில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து சூர்ப்பனகை என்ற புராண கால த்ரில்லர், பேய் படத்தில் நடித்துள்ளார் ரெஜினா. இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார்.

  ஃப்ரெண்ட்ஷிப் படக்குழுவுடன் இணைந்து படம் பார்க்க ஓர் அரிய வாய்ப்பு!ஃப்ரெண்ட்ஷிப் படக்குழுவுடன் இணைந்து படம் பார்க்க ஓர் அரிய வாய்ப்பு!

  தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்டுள்ள சூர்ப்பனகை படத்தின் மிரட்டலான டிரைலர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.இதில் ரெஜினா முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ளார். தொல் பொருள் ஆய்வாளர், புராண கால கதாபாத்திரம் என இரு கேரக்டர்களில் நடித்துள்ளார்.

  சூர்ப்பனகை டிரைலர்

  சூர்ப்பனகை டிரைலர்

  புராண கால நினைவுகள் திரும்பி வருவது. மர்ம கொலைகள், மறுபிறவி எடுத்து வந்து பழிவாங்குவது என பேய் படத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக சூர்ப்பனகை படம் அமைந்துள்ளது. மாடர்ன், புராண காலம் என இரண்டு கெட்அப்களும் மிக கச்சிதமாக பொருந்தும் வகையில் ரெஜினாவின் தோற்றமும், நடிப்பும் இந்த படத்தில் இருப்பது டிரைலரில் நன்றாக தெரிகிறது.

  மர்மமான கொலைகள்

  மர்மமான கொலைகள்

  காட்டுக்குள் டிரக்கில் சென்ற வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் பலமாக தாக்கப்பட்டு உயிரிழக்கிறார். அந்த பகுதியில் மாயமான வெளிநாட்டவரை தவிர வேறு யாரின் கால் தடமும் இல்லை என மர்மமாக டிரைலர் துவங்குகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க வரும் தொல் பொருள் ஆய்வாளராக ரெஜினா படு மாடர்னாக வருகிறார். பல வருடங்களுக்கு முன் நடந்ததை போன்ற அடுத்தடுத்து மர்ம மரணங்கள், கொலைகள் நடக்கிறது.

  புராண கால கெட்அப்பில் ரெஜினா

  புராண கால கெட்அப்பில் ரெஜினா

  இது பற்றி விசாரிக்கப்படுபவர்கள் அனைவரும் உயிரிழக்கிறார்கள். எலும்புக் கூடுகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்கிறார்கள். இதற்கிடையில் புராண கால ராணி தோற்றத்திலும் ரெஜினா வந்து போகிறார். ராணி கெட்அப்பில் வரும் ரெஜினா, தற்காலத்தில் வசிக்கும் சிலரை அடித்து கொலை செய்வது போலவும் காட்டப்படுகிறது.

  ஆர்வத்தை தூண்டிய டிரைலர்

  ஆர்வத்தை தூண்டிய டிரைலர்

  அடுத்தடுத்த த்ரில்லர், மர்மங்கள், புராண கால பிளாஷ்பேக் என அடுத்தடுத்து ஷாட்கள் மாறும் இந்த டிரைலர் படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் முழு கதையும் என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. அதை விட ரெஜினாவின் கேரக்டர் என்ன, பழங்காலத்தில் ராணி கெட்அப்பில் வரும் ரெஜினாவின் ரோல் என்ன, அவர் எதற்காக இப்போது வசிப்பவர்களை கொலை செய்கிறார் என அடுக்கடுக்காக பல கேள்விகள் மனதில் எழுகிறது.

  ரசிகர்கள் என்ன சொல்றாங்க

  ரசிகர்கள் என்ன சொல்றாங்க

  யூட்யூப்பில் வெளியிடப்பட்ட இந்த டிரைலரை இதுவரை சுமார் 9 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ரெஜினாவின் அற்புதமான நடிப்பு, சாமின் மிரட்டலான இசையை பலரும் பாராட்டி உள்ளனர். படம் வெற்றி அடைய வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். சிலர் இசைக்காகவே படத்தை தியேட்டரில் போய் பார்க்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

  மிரட்டும் இசை

  மிரட்டும் இசை

  டைரக்டர் கார்த்திக் ராஜு இயக்கி உள்ள இந்த படத்தை ஆப்பிள் ட்ரீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

  English summary
  Regina starred Soorpanagai trailer released yesterday. this trailer has full of horror, mystirious murder, mythological rebirth.fans appreciated this trailer and wished movie's grand success. this film was directed by caarthik raju and music by sam cs.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X