twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது வித்தியாசமான மிஷ்கினின் அனுபவம்! - சவரக்கத்தி விமர்சனம் #SavarakathiReview

    By Shankar
    |

    Recommended Video

    மிஷ்கினின் சவரக்கத்தி விமர்சனம் #SavarakathiReview

    Rating:
    3.0/5
    மிஷ்கினின் உதவி இயக்குநரும் தம்பியுமான ஆதித்யா இயக்கத்தில் மிஷ்கினின் கதை, திரைக்கதை, வசனத்தில் ராம், பூர்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சவரக்கத்தி.

    எப்போதுமே எளிய மனிதர்களை வைத்து ஒரு எமோஷனல் கதையை நகர்த்துவதில் மிஷ்கின் கெட்டிக்காரர். அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். அதில் முழுக்க முழுக்க நகைச்சுவையை தூவியிருப்பது ஒரு சுவராஸ்யமான அனுபவத்தை தருகிறது.

    Savarakathi Review

    பெயில் முடிய இன்னும் சில மணி நேரமே இருக்கும் முரட்டு சைக்கோ ரவுடி மங்கா, அந்த நேரத்தையும் வெறிகொண்டு கடத்திக்கொண்டிருக்கிறான். ஒரு எளிய பார்பரான பிச்சை சாதாரணமாக அவனிடம் மோத, மங்கா அவனை கொலைவெறிகொண்டு துரத்துவதும் அவன் எப்படி தப்பித்தான் என்பதும்தான் சவரக்கத்தி கதை.

    இந்த படு சீரியஸான கதையை ஒரு பிளாக் ஹியூமர் படமாக ரசிக்க வைத்திருக்கிறார்கள். வெகு நாட்கள் கழித்து சிச்சுவேஷன் காமெடியில் அசரடிக்கிறது சவரக்கத்தி.

    Savarakathi Review

    முதல் காட்சியிலேயே 'அந்த இடத்தில்' கடிபட்டு படம் முழுக்க குனிந்தபடியே ரவுடிசம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஒருவன், ஐடியா சொல்லி அதற்கும் வாங்கி கட்டிக்கொள்ளும் ஒருவன், ஃபிலாசபி பைத்தியமாக ஷாஜி என ஒவ்வொரு கேரக்டருமே தன் பங்குக்கு ரசிக்க வைக்கிறார்கள்.

    படத்தில் பிச்சைப்பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் ராம். அட்டகாசம் சார்! ஒரே நேரத்தில் வீராப்பையும் பரிதாபத்தையும் அனாயசமாக காட்டுகிறார்.

    Savarakathi Review

    மிஷ்கினுக்கு இது சர்வசாதாரணம். ஆனால் மங்காவாக மிரட்டுகிறார்.

    பூர்ணா கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காக தெரிந்தாலும் அது கேரக்டர் இயல்பு என்று காட்டியதால் ரசிக்க முடிகிறது.

    வழக்கம்போல மிஷ்கின் பட சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட கவனம் ஈர்க்கின்றன.
    கேமரா, இசை, எடிட்டிங் எல்லாமே மிஷ்கின் படத்திற்கான பெர்ஃபெக்‌ஷன்களை காட்டுகின்றன.

    Savarakathi Review

    எளிய மனிதர்களாக இருந்தாலும் அனைவரும் ஒரே டோனில் மிஷ்கினிசமாக நடந்துகொள்வதுதான் உறுத்துகிறது. மிஷ்கின் படம் என்றால் எல்லோருமே மிஷ்கினாக தெரிவது எப்போது மாறுமோ?

    இயக்குநர் ஆதித்யா என்று டைட்டில் வருகிறது. ஆனால் மிஷ்கின் படமாகத்தான் பதிகிறது. ஒன்று ஆதித்யாவை இயக்கவிட்டிருக்கலாம். அல்லது மிஷ்கின் தலையிடாமல் இருந்திருக்கலாம். முதல் பாதியில் கொடூரமாகக் காட்டப்படும் அத்தனை கேரக்டர்களும் இரண்டாம் பாதியில் தங்கள் நியாயங்களை சொல்லி எமோஷனல் ஆகி திருந்துவது மிஷ்கினிச வழக்கம். அது இதிலும் தொடர்கிறது.

    Savarakathi Review

    சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறது அந்த க்ளைமாக்ஸ்.

    வித்தியாசமாக சிரிக்கவும் எப்போதும் போல நெகிழவும் வைத்திருக்கிறார் மிஷ்கின்.

    English summary
    Review of Mysskin, Ram starrer Savarakkathi movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X