For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Moon Knight Review: மார்வெல் உலகில் ஒரு அந்நியன்.. மூன் நைட் முதல் எபிசோடு எப்படி இருக்கு?

  |

  Rating:
  4.0/5

  நடிகர்கள்: ஆஸ்கர் ஐசாக், எதன் ஹாக்

  இயக்கம்: முகமது தயாப்

  ஓடிடி: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

  ரேட்டிங்: 4/5.

  சென்னை: மார்வெல் உலகில் ஒரு அந்நியன் சூப்பர் ஹீரோ கதையாக உருவாகி உள்ள மூன் நைட் வெப்தொடரின் முதல் சீசன் முதல் எபிசோடு மார்ச் 30ம் தேதி வெளியானது.

  தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த வெப்தொடர் வெளியாகி உள்ளது.

  இயக்குநர் முகமது தயாப் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த வெப்தொடரில் ஹாலிவுட் நடிகர் ஆஸ்கர் ஐசாக் மூன் நைட் கிட்டத்தட்ட பேட்மேன் போன்றதொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் எபிசோடு எப்படி இருக்கு என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்.

  ஓடிடி.,யில் கலக்க வரும் எதற்கும் துணிந்தவன்...எப்போ தெரியுமா? ஓடிடி.,யில் கலக்க வரும் எதற்கும் துணிந்தவன்...எப்போ தெரியுமா?

  மூன் நைட்

  மூன் நைட்

  வாண்டா விஷன், லோகி வரிசையில் மற்றுமொரு மார்வெல் வெப்தொடர் தான் இந்த மூன் நைட். மார்ச் 30ம் தேதி டிஸ்னி பிளஸ் ஓடிடி தளத்தில் இந்த வெப்தொடரின் முதல் எபிசோடு வெளியாகி உலகளவில் டிரெண்டாகி வருகிறது. மூன் நைட் எனும் காமிக்ஸை மையமாக கொண்டு தான் இந்த வெப்தொடர் உருவாகி உள்ளது. இதில், ஹீரோவுக்கு dissociative identity disorder (DID) எனும் நோய் இருப்பதாக கூறுகின்றனர்.

  அந்நியன் மாதிரி

  அந்நியன் மாதிரி

  நமக்கு புரிவது போல சொல்லணும்னா அந்நியன் படம் போல ஹீரோ ஸ்டீவனுக்குள் மார்க் மற்றும் மூன் நைட் என இரு கதாபாத்திரங்கள் ஒளிந்துள்ளன. ஸ்டீவ் (ஆஸ்கர் ஐசாக்) லண்டன் மியூசியத்தில் உள்ள கிஃப்ட் ஷாப்பில் சாதாரண ஊழியராக வேலை பார்த்து தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியதில் இருந்து மூன் நைட்டாக மாறுவது வரை முதல் எபிசோடு அதகளம் செய்கிறது. அதிலும், அந்த கண்ணாடி சீன் வேற லெவல் ஹைலைட்.

  கனவா? நிஜமா?

  கனவா? நிஜமா?

  பிரமிட் உள்ளிட்டவற்றில் ஆர்வம் உள்ள ஸ்டீவனை டூர் கைடு கிடையாது நீ, சொன்ன வேலையை செய் என அவருடைய லேடி பாஸ் டோனா சத்தம் போடுவது முதல் கூட வேலை பார்க்கும் நபர் ஒருவர் திடீரென ஹீரோவுடன் பேசி நாளைக்கு டேட்டிங் போலாமா என்பது போல கேட்க, இவரும் ஓகே சொல்லி விட்டு தனது வீட்டுக்கு சென்று தூங்கி விடக் கூடாது. தூங்கி விட்டால் வேறு எங்கோ இருப்பது போல இருக்கிறதே என தூக்கம் வராமல் இருக்க என்ன எல்லாம் செய்ய முடியுமோ செய்கிறார். ஆனால், கடைசியாக தூங்கி விடுகிறார்.

