For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Pathaan Review: உங்க சீட் பெல்ட்டை போட்டுக்கோங்க.. ஷாருக்கானின் பதான் விமர்சனம் இதோ!

  |

  நடிகர்கள்: ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம்
  இசை: விஷால் தத்லானி
  இயக்கம்: சித்தார்த் ஆனந்த்

  Rating:
  3.5/5

  சென்னை: ஷாருக்கானின் பதான் திரைப்படம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் ஹீரோவாக இந்த படத்தில் நடித்து பட்டையை கிளப்பி உள்ளார்.

  ஜேம்ஸ் பாண்ட், டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களை பார்த்து வியந்த ரசிகர்களுக்கு ஏற்ற சரியான ட்ரீட்டாக பாலிவுட்டில் இருந்து இந்த பதான் திரைப்படம் உருவாகி உள்ளது.

  குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ள பதான் படமும் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் முன்னதாக வெளியான வார் படத்தை போலவே தேசப்பற்று படமாக வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பதான் படம் எப்படி இருக்கு என்கிற முழு விமர்சனத்தை இங்கே பார்ப்போம் வாங்க..

  62 வயதில் இது தேவையா? இளம் நடிகையுடன் நெருக்கமாக மது அருந்திய பாலகிருஷ்ணா..மனுஷன் வாழ்றான்யா!62 வயதில் இது தேவையா? இளம் நடிகையுடன் நெருக்கமாக மது அருந்திய பாலகிருஷ்ணா..மனுஷன் வாழ்றான்யா!

  பதான் கதை

  பதான் கதை

  இந்தியாவில் முன்னாள் ஸ்பை ஏஜென்ட் ஆன ஜான் ஆபிரகாம் இந்தியாவுக்கு எதிராக திரும்ப அவனது மிஷனை தடுத்து நிறுத்த கொண்டு வரப்படும் இன்னொரு அராஜகமான ஏஜென்ட் தான் பதான் ஷாருக்கான். ஆனால், அந்த ஏஜென்ட்டை திசை திருப்ப தீபிகா படுகோன் செம ஹாட்டாக வருவதும் அவரது அழகில் மயங்கி பதான் வந்த வேலையை பார்க்காமல் விழுந்து கிடப்பதும் இடைவேளை ட்விஸ்ட்டுக்கு பிறகு ஜான் ஆபிரகாமை துரத்தி துரத்தி அடித்து துவம்சம் செய்து நாட்டுக்காக என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்யக் கூடிய போர் வீரன் நான் என சொல்வதும் தான் இந்த பதான் படத்தின் கதை.

  8 பேக் உடன் ஷாருக்கான்

  8 பேக் உடன் ஷாருக்கான்

  ஷாருக்கானின் ஹாப்பி நியூ இயர் படத்துக்கு பிறகு அவர் விரும்பி எடுத்த ஃபேன் மற்றும் ஜீரோ என இரு படங்களும் சொதப்பின. 2018ல் ஜீரோ படம் ஃபிளாப்பாக அதன் பின்னர் நடிக்கவே போவதில்லை என்கிற முடிவுக்கே ஷாருக்கான் வந்து சில ஆண்டுகள் கதை கேட்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார். சித்தார்த் ஆனந்த் உடன் பதான், அட்லி உடன் ஜவான், ராஜ்குமார் ஹிரானி உடன் டன்கி என அடுத்தடுத்து ரசிகர்களை தனது நடிப்பால் மிரட்ட காத்திருக்கிறார். இந்த படத்தில் 8 பேக்ஸ் உடம்புடன் ஷாருக்கான் வரும் காட்சிகள் நிச்சயம் பெண் ரசிகைகளை ரொம்பவே கவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

  2 பீஸ் தீபிகா படுகோன்

  2 பீஸ் தீபிகா படுகோன்

  ஷாருக்கானை மயக்குகிறாரா படம் பார்க்க வந்த ஆடியன்ஸை சீட்டோட வைத்து கட்டிப் போடுகிறாரா என்றே தெரியவில்லை. ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஏஞ்சலினா ஜோலியின் ஜெராக்ஸ் போல கவர்ச்சி மற்றும் ஆக்‌ஷனில் திக்குமுக்காட செய்கிறார் தீபிகா படுகோன். அவருக்காக தனியாக ஒரு ஸ்பின் ஆஃப் படமே எடுக்கலாம். அந்த அளவுக்கு அவரது நடிப்பு உள்ளது.

  வில்லன் ஜான் ஆபிரகாம்

  வில்லன் ஜான் ஆபிரகாம்

  வார் படத்தில் டைகர் ஷெராஃப் மெர்சல் காட்டி இருப்பார் வில்லத்தனத்தில் அவரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு பதான் படத்தில் வில்லத்தனத்தின் உச்சிக்கே சென்றுள்ளார் ஜான் ஆபிரகாம். ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தில் ஜான் சினா நடித்ததை போல இவரது சில காட்சிகள் ஆடியன்ஸை அதிர செய்கிறது.

  பிளஸ்

  பிளஸ்

  இயக்குநர் சித்தார்த் ஆனந்தின் பாலிவுட் ரசிகர்களுக்கான ட்ரீட்மென்ட் மற்றும் தேசபக்தியை எந்தளவுக்கு வைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு வைத்துள்ளது. கவர்ச்சி, ஆக்‌ஷன் என கலந்து கட்டி அடித்து பதான் படத்தை பாஸ் ஆக்கி உள்ளார். ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட மூவரும் திரையில் எப்போ தோன்றினாலும் பட்டாசாக இருக்கு படம். விஷால் தத்லானியின் பின்னணி இசை மற்றும் சத்சித் பவுலோஸின் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்தில் ரசிகர்களை வசீகரிக்க வைக்கிறது. பதான் ஷாருக்கான் மற்றும் டைகர் சல்மான் கான் இருவரும் சந்திக்கும் ஒரு மாஸ் சீன் தியேட்டரை தீப்பிடிக்க வைத்துள்ளது. ஸ்பை வெர்ஸையும் இந்த படத்தின் மூலம் ஆரம்பித்து வைத்துள்ளனர். டைகர் படத்திலும் பதான் ஷாருக்கான் வருவார் என்பது உறுதியாகி உள்ளது.

  மைனஸ்

  மைனஸ்

  தீபிகா படுகோனை ஒரு இடத்தில் பாம் என்றும் அதில் பிளாஸ்ட் ஆக தான் ரெடி என்றும் ஷாருக்கான் சொல்லும் காட்சிகள், இன்னொரு இடத்தில் பூபிள்ஸ் என்றும் ஆபாசமாக பேசும் இடத்திலும் ரசிகர்கள் சற்றே ஷாக் ஆகின்றனர். அதே போல எந்தளவுக்கு அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கிறதோ அதே ஒரு கட்டத்திற்கு மேல் ரசிகர்களை திகட்ட வைத்து விடுகிறது. மேலும், லாஜிக் இல்லா மேஜிக் சண்டைக் காட்சிகள் இந்த படத்திலும் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஆனால், அதை திரைக்கதை சரியான இடங்களில் சரி செய்து ரசிகர்களை கடைசி வரை பரபரப்பாக வைத்திருப்பதால் பதான் படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும்.

  English summary
  Shah Rukh Khan's Pathaan Review in Tamil (ஷாருக்கானின் பதான் விமர்சனம்): Shah Rukh Khan's Spy Universe movie grabs fans attention and rejoice in theaters. Deepika Padukone stuns with her bold and extra hotness looks.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X