twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    She-Hulk: Review: ஹல்க்கையே அந்தம்மா அந்த அடி அடிக்குதே.. ஷீ ஹல்க் விமர்சனம் இதோ!

    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள்: டட்டியானா மஸ்லானி, மார்க் ரஃபலோ

    ஓடிடி: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

    இயக்கம்: ஜெஸிகா காவோ

    லாஸ் ஏஞ்சல்ஸ்: அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் மூலம் வந்த அத்தனை வசூலையும் வரிசையாக பல படங்களில் மார்வெல் நிறுவனம் முதலீடு செய்து விட்டது போலத்தான் தெரிகிறது.

    தியேட்டருக்கு ஒரு பெரிய படம். ஓடிடிக்கு ஒரு வெப்சீரிஸ் பார்சல் என சும்மா வரிசையாக ரவுண்டு கட்டி அடித்து வருகிறது.

    அடுத்த வாரத்தில் துவங்கும் சூர்யா42 சூட்டிங்.. யாரு மியூசிக் தெரியுமா? அடுத்த வாரத்தில் துவங்கும் சூர்யா42 சூட்டிங்.. யாரு மியூசிக் தெரியுமா?

    இந்த வாரம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ள ஷீ ஹல்க்கின் முதல் எபிசோடு எப்படி இருக்கு என்பதை இங்கே விரிவாக பார்ப்போம்.

    என்ன கதை

    என்ன கதை

    ஜெசிகா காவோ இயக்கத்தில் டட்டியானா மஸ்லானி மற்றும் ரியல் ஹல்க் மார்க் ரஃபலோ நடிப்பில் உருவாகி உள்ள ஷீ - ஹல்க் வெப்சீரிஸின் முதல் பாகத்தில், வழக்கறிஞரான ஜெனிஃபர் வால்டர்ஸ் எப்படி ஷீ - ஹல்க்காக மாறுகிறார். அவருக்கு ஹல்காக எப்படி இருக்க வேண்டும் என்பதை ஹல்க்காக நடித்த மார்க் ரஃபலோவே சொல்லித் தருவது மற்றும் நீதிமன்றத்தில் வாதாடும் போது அவர் ஏன் ஷீ - ஹல்க்காக மாறுகிறார் என்பது தான் முதல் எபிசோடின் கதை.

    ஷீ ஹல்க் கலக்கல்

    ஷீ ஹல்க் கலக்கல்

    மார்வெலில் ஏகப்பட்ட பெண் சூப்பர் ஹீரோக்களும் உருவாகி வருகின்றனர். பெண்களுக்கும் சரிசமமான அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஷீ ஹல்க் காமெடியாகவும் கர்ஜனையோடும் கலக்குகிறார். ஷீ ஹல்க்காக நடித்துள்ள டட்டியானா மஸ்லானியின் நடிப்பு ரசிகர்களை ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைக்கிறது.

    ஹல்க்கையே அடிச்சிட்டாரு

    ஹல்க்கையே அடிச்சிட்டாரு

    அவெஞ்சர்ஸ் டீமில் பலம் வாய்ந்த நபரான ஹல்க்கின் கசின் தான் இந்த வழக்கறிஞர், இருவரும் பேசிக் கொண்டே செல்லும் போது ஏற்படும் விபத்தில் ஹல்க்கின் ரத்தம் இவருக்குள் செல்ல இவரும் ஹல்க் ஆகிவிடுகிறார். பின்னர், ஹல்க்காக எப்படி இருக்க வேண்டும் என இவருக்கு பாடம் எடுக்கும் படலம் படு காமெடியாக நகர்கிறது. கடைசியில் கிளாஸ் எடுத்தாலே பத்திரகாளியாக மாறிவிடுவது போல ஷீ ஹல்க் ஹல்க்கிடம் இருந்து தப்பிக்க அவருடன் மோதும் காட்சி மார்வெல் ரசிகர்களுக்கு செம தீனி.

    பிளஸ்

    பிளஸ்

    ஓடிடி கன்டென்ட் தானே என பிரம்மாண்டத்தில் குறைவு வைக்காமல் காட்சியமைத்து இருப்பது படத்திற்கு பலமாக பார்க்கப்படுகிறது. டோனி ஸ்டார்க் அயன்மேன் பற்றிய நினைவுகளையும் அவர் கட்டித் தந்த பார் என ஹல்க் சொல்லும் காட்சிகளில் மார்வெல் ரசிகர்கள் உயிரிழந்த டோனியை நினைத்து அழுதே விடுவது மிகப்பெரிய பிளஸ் ஆக மாறி உள்ளது. அதே போல ஷீ ஹல்க்கை இன்ட்ரோ செய்ய ஹல்க் நடிகர் மார்க் ரஃப்பலோவையே நடிக்க வைத்து சர்ப்ரைஸ் கொடுத்திருப்பது பெரும் பலம்.

    மைனஸ்

    மைனஸ்

    முதல் எபிசோடு என்பதால் முழுக்க முழுக்க ஷீ ஹல்க்கின் இன்ட்ரோவுக்கே முழு எபிசோடையும் வீணடித்து இருப்பது தேவையில்லாத ஆணியாக பார்க்கப்படுகிறது. மேலும், ஹல்கிடம் இருந்து ஷீ ஹல்க் உருவாகும் காட்சியை வேறு மாறி எடுத்திருந்தால் இன்னமும் திரைக்கதைக்கு வலுவாக அமைந்திருக்கும். ஷீ ஹல்க்காக அவர் உருமாறினாலும், அவர் உடையே ஏன் கிழிவதில்லை என்றும் ஹல்க் படங்களை பார்த்த ரசிகர்கள் அந்த ஆசையுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஷீ ஹல்க் உருவாக என்ன தேவை? அவருக்கான வில்லன் யார்? என்பதை முதல் எபிசோடிலேயே அழுத்தமாக சொல்லாமல் மிஸ் மார்வெல் போலவே இதையும் மொக்கையாக கொண்டு சென்றால், அதன் பின்னர் ஷீ-ஹல்க் டல் அடித்து விடுவார்.

    English summary
    She-Hulk: Attorney at Law: Webseries Review in Tamil(ஷீ ஹல்க் விமர்சனம்): Tatiana Maslany portrays in She Hulk role and Mark Ruffalo who acted as Hulk in Marvel movies done a powerful cameo in this webseries.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X