  தராசு டாட்டூவுடன் வில்லன்

  தராசு டாட்டூவுடன் வில்லன்

  எழுந்து பார்க்கும் போது வாயெல்லாம் அடிவாங்கி வேறு ஒரு இடத்தில் கிடக்கிறார் ஹீரோ. அவருக்குள் ஒரு குரல் இந்த உடலை மார்க்கிற்கு கொடுத்து விடு என சொல்கிறது. திரும்பி பார்த்தால் ஒருவர் கை காட்ட, இவரும் கை காட்டுகிறார். இன்னொருவர் உடனே இவரை நோக்கி துப்பாக்கியால் சுட, அந்த குரல் ஓட சொன்னதும் ஓடுகிறார் ஹீரோ. அப்போது வேறு ஒரு இடத்தில் கடவுள் போல மதிக்கப்படும் நபராக தராசு டாட்டூவுடன் வில்லன் அர்த்தர் ஆரோ கதாபாத்திரம் என்ட்ரி கொடுக்கிறது.

  துரத்தும் வில்லன்

  துரத்தும் வில்லன்

  வில்லன் யார் கையை பிடித்து பார்த்தாலும், அவருடைய கையில் உள்ள அந்த தராசு டாட்டு அவர் நல்லவரா கெட்டவரா என்பதை அசைந்து கொடுத்து காட்டுகிறது. (மார்வெல் படம் அல்லவா) பச்சை நிறத்திலேயே டாட்டூ இருந்தால் அவர் நல்லவர், சிகப்பு நிறத்துக்கு டாட்டூ மாறினால் அவர் பாவம் செய்தவர். வயதான ஒரு பாட்டியின் உயிரை அப்படி வில்லன் எடுத்துக் கொள்ள ஹீரோ பற்றி துப்பாக்கியுடன் துரத்தும் காவலர்கள் வில்லனிடம் சொன்னதும், கையில் இருக்கும் ஒரு புராதன பொருளை வில்லனிடம் கொடுக்காமல் ஹீரோவின் கையே தானாக செயல்பட அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார். வில்லன் ஆட்கள் அவரை துரத்துகின்றனர். கடைசியில் கண் விழித்து எழுந்தால் தனது அறையில் தூங்கியபடி முழிக்கும் ஹீரோ இது மொத்தம் கனவு என நினைக்கிறார்.

  டேட்டிங் போச்சே

  டேட்டிங் போச்சே

  ஹீரோ வீட்டில் வளர்க்கும் கோல்ட் ஃபிஷ்ஷுக்கு ஒரு துடுப்பு இருக்கு என ஆரம்பத்தில் சொல்ல, தூங்கி எழுந்தபின் அது எப்படி இரண்டு துடுப்பு மீனாக மாறியது என மீன் கடையில் கேட்கப் போய் மொக்கை வாங்குகிறார். பின்னர், டேட்டிங்கிற்கு அழைத்த பெண்ணுக்கு கால் பண்ண நான் இரண்டு நாட்களுக்கு முன்பே போயிட்டு வந்துட்டேன் இன்னைக்கு சன் டே இனிமே போன் பண்ணாத என திட்ட கடந்த 2 நாட்களாக என்ன ஆச்சு என்றே புரியாமல் ஹீரோ தவிக்கிறார்.

  மூன் நைட்டாக மாறுகிறார்

  மூன் நைட்டாக மாறுகிறார்

  அவர் வேலை செய்யும் இடத்திலும் வில்லன் அர்த்தர் துரத்திக் கொண்டு வர பாத்ரூமில் ஓடிப் போய் ஒளிந்து கொள்ளும் அவரை மிருகம் ஒன்று துரத்தி வருகிறது. அப்போது கண்ணாடி வழியே மார்க் மற்றும் மூன் நைட் என இருவரும் மாறி மாறி பேச, கடைசியாக மூன் நைட்டாக ஹீரோ மாறிவிடுகிறார். பிஜிஎம், தமிழ் டப்பிங் என அனைத்துமே பக்காவாக இருக்கிறது. வார வாரம் ஒரு எபிசோடு என மொத்தம் 6 எபிசோடு முதல் சீசனில் உள்ளது. அடுத்த வார எபிசோடுக்காக மார்வெல் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து காத்திருக்கின்றனர்.

  English summary
  "Moon Knight," Marvel's latest web series, was released on March 30th on Disney Plus Hotstar OTT platform. Oscar Isaac plays the lead role in this powerful super hero web series.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X