»   »  சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம்

சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
2.5/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, தம்பி ராமய்யா


ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்


இசை: விஷால் சந்திரசேகர்


தயாரிப்பு: அட்லீ - ஃபாக்ஸ் ஸ்டார்


இயக்கம்: ஐக்


ஒரு பெரிய பங்களா... உள்ளே ஒரு பேய்.. புதிதாக வீட்டுக்கு வரும் குடும்பம்.. இது போதாதா ஒரு பேய்ப் படம் எடுக்க!


சங்கிலி புங்கிலியில் ஒரு சின்ன வித்தியாசம்... வீடு விற்றுத் தரும் புரோக்கரான ஜீவா, ஒரு பங்களாவில் பேயிருப்பதாக புரளி கிளப்பி வைக்கிறார். ஒரு கட்டத்தில் வேறு யாரும் வாங்க மறுக்க, மிக சல்லிசாக அந்த வீட்டை வாங்கி, தன் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிக் கொள்கிறார். ஆனால் அந்த பங்களாவில் உண்மையிலேயே ஒரு அப்பா பேயும், மகன் பேயும் குடியிருப்பது பின்னர்தான் தெரிய வருகிறது. அந்த உண்மைப் பேய்களிடமிருந்து ஜீவா குடும்பத்தினர் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படம்.


Sangili Bungili Kathava Thorea review

காமெடி, காதல், பேய் என எல்லாவற்றையும் கலந்து கட்டிச் சொல்ல முயற்சித்திருக்கிறார் புது இயக்குநர் ஐக். எதிலாவது ஒன்றில் முழுமையாக கவனம் செலுத்தி இருந்தால் ஓரளவுக்காவது நிறைவாக வந்திருக்கும்.


கம்மி விலைக்கு வாங்கிய பங்களாவுக்குள் குடிபோன முதல் நாளே உள்ளே தம்பி ராமய்யா குடும்பத்துடன் வசிப்பது தெரிகிறது. தம்பி ராமய்யா எப்படி உள்ளே வந்தார்... அவரும் விலைக் கொடுத்து வாங்கினாரா? ஒன்றும் புரியவில்லை.


கூகுள் சாமி வசித்த வீடு என்று சீன் போட்டு முதல் வீட்டை விற்கும் காட்சி சற்று சுவாரஸ்யமாகத்தான் உள்ளது.


நாயகன் ஜீவா காமெடி செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் சிரிப்புக்கு பதில் சற்று கடுப்புதான் வருகிறது. காதல் காட்சிகளிலும் பெரிதாக ஈர்ப்பில்லை. அண்ணாமலை ஸ்டைலில் பேயிடம் சவால் விடும் காட்சியில் ஓகே.


ஸ்ரீதிவ்யாவுக்கு நடிக்க பெரிதாக ஸ்கோப் இல்லை. சொன்ன வேலையைச் செய்திருக்கிறார். சொல்லப் போனால், ஜீவா - ஸ்ரீதிவ்யா காதல் காட்சிகளை விட, சூரிக்கும் ஜீவாவின் முறைப்பெண்ணுக்கும்தான் அதிக காதல் காட்சிகள்!


சூரியின் காமெடி சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. ஆனால் தம்பி ராமய்யா, தேவ தர்ஷினியின் வாஷிங் மெஷின் காமெடி அருவருப்பு.


ராதாரவியின் நடிப்பு அருமை. குறிப்பாக தன் பிணத்தை உறவுகளே 'கொல்லும்' அந்தக் காட்சியைப் பார்த்து 'இதிலாவது ஒற்றுமையாய் இருக்கிறார்களே..' என்பது.


ராதிகா, கோவை சரளா ஆகியோரும் படத்துக்கு பக்க பலமாய் திகழ்கிறார்கள்.


ஆனால் எல்லாமே பழக்கமாகிப் போன மாதிரி இருப்பதால், பேய்க் காட்சிகளில் எந்த திகிலும் இல்லை.


விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை கொஞ்சம் சத்தம். பாடல்கள் பரவாயில்லை. சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு ஓகே.


குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தி ஒரு பேய்ப் படம் என்பது கேட்க நன்றாக இருந்தாலும், அதை இன்னும் ரசிக்கும்படி தந்திருக்கலாம் புது இயக்குநர் ஐக்.

English summary
Jiiva - Sri Divya starring horror comedy movie Sangili Bungili Kathava Thorea review.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil