For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Vadhandhi Web Series Review: உண்மை நடக்கும்.. பொய் பறக்கும்.. எஸ்.ஜே. சூர்யாவின் வதந்தி விமர்சனம்!

  |

  Rating:
  3.5/5

  நடிகர்கள்: எஸ்ஜே சூர்யா, நாசர், லைலா, சஞ்சனா

  இசை: சைமன் கிங்

  இயக்கம்: ஆண்ட்ரூ லூயிஸ்

  ஓடிடி: அமேசான் பிரைம்

  சென்னை: வெலோனியை கொன்றது யார்? என்கிற ஒற்றை ஸ்டோரி லைனை வைத்துக் கொண்டு பக்காவான கிரைம் த்ரில்லர் புலனாய்வுத் திரைப்படத்தை இயக்கி உள்ளார் அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்.

  விஜய்யின் குஷி, அஜித்தின் வாலி படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாகவும் வில்லனாகவும் தமிழ் சினிமாவில் மிரட்டி வரும் நிலையில், முதன்முறையாக ஓடிடியில் அடியெடுத்து வைத்துள்ளார்.

  சர்தார் படத்துக்கு பிறகு லைலாவை மீண்டும் இந்த வெப்சீரிஸில் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். நாசர், விவேக் பிரசன்னா, வெலோனியாக நடித்துள்ள சஞ்சனா என ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்த வெப்சீரிஸில் சிறப்பாக நடித்துள்ளனர். சுழல் வெப்சீரிஸை தொடர்ந்து விக்ரம் வேதா இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இந்த வெப்சீரிஸை தயாரித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

  DSP Review: வாரியர் படத்தை மறுபடி எடுத்து வச்சிருக்காங்களே.. விஜய்சேதுபதியின் டிஎஸ்பி விமர்சனம்! DSP Review: வாரியர் படத்தை மறுபடி எடுத்து வச்சிருக்காங்களே.. விஜய்சேதுபதியின் டிஎஸ்பி விமர்சனம்!

  சுழல் வெப்சீரிஸ் போல

  சுழல் வெப்சீரிஸ் போல

  புஷ்கர் காயத்ரி கதை எழுதி தயாரித்த சுழல் வெப்சீரிஸில் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, கதிர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடைசி வரை அந்த காமுகன் யார், கொலையாளி யார் என்கிற கோணத்திலேயே அந்த கதை சுழன்று அடிக்கும் அதே போலத்தான் இந்த வதந்தி வெப்சீரிஸும் கடைசி வரை வெலோனியை கொன்றது யார் என்கிற ட்விஸ்ட் உடன் த்ரில்லர் விரும்பிகளை ஈர்த்துள்ளது.

  என்ன கதை

  என்ன கதை

  சினிமா ஷூட்டிங் வந்த இடத்தில் பிரபல நடிகை ஒருவர் இறந்து விட்டார் என வதந்தி தீயாக பரவுகிறது. இறந்தது சினிமா நடிகை இல்லை வெலோனி என்கிற இளம் பெண் என தெரிய வர வெலோனி யார்? வெலோனி எப்படிப்பட்டவள்? நல்லவளா? கெட்டவளா? பல ஆண்களுடன் அவளுக்கு இருக்கும் பழக்கம் என்ன? அவரது கொலை வழக்கை விசாரிக்க வரும் எஸ்.ஜே. சூர்யா இத்தனை கேள்விகளால் எப்படி குழம்பித் தவிக்கிறாரோ அதே போல வெப்சீரிஸ் பார்க்கும் ரசிகர்களையும் பித்துப் பிடிக்க வைத்து கடைசியாக குற்றவாளி ரிவீல் செய்யும் கதை தான் இந்த வதந்தி.

  எதார்த்தமான எஸ்ஜே சூர்யா

  எதார்த்தமான எஸ்ஜே சூர்யா

  பொதுவாகவே ஒரு ஸ்பூன் எக்ஸ்ட்ரா நடிப்பை வெளிப்படுத்தும் எஸ்ஜே சூர்யாவை இந்த வெப்சீரிஸில் கம்ப்ளீட்டாக அடக்கி வாசிக்க வைத்து வெறும் பார்வையாலே பல இடங்களில் நடிக்க வைத்திருப்பது எல்லாம் தரமான செய்கை. மனைவியுடன் எரிந்து விழும் காட்சிகளில் மட்டும் இயல்பான நடிப்பு வெளிப்படுகிறது. வட்டார வழக்கை வெப்சீரிஸ் முழுவதும் கையாண்டுள்ள விதமும் ஒவ்வொரு முடிச்சுகளை அவிழ்த்து விசாரிக்கும் விதத்திலும் எஸ்ஜே சூர்யா எதார்த்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

  வெலோனியை கொன்றது யார்?

  வெலோனியை கொன்றது யார்?

  லைலாவின் மகளாக வெலோனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை சஞ்சனா. இளமை துள்ளலாக துரு துருவென வெப்சீரிஸ் முழுவதும் அவர் நடித்துள்ள நடிப்பும் அவரை யார் கொலை செய்திருப்பார் என கண்டுபிடிக்க எஸ்ஜே சூர்யா போல நாமும் துப்பறியும் வேலையை வெப்சீரிஸ் உடன் இணைந்து செய்வது எல்லாம் நிச்சயம் இயக்குநருக்கு கிடைக்க வேண்டிய பாராட்டுக்கள்.

  பிளஸ்

  பிளஸ்

  எஸ்ஜே சூர்யா, நாசர், லைலா, விவேக் பிரசன்னா, சஞ்சனா, ஸ்முருதி வெங்கட் மற்றும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் விதம் இந்த வெப்சீரிஸுக்கு மிகப்பெரிய பிளஸ். கன்னியாகுமரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமி காட்சிப்படுத்திய விதமும் எங்கே சத்தம் தேவையோ அங்கே பிஜிஎம் போட்டு த்ரில்லான இடங்களில் சைலன்ட்டை பயன்படுத்தி சைமன் கிங் இசையில் திடுக்கிட வைத்துள்ளார்.

  மைனஸ்

  மைனஸ்

  சுழல் வெப்சீரிஸ் அளவுக்கு வதந்தி வெப்சீரிஸில் ஒரு பரபரப்பு இல்லை. 6 எபிசோடுகளாக முடித்திருக்க வேண்டிய இந்த வெப்சீரிஸை அமேசான் பிரைமுக்காக 8 எபிசோடுகளாக இழுத்தடித்ததை தவிர்த்து இருக்கலாம். யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிக்கும் ஆர்வம் கடைசி வரைக்கும் வெப்சீரிஸை பார்க்க வைத்து விடும் என நினைக்காமல் தேவையற்ற சுத்தல்களை வெட்டி வீசி இருந்தால் இந்த வதந்தி மேலும் பரவி இருக்கும்.

  English summary
  Vadhandhi Web Series Review in Tamil (வதந்தி வெப்சீரிஸ் விமர்சனம்): SJ Suryah, Nasser, Sanjana, Laila and Vivek Prasanna done their roles perfectly in this Crime Investigation thriller story.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X