For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிரின்ஸ் விமர்சனம்:பக்கா காமெடி படமா? க்ரிஞ்ச் படமா? சிவகார்த்திகேயனின் ஃபார்முலா ஒர்க் அவுட் ஆனதா?

  |

  நடிகர்கள்: சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ்

  இசை: தமன்

  இயக்கம்: அனுதீப் கே.வி

  Rating:
  3.0/5

  சென்னை: டாக்டர், டான் என தொடர்ந்து இரு வெற்றிப் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் அனுதீப் கே.வி இயக்கத்தில் படு ஜாலியாக வந்துள்ள படம் தான் பிரின்ஸ்.

  இந்த தீபாவளிக்கு ரஜினிகாந்த், விஜய், அஜித் என எந்தவொரு முன்னணி நடிகர்கள் படமும் வராதது ரசிகர்களுக்கு மட்டுமின்றி தியேட்டர் ஓனர்களுக்கும் ஏமாற்றம் தான்.

  ஆனால், அதை சரிசெய்யும் வகையில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் என இரு படங்கள் இன்று வெளியாகி உள்ளது. டான் படமே பாதி க்ரிஞ்ச் என விமர்சிக்கப்பட்ட நிலையில், பிரின்ஸ் படம் எப்படி இருக்கு என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்..

  பிரின்ஸ் கதை

  பிரின்ஸ் கதை

  தேவக்கோட்டை எனும் ஊரில் சுதந்திரத்திற்கு பின்னும் பிரெஞ்சுகாரர்களும், பிரிட்டிஷ்காரர்களும் சிலர் இந்தியாவிலேயே தங்கி விடுகின்றனர். அப்படி ஒரு குடும்பத்து பெண்ணான ஜெஸிகாவை (மரியா) பள்ளியில் சமூக அறிவியல் வாத்தியாரான அன்பு (சிவகார்த்திகேயன்) காதலிக்க தொடங்க ஆரம்பத்தில் பிரெஞ்சுக்கார பெண் என ஓகே சொல்லும் அப்பா சத்யராஜ், பின்னர் அந்த பெண் பிரிட்டிஷ்காரி என்பது தெரிய வர மறுப்பு தெரிவிக்கிறார். ஹீரோயின் அப்பாவும் எதிர்ப்பு. இறுதியில், இந்திய வாலிபனும் இங்கிலாந்து பூர்வகுடியான இளம்பெண்ணும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் பிரின்ஸ் படத்தின் கதை.

  காமெடி கலாட்டா

  காமெடி கலாட்டா

  சிவகார்த்திகேயன் ரிங்டோனான கும்முற டப்புற பாடலுக்கு என்ன அர்த்தம் என ஹீரோயின் கேட்பதும், அதற்கு சிவகார்த்திகேயன் கொடுக்கும் விளக்கமும் காமெடி ரகளை. அதே போல பாட்டில் கார்ட் என்றால் என்னவென்று தெரியாமல் சிவகார்த்தியேன் இஷ்டத்துக்கு ரீல் விட கடைசியில் சுரைக்காயைத்தான் சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ளும் காய்கறி கடை காட்சியும் கலகலப்புக்கு பஞ்சமில்லை. சிவகார்த்திகேயனுக்கு இந்த படத்தில் வில்லனாக பிரேம்ஜி பூபதி பாண்டியன் எனும் ரோலில் மேலும், காமெடி நெடி தூவ உதவி உள்ளார்.

  சத்யராஜ் மிரட்டல்

  சத்யராஜ் மிரட்டல்

  ஜாதி, மதம் எல்லாம் பார்க்காத பெரிய சிந்தனையாளராக சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக இந்த படத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். தேசப்பற்றும் அவருக்கு அதிகம். ஆரம்பத்தில் மகன் பிரெஞ்சுக்கார பெண்ணை காதலிக்கிறான் என நினைத்து ஓகே சொல்லும் சத்யராஜ், பின்னர் அந்த பொண்ணு பிரிட்டிஷ்காரி என்று தெரிந்ததும், இந்தியவையே அடிமைப்படுத்திய தேசத்து பொண்ணு வேண்டாம் என வெறுக்கிறார். சத்யராஜை சிவகார்த்திகேயன் சமாளிக்கும் இடங்களில் எல்லாம் தியேட்டரே சிரிப்பொலியில் மிதக்கிறது.

  ஜாலி எஸ்கே

  ஜாலி எஸ்கே

  டான் படத்தில் பார்த்ததை விட படு ஜாலியான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்தியர்கள் ஹானஸ்டாக இருக்க மாட்டார்கள் என்கிற நினைப்புடன் இருக்கும் நாயகி ஜெஸிகாவின் அப்பாவுக்கு தனது நேர்மையை புரிய வைக்கும் இடத்தில் எல்லாம் நடிப்பில் அசத்தி உள்ளார். நாயகியை லவ் செய்யும் காட்சிகள், அவருடன் ஆடிப் பாடும் காட்சிகள் எல்லாமே சிவகார்த்திகேயன் பர்ஃபார்மன்ஸ் பிரமாதம்.

  பிளஸ்

  பிளஸ்

  ஜதி ரத்னலு படமே ஒரு ஜாலியான படம் தான். அந்த படத்தை இயக்கிய இயக்குநர் அனுதீப் இப்படியொரு கதையை கூட படமாக ஜாலியாக கொடுக்க முடியும் என நினைத்ததே பெரிய பிளஸ் தான். சிவகார்த்திகேயன், சத்யராஜ் காம்போ, பிரேம்ஜியின் கலாட்டா, நாயகி மரியாவின் மெச்சூரான நடிப்பு என அனைத்துமே ரசிக்க வைக்கிறது. லவ் போர்ஷனுக்கு தமன் கொடுக்கும் பிஜிஎம், காமெடி டிராக்கிற்கு அவர் பயன்படுத்தி உள்ள பிஜிஎம் என ரசிகர்களை பல இடங்களில் என்கேஜ் செய்யும் மேஜிக் உள்ளிட்ட விஷயங்கள் பெரும் பிளஸ் ஆக அமைந்துள்ளது. முதல் நாள் அதிகாலை காட்சியே கல்லூரி பெண்கள், குழந்தைகள், குடும்பங்கள் சூழ தியேட்டரில் சிரிக்கும் சத்தம் டான் படத்தை போல பாக்ஸ் ஆபிஸுக்கு பிளஸ் ஆக அமைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

  மைனஸ்

  ஆழமான அழுத்தமான கதையெல்லாம் வேண்டாம் என நினைத்து லைட் ஹார்டட் மூவியாக இயக்குநர் அனுதீப் எடுத்துள்ள இந்த படம் அந்த காரணத்திற்காகவே பல இடங்களில் மைனஸ் ஆக தெரிகிறது. காமெடி என்கிற பெயரில் பல இடங்களில் க்ரிஞ்ச் செய்கின்றனர் என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர். ஆனந்த்ராஜ் ஸ்டேஷன் காமெடி, ஊரை விட்டு ஒதுக்கி வைக்க பார்டர் போடுவது என பல கொடுமைகளும் படத்தில் உள்ளது. சீரியஸான படம் எல்லாம் வேண்டாம், இந்த தீபாவளிக்கு குடும்பத்துடன் சென்று ஜாலியா சிரித்துக் கொண்டே ஒரு படத்தை பார்க்கலாம் என்றால் தாராளமாக பிரின்ஸ் படத்தை ஒரு முறை பார்க்கலாம். லேக் அடிக்கிறது என அவர்களே 12 நிமிடங்களை தூக்கிய நிலையில், 2 மணி நேரம் கட கடவென படம் ஓடி முடிவது பிரின்ஸ் படத்தின் பிரச்சனையை சற்றே குறைத்துள்ளது.

  English summary
  Prince Movie Review in Tamil (பிரின்ஸ் திரைவிமர்சனம்): Sivakarthikeyan and Sathyaraj once again collaborates for a jolly fun ride movie. Israel actress Maria done her role perfectly and eye catchy. Director Anudeep KV's fun writing works some places and irritates some times.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X