For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Yashoda Review: வாடகைத்தாய் மேட்டரில் இப்படியொரு பிசினஸ் இருக்கா? சமந்தாவின் யசோதா விமர்சனம்!

  |

  நடிகர்கள்: சமந்தா, வரலக்‌ஷ்மி சரத்குமார்

  இசை: மணி ஷர்மா

  இயக்கம்: ஹரி - ஹரீஷ்

  Rating:
  3.5/5

  சென்னை: குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நடிகைகள் மற்றும் பிரபலங்கள் வாடகைத்தாய் முறையை பயன்படுத்த ஏன் அவ்வளவு விதிமுறைகள் இருக்கு என்பதை புரிந்து கொள்ள நிச்சயம் சமந்தாவின் யசோதா திரைப்படம் ஒரு ஐ ஓப்பனராகவே இருக்கும்.

  கடந்த ஆண்டு பாலிவுட்டில் க்ரித்தி சனோன் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான மிமி திரைப்படமும் வாடகைத்தாய் விஷயத்தைத் தான் கையாண்டு இருந்தது.

  இந்நிலையில், இரட்டை இயக்குநர்களான ஹரி மற்றும் ஹரீஷ் இணைந்து இயக்கி உள்ள யசோதா திரைப்படம் சமந்தாவின் கடின உழைப்புக்கு கைகொடுத்ததா? இல்லையா? என்பதை விரிவாக இங்கே பார்ப்போம்..

   ஓடிடி பியூட்டி.. வெப்சீரிஸ்களில் உச்சகட்ட கவர்ச்சியில் வெளுத்து வாங்கும் டாப் 5 தமிழ் நடிகைகள்! ஓடிடி பியூட்டி.. வெப்சீரிஸ்களில் உச்சகட்ட கவர்ச்சியில் வெளுத்து வாங்கும் டாப் 5 தமிழ் நடிகைகள்!

  யசோதா கதை

  யசோதா கதை

  சாதாரண குடும்பத்தை சேர்ந்த சமந்தா தனது தங்கைக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால், வாடகைத்தாயாக மாறுகிறார். சமந்தாவை லேப் ஒன்ற ஒரு செட்டப்பில் அடைத்து வைக்க, அங்கே இவரை போல பல பெண்கள் வாடகைத்தாயாக உள்ளனர். வரலக்‌ஷ்மி சரத்குமார் நடத்தும் அந்த க்ளினிக்கில் சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்கும் நோக்கில் வாடகைத்தாயாக வரும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராடும் சக்தியாக உருவெடுக்கும் சமந்தா அங்கிருத்து தப்பித்தாரா? மற்ற பெண்களை காப்பாற்றினாரா? என்பது தான் யசோதா படத்தின் கதை.

  சமந்தா டிரான்ஸ்ஃபர்மேஷன்

  சமந்தா டிரான்ஸ்ஃபர்மேஷன்

  வாடகைத்தாயாக அப்பாவி பெண்ணாக நடிக்கும் காட்சிகள் இருந்து வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் காட்சிகள், பின்னர், அங்கே நடக்கும் மோசடியை அறிந்து கொண்டு சூறாவளியாக பொங்கி எழுந்து எதிரிகளை ஹாலிவுட் ஹீரோயின் போல அடித்து துவம்சம் செய்வது என சமந்தாவின் டிரான்ஸ்பர்மேஷன் ரசிகர்களை யசோதா படத்தை ரசித்து பார்த்து வைக்கிறது. ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து நடித்திருக்கிறார் சமந்தா.

  சூப்பர் வில்லி

  சூப்பர் வில்லி

  சர்க்கார் படத்தில் அரசியல் வில்லியாக நடித்து அசத்திய வரலக்‌ஷ்மி சரத்குமார் இந்த படத்தில் கார்ப்பரேட் வில்லியாக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். வரலக்‌ஷ்மியை அந்த கதாபாத்திரத்தில் போட்ட நிலையிலேயே அவர் தான் வில்லி என்பது ரசிகர்களுக்கு புரிந்து விடுவது மைனஸ் ஆக அமைந்தாலும், தனது தேர்ந்த நடிப்பால் பேலன்ஸ் செய்திருக்கிறார் வரலக்‌ஷ்மி சரத்குமார்.

  பலம்

  பலம்

  ரகசியமாக அமைக்கப்பட்டு இருக்கும் அந்த லேபின் செட் வொர்க் அட்டகாசமாக இருக்கு. சமந்தாவின் ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டலாக இருப்பதால் ரசிகர்களுக்கு ஹீரோ இல்லாத குறையே தெரியாமல் படம் விறுவிறுப்பாக நகர்கிறது. அந்த இடத்தில் நடக்கும் பிரச்சனைகளை சமந்தா எப்படி ஒவ்வொன்றாக கண்டு பிடிக்கிறார் என திரைக்கதை அமைத்த விதத்தில் இரட்டை இயக்குநர்களும் சிக்ஸர் அடித்துள்ளனர். ஓ பேபி, யூடர்ன் வரிசையில் சோலோ ஹீரோயினாக சமந்தா அசத்தி உள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு ஹாலிவுட் படம் பார்க்கும் எஃபெக்ட்டை தாராளமாக தருகிறது.

  பலவீனம்

  பலவீனம்

  மணிஷர்மாவின் பின்ன்ணி இசை படத்துக்கு பெரிய பலமாக இருந்தாலும், பாடல்கள் எல்லாமே டப்பிங் படத்தை பார்க்கும் உணர்வை தான் கொடுக்கிறது. தெலுங்கிலாவது பாடல்கள் ஹிட் அடிக்குமா? என்பது சந்தேகம் தான். உன்னி முகுந்தன், சம்பத்ராஜ் கதாபாத்திரக்கள் எல்லாம் பெரிதாக ஒட்டவில்லை. மேலும், சில இடங்களில் வரும் VFX காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் படக்குழு மெனக்கெட்டு இருக்கலாம். மயோசிட்டிஸ் நோயால் வாடி வரும் சமந்தாவுக்கு நிச்சயம் யசோதா படத்தின் வெற்றி ஆறுதலை தரும் என நம்பலாம்!

  English summary
  Yashoda Movie Review in Tamil ( யசோதா விமர்சனம்): Yashoda story revolves around the surrogacy issue and how some gangs earn money in a illegal way deeply reveals in this flick is a worth watchable.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X