twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Silence Review: காதலி.. பேய் பங்களா.. கொலை.. விசாரணை.. திக் திடுக் திருப்பம்.. இவ்ளோதான்!

    By
    |

    Rating:
    2.5/5
    Star Cast: அனுஷ்கா செட்டி, ஆர் மாதவன், ஷாலினி பண்டே, அஞ்சலி, சுப்பாராஜூ
    Director: ஹேமந்த் மதுக்கர்

    பேய் பங்களா ஒன்றுக்கு வருங்கால கணவருடன் செல்லும் காதலிக்கு நேரும் பிரச்னைகளும் அவரைச் சுற்றி நடக்கும் திக் திடுக் சம்பவங்களும்தான், சைலன்ஸ்!

    அமெரிக்காவின் பிரபலமான இசைக்கலைஞன் ஆண்டனி. அனாதை இல்லத்தில் வளர்ந்த காதுகேளாத, வாய்பேச முடியாத ஓவியர் சாக்‌ஷி. திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர். இடையில் சாக்‌ஷின் உயிர்தோழி மாயமாகிறார். கவலையில் இருக்கும் சாக்‌ஷியை வெளியே அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார், ஆண்டனி. சாக்‌ஷிக்கு பழங்கால ஓவியம் ஒன்றை வரைய ஆசை.

    அது பேய் பங்களா என்று சொல்லப்படும் இடத்தில் இருக்கிறது. அதை எடுக்க போகிறார்கள். அங்கு ஓர் அறையில் கணவர் கொல்லப்பட, தப்பி வருகிறார் சாக்‌ஷி. அங்கு என்ன நடந்தது, ஏன், எதற்கு என்பதுதான் கதை.

    கதையாக கேட்டால் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைச் சொன்னவிதத்தில் தடுமாறி இருக்கிறார்கள்.

    இழுத்துப் பிடிப்பது

    இழுத்துப் பிடிப்பது

    பிரபலமான இசைக்கலைஞரான மாதவன், கோடீஸ்வரர். அவ்வப்போது மேடையில் இசைக்கிறார். ஹாய், ஹாய் என்கிறார். இளம் பெண்களை ரொமான்ஸாக பார்க்கிறார். அனுஷ்காவுடன் செல்லமாக பேசுகிறார். மற்றபடி அழுத்தமில்லாத கேரக்டர். இருந்தாலும் கதையோடு நம்மை இழுத்துப் பிடிப்பது அவர்தான்.

    காது கேளாத கேரக்டர்

    காது கேளாத கேரக்டர்

    கதை முழுவதும் அனுஷ்காவை சுற்றி. வாய் பேச முடியாத, காது கேளாத கேரக்டரில் சிறப்பாக நடித்திருக்கிறார். அமைதியாக ஓவியம் வரைவது, சைகை மொழியில் நன்றி சொல்வது, மாதவனிடம் உருகுவது, உயிர்த்தோழி ஷாலினியிடம் பாசம் காட்டுவது என தான் சீனியர் நடிகை என்பதை நடிப்பில் நிரூபிக்கிறார். அவருடைய ஸ்டைலான லுக்கும் உடல் மொழியும் படத்துக்கு வலு சேர்க்கிறது.

    கூலாக விசாரணை

    கூலாக விசாரணை

    போலீஸ் அதிகாரியான அஞ்சலிக்கு அதிக வேலையில்லை. விசாரணை என்ற பெயரில் அங்கும் இங்கும் அலைகிறார். ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன், போலீஸ் உயரதிகாரி. எப்போதும் தம் அடித்துக்கொண்டே, கூலாக விசாரணை நடத்துகிறார். அவருக்கு பின்னால் அப்படியொரு கதை என நினைக்கும்போது ஷாக் கொடுக்கிறார்.

    இதுக்குத்தானா?

    இதுக்குத்தானா?

    உயிர் தோழியான ஷாலினி பாண்டே, நண்பனாக வரும் சுப்பாராஜ், அந்த ஓவிய கூட மானேஜர் உள்பட தங்கள் கேரக்டருடன் பொருந்துகிறார்கள். ஆனால், படம் முடியும்போது, இதுக்குத்தானா இவ்வளவு அக்கப்போரும் என்று சப்பென்று முடிவதைதான் தாங்க முடியவில்லை.

    இதை எதிர்பாருங்க

    இதை எதிர்பாருங்க

    வாய்ஸ் ஓவரில் கதை சொல்கிறார்கள். அடுத்து இதை எதிர்பாருங்க என்ற அறிவிப்பு போலவே அது இருப்பதால், போரடிப்பதை தவிர்க்க முடியவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகித்துவிடக் கூடிய பலவீனமான, அழுத்தமில்லாத திரைக்கதை படத்தோடு ஒன்ற முடியாமல் தடுக்கிறது.

    தேவையே இல்லை

    தேவையே இல்லை

    கோபி சுந்தரின் பாடல்கள் படத்துக்கு தேவையே இல்லை என்றாலும் கிரிஷ் ஜியின் பயங்காட்டும் பின்னணி இசையும் சியாட்டில் நகரின் அழகைக் காட்டும் ஷானீல் டியோவின் ஒளிப்பதிவும் படத்துக்கு ஆறுதலாக இருக்கின்றன. ஒரு படத்துக்கு அதுமட்டும் போதுமா என்ன?

    English summary
    Madavan and his character that steals the show, but the screenplay is not impressing.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X