twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Oh My Ghost Review: டபுள் மீனிங் எல்லாம் இல்லை.. எல்லாம் ஸ்ட்ரெய்ட் தான்.. ஓ மை கோஸ்ட் விமர்சனம்!

    |

    நடிகர்கள்: சன்னி லியோன், சதிஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு
    இசை: ஜாவித் ரியாஸ்
    இயக்கம்: அர். யுவன்

    Rating:
    2.0/5

    சென்னை: பாலிவுட் கவர்ச்சி கன்னி சன்னி லியோன் ஏற்கனவே ஜெய்யின் வடகறி படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டிருந்தாலும், ஹீரோயினாக அவர் அறிமுகமாகி உள்ள முதல் படம் இதுதான். வீரமாதேவி என ஒரு படம் உருவாகி வந்த நிலையில், அந்த படம் என்ன ஆனதென்றே தெரியவில்லை. அதன் பின்னர் ஆர். யுவன் இயக்கத்தில் சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் திரைப்படம் ஒரு வழியாக இந்த ஆண்டு இறுதியில் வெளியாகி விட்டது.

    இந்த ஆண்டு இறுதியில் நயன்தாராவுக்கும் சன்னி லியோனுக்கும் இப்படியொரு பேய் பட போட்டி வரும் என யாருமே நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். கனெக்ட் படத்தை ட்ரோல் பண்ணவங்க எல்லாம் இந்த படத்தை பார்த்தால் அவ்வளவு தான் என்கிற ரகத்தில் படம் உள்ளது.

    தம்பி அந்தப் பக்கம் போயிடாத என எச்சரித்த பிறகும் படத்தை பார்த்த பலரும் சன்னி லியோனுக்காக மட்டும் பார்க்கலாம் என சொல்லி வரும் ஓ மை கோஸ்ட் படம் எப்படி இருக்குன்னு விரிவாக பார்ப்போம் வாருங்கள்..

     ரஞ்சிதமே கிஸ் கொடுத்த சன்னி லியோன்... மேடையிலேயே ஆட்டம் போட்ட ஜிபி முத்து... வாழ்றான்யா மனுஷன்! ரஞ்சிதமே கிஸ் கொடுத்த சன்னி லியோன்... மேடையிலேயே ஆட்டம் போட்ட ஜிபி முத்து... வாழ்றான்யா மனுஷன்!

    ஓ மை கோஸ்ட் கதை

    ஓ மை கோஸ்ட் கதை

    அனகொண்டபுரம் (பெயரை கவனித்தீர்களா?) ஊரில் இருட்டினால் ஆண்கள் வெளியே செல்லவே பயப்படுகின்றனர். அப்படி மீறி செல்பவர்களை பேய் அடித்து விடும் என்கிற நம்பிக்கை இருக்கு. இது ஒரு பக்கம் இருக்க பிட்டு படம் எடுக்க கதைகளை வைத்துக் கொண்டு தயாரிப்பாளரை தேடி அலையும் ஹீரோவாக சதீஷ் வருகிறார். அவருடைய நண்பராக ரமேஷ் திலக் ஒட்டிக் கொள்கிறார். சதீஷின் காதலியான தர்ஷா குப்தா கனவில் வருபவர்கள் எல்லாம் இறந்து விடும் நிலையில், சதீஷ் மற்றும் ரமேஷ் திலக்கும் அவரது கனவில் வருகின்றனர்.

    மாயசேனா

    மாயசேனா

    தனது காதலை காப்பாற்ற நினைத்து அவரது ரூமுக்கு செல்லும் தர்ஷா குப்தா மீது பேய் ஏறிக் கொண்டு இவர்களை அனகொண்டபுரத்துக்கு வர சொல்கிறது. அங்கே சாமியாராக வரும் மொட்டை ராஜேந்தர் மாயசேனாவை கட்டுப்படுத்தும் சக்தி சதிஷூக்குத்தான் இருக்கிறது என ஃபிளாஷ்பேக் சொல்ல சன்னி லியோனின் பிளாஷ்பேக் போர்ஷன் வருகிறது.

    சன்னி லியோன் டிரெஸ்ஸை பார்க்கவே

    சன்னி லியோன் டிரெஸ்ஸை பார்க்கவே

    இது பேய் படமா இல்லை கில்மா படமா என்கிற டவுட்டே வேண்டாம். எந்தவொரு காட்சியிலும் பேயாக வரும் சன்னி லியோனை பார்த்து யாருமே கண்களை மூடுவதில்லை. அவர் எந்தளவுக்கு ஹாட்டா டிரெஸ் போட்டிருக்கார் என்பதை பார்க்க பைனோகுலர் எல்லாம் தியேட்டருக்கு எடுத்து வந்து ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

    என்ன பிளஸ்

    என்ன பிளஸ்

    சன்னி லியோனை தவிர படத்தில் வேறு எந்த பிளஸ்ஸும் பெரிதாக இல்லை. தர்ஷா குப்தாவுக்கும் சன்னி லியோனுக்கும் என்ன சம்மந்தம், அவருக்கு ஏன் அப்படி கனவுகள் வந்தது, இந்த படத்தின் மூலம் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என ஏகப்பட்ட கேள்விகள் நீள்கிறது. ஜிபி முத்து ஒரே ஒரு சீனில் வந்து 'செத்த பயலே நார பயலே'ன்னு சொல்லிட்டு போகிறார். அவரை பார்த்ததும் தான் கைதட்டல்கள் பறக்கின்றன.

    ஏகப்பட்ட மைனஸ்

    ஏகப்பட்ட மைனஸ்

    ஹீரோவாக மாறிய சதீஷ் நாய் சேகர் படத்தை போலவே இந்த படத்திலும் நடிக்க நிறைய மெனக்கெடுகிறார். பாவம் நடிப்பு தான் அவரிடம் வந்து ஒட்டிக் கொள்ள மறுக்கிறது. சிஜி என்கிற பெயரிலும், மாயசேனா என பீரியட் போர்ஷனை பாகுபலிக்கு போட்டியாக எடுக்கிறேன் என்கிற பெயரில் இயக்குநர் மற்றும் விஎஃப்க்ஸ் டீம் எல்லாம் பண்ண வேடிக்கையை எல்லாம் பார்த்தால் ஆளவிடுங்கடா சாமி என்றே சொல்லத் தூண்டுகிறது.

    English summary
    Sunny Leone Oh My Ghost Review in Tamil (சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் விமர்சனம்): Sathish, Sunny Leone, Dharsha Gupta, Yogi Babu and GP Muthu starrer horror comedy movie not upto the mark.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X