»   »  பட விமர்சனம்

பட விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

படத்தின் இயக்குநர் சுரேஷ், சத்ரியன் படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவே பார்க்கவில்லை போலும்!

மனைவியை இழந்து, பெண் குழந்தையுடன் வாழும் நேர்மாைன போலீஸ் அதிகாரி தனது கடமையில்எதிர்கொள்ளும் சவால்களை எப்படி வெற்றிகரமாக சமாளிக்கிறார் என்ற அரதப் பழசான கதைதான் கம்பீரம்படத்தின் கதையும். அதை சொல்லும் விதத்திலாவது கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கலாம்.

லாஜிக் எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்று கட்டியம் கூறுவதுபோல் படம் தொடங்குகிறது. சரத்குமார்நேர்மையான போலீஸ் அதிகாரி என்பதை நிரூபிப்பதிலேயே பாதி படம் கழிகிறது. பின்னர் ஒரு கேஸ் தொடர்பாகமத்திய அமைச்சருக்கும்(பிளாஸ்பேக்கில், ஒன்றியச் செயலாளராக இருந்தவரை சரத் சிறையில் அடைப்பதுவிளக்கப்படுகிறது), சரத்துக்கும் மோதல் ஏற்படுகிறது.

இதில் சரத் எப்படி அந்த அமைச்சரை அழிக்கிறார் என்பதை பிற்பாதியில் காண்பிக்கிறார்கள். அட போங்கப்பா!எத்தனை தடவை இதைப் பார்ப்பது?

முத்துச்சாமி ஐ.பி.எஸ். ஆக சரத்குமார். கிண்ணென்று உடம்பை வைத்திருக்கிறார். 10 பேரை போட்டு புரட்டிஎடுக்கும்போது, இவர் அடித்தாலும் அடிப்பார் என்று நம்பத் தோன்றுகிறது. பலவீனமான திரைக்கதையை முடிந்தஅளவுக்குத் தூக்கி நிறுத்த முயல்கிறார்.

அப்பா இறந்ததால் போலீஸ் வேலை கிடைக்கிறது லைலாவுக்கு. முதல் பாதியில் இவரும், வடிவேலுவும் வரும்காட்சிகள் கலகல. படத்தில் ஆறுதல் இவர்கள் இருவர் மட்டும்தான். சாராய வியாபாரியிடம் சரத்குமார் ஒப்புதல்வாக்குமூலம் வாங்கும் காட்சியிலும், கைது நடவடிக்கையின்போது நெஞ்சுவலி என்று மருத்துவமனையில்படுத்துக் கொள்ளும் தொழிலதிபரின் முகத்திரையை சரத்குமார் கிழிக்கும் காட்சியிலும் இயக்குநர் எட்டிப்பார்க்கிறார்.

சரத்குமார் ஆவேசமான அதிகாரிதான். ஒத்துக் கொள்கிறோம். அதற்காக ரெளடிக்கு ஜாமீன் கேட்டு வரும்வழக்கறிஞர்களை சுட்டு விடுவேன் என்று மிரட்டுவது, கலெக்டரைக் கைது செய்வதற்கான கையெழுத்து வாங்கநீதிபதியைக் கடத்துவது எல்லாம் ரொம்ப ஓவர்.

அதேபோல் சரத்குமாரின் முதல் மனைவியாக வரும் பிரணதியின் பாத்திரப் படைப்பு, யதார்த்ததைத் தாண்டிமிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

வடிவேலுவின் காமெடியை விட பெரிய காமெடி, கிளைமாக்ஸில் மத்திய அமைச்சரை சரத்குமார் கொல்லும்காட்சிதான். 100 மீட்டர் தூரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வில்லன் மீது, பெட்ரோலில் நனைத்த துண்டை வீசுகிறார்.அது கரெக்டாக வில்லன் மீது விழுகிறது. அடுத்து சரத்குமார் சிகரெட்டைச் சுண்டி விடுகிறார். அதுவும் கரெக்டாகவில்லன் மீது விழுந்து, தீ பிடித்துக் கொள்கிறது. தலை சுற்றுகிறது நமக்கு.

மணிசர்மாவின் இசையில் சின்ன வெண்ணிலா பாடலைக் கேட்கலாம். அதை படமாக்கிய விதம் சொதப்பல்.

படம் முழுக்க ஒரு வித அமெச்சூர்தனம் தெரிவது பெருங்குறையாகும்.

படத்தின் பெயரில் மட்டும்தான் கம்பீரம் இருக்கிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil