For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Super Deluxe Review: குமாரராஜாவின் விசித்திரமான படைப்பு.. வாழ்வின் ரகசியம் சொல்லும் சூப்பர் டீலக்ஸ்

|
Super Deluxe Movie Audience Review: விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படம் எப்படி இருக்கு?- வீடியோ
Rating:
4.0/5
Star Cast: விஜய் சேதுபதி, பாஹத் பாஸில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின்
Director: தியாகராஜன் குமாரராஜா

சென்னை: நான்கு விதமான கதைகளின் மூலம் 'வாழ்வின் ரகசியம் இது தான்' என பாடம் நடத்துகிறது சூப்பர் டீலக்ஸ் திரைப்படம்.

தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர் படமாக கொண்டாடப்படும் 'ஆரண்ய காண்டம்' வெளிவந்து 8 வருடங்கள் ஆகிவிட்டன. தனது 2வது படத்தின் மூலம் மீண்டும் ஒரு புதிய முயற்சியை நிகழ்த்தி காட்டியிருக்கிறார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.

Super deluxe review: Its an multi layered eccentric film

'ஆரண்ய காண்டம்' படத்தின் தொடர்ச்சியாக சூப்பர் டீலக்ஸ் படத்தை எடுத்துக்கொள்ளலாம். அதே போன்றதொரு திரைக்கதையின் மூலம் மீண்டும் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர். சிதிலமடைந்த பழைய வீடுகள், பக்கத்து வீட்டு அறையில் இருந்து எட்டிப்பார்க்கும் கேமரா, நறுக் வசனங்கள், கிறீச் சத்தங்கள், பேக்ரவுண்டில் பழைய பாடல்கள், ரசிக்க வைக்கும் செக்ஸ் காட்சிகள், தத்துவார்த்தமான அனுமுறை என 'சூப்பர் டீலக்ஸ்' ஒரு அக்மார்க் தியாகராஜன் குமாரராஜா படம்.

பல அடுக்கு திரைக்கதையின் மூலம் பலவிதமான உணர்ச்சிகளை கடத்துகிறது படம். மொத்தம் நான்கு கதைகள். அதன் கதாபாத்திரங்களை கொண்டு, செக்ஸ், பக்தி, மனித மூளையில் ஒளிந்து கிடக்கும் இருள் நிறைந்த கருப்பு பக்கம், நியாயம், நடைமுறை, மனிதம் என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகிறது படம்.

Super deluxe review: Its an multi layered eccentric film

சமந்தா - பகத் பாசில் தம்பதி விசித்திரமான ஒரு பிரச்சினையில் சிக்குகிறார்கள். அதனை தொடர்ந்து நிகழும் சம்பவங்களின் தொகுப்பு ஒரு கதையாக பயணிக்கிறது. திருநங்கை ஷில்பாவுக்கும் (விஜய் சேதுபதி) - குட்டிப்பையன் ராசுக்குட்டிக்கும் இடையே நடக்கும் உரையாடலும், சம்பவங்களும் மற்றொரு கதையாக தொடர்கிறது.

பிட்டு படம் பார்க்க நினைத்து, பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் நான்கு டீனேஜ் பசங்க செய்யும் சேட்டைகள் மற்றொரு பக்கம். கடவுள் மீது அதீக பக்தி கொண்ட மஷ்கினும், வாழ்க்கையை யதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் அவரது மனைவி ரம்யா கிருஷ்ணனும் வெவ்வேறு திசையில் நடக்கிறார்கள். மகன் மூலம் இவர்களுக்கும் ஒரு பிரச்சினை வருகிறது.

இதற்கிடையே, காமக்கொடூரனான போலீஸ் அதிகாரி பெர்லினின் ( பகவதி பெருமாள்) இம்சை மற்றொரு பக்கம் என கதை நகர்கிறது. இந்த நான்கு கதைகளும் ஒரு புள்ளியில் எப்படி இணைகிறது என்பது தான் படம்.

Super deluxe review: Its an multi layered eccentric film

இந்த படத்தில் ஹீரோ - வில்லன் என எவரும் இல்லை. சூழ்நிலைகளும், அதனை கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் விதமும் தான் படத்தின் ஹைலைட். 'செருப்ப மாத்தி போடுற மாதிரி, கடவுள் என் உடம்ப மாத்தி போட்டுட்டார்'.... 'நீ ஏன் இப்டி இருக்க' என கேட்கும் சிறுவன் ராசுகுட்டிக்கு ஷில்பா சொல்லும் பதில் இது. இதுபோல் நிறைய சுவாரஸ்யமான வசனங்களும், காட்சிகளும் படத்தில் ஏராளமாக உண்டு.

விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், பகவதி பெருமாள், மஷ்கின் ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, ராசுகுட்டு அஷ்வந்த், ஐந்து சின்ன பசங்க உள்பட படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் வருகின்றன. இதில் அல்டிமேட்டாக ஸ்கோர் செய்கிறார் விஜய் சேதுபதி. செயற்கை தன்மையே இல்லாத தனது யதார்த்தமான நடிப்பால், ஷிப்லா கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஒரு நடிகனுக்கு எந்த இமேஜும் இருக்கக் கூடாது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு எந்த விதத்திலும் சளைக்காமல் நடித்திருக்கிறார் சமந்தா. காது கூசும் வார்த்தைகள் கூட, அவர் பேச கேட்கும் போது தவறாக தெரியவில்லை. முதிர்ச்சியான நடிப்பை, மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் சமந்தா.

Super deluxe review: Its an multi layered eccentric film

பகத் பாசிலின் நடிப்பு திறமை எல்லோரும் அறிந்தது தான். பிடிக்காத மனைவியை பற்றி காருக்குள் உட்கார்ந்து புலம்பும் அந்த ஒரு காட்சியே போதும். சின்ன சின்ன ரியாக்ஷன்களில் கூட அப்லாஸ் அள்ளுகிறார்.

பகவதி பெருமாளுக்கும் இந்த படம் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி வந்திருக்கிது. இனி வில்லனாகவும் கலக்குவார். இவர்களை தாண்டி, படத்தில் அதிகமாக ஸ்கோர் செய்வது காஜி, முட்ட பப்ஸ் மற்றும் துயவன் டீம் தான். இரண்டாம் பாதியில் இவர்கள் செய்யும் சேட்டைகள் தான் சீரியசாக செல்லும் படத்தை கலகலப்பாக்குகிறது. காஜி அண்ட் பாய்ஸ்க்கு பிரைட் ஃப்யூட்சர் காத்திருக்கு.

ராசுகுட்டி அஷ்வந்த், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் என ஒவ்வொருமே தனித்தனியாக ஸ்கோர் செய்து, மொத்த டீமின் எண்ணிக்கையை உயர்த்துகிறார்கள். குறிப்பாக அற்புதத்துடன் வரும் ராமசாமி கேரக்டருக்கு தனி பாராட்டுகள்.

Super deluxe review: Its an multi layered eccentric film

'ஐயம் எ டிஸ்கோ டான்சர்', 'மாசி மாசம் ஆளான பொண்ணு', உள்ளிட்ட பழைய பாடல்கள் தான் ரீரெக்கார்டிங்காக ஒலிக்கிறது. இதன் மூலமே நிறைய விஷயங்களை நக்கல் செய்திருக்கிறார் இயக்குனர். யுவனின் பின்னணி இசை இதற்கு நிறையவே உதவியிருக்கிறது. கட்டில் ஆடும் ஓசை முதற்கொண்டு சின்ன சின்ன விஷயங்களையும் மிக நுட்பமாக சேர்த்து, சிறப்பாக ஒலி வடிவமைத்திருக்கிறார்கள்.

நிரவ்ஷா, வினோத்தின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் ஒரு கதை சொல்லுகிறது. ஒவ்வொரு ப்ரேமும் ஒளி ஓவியமாக மின்னுகிறது. பல அடக்கு திரைக்கதையை, குழப்பமில்லாமல் தெளிவாக கத்தரித்து தந்திருக்கிறார் எடிட்டர் சத்யராஜ் நடராஜன்.

Super deluxe review: Its an multi layered eccentric film

ஆரண்ய காண்டத்துடன் சூப்பர் டீலக்ஸை நிறைய இடங்களில் தொடர்ப்பு படுத்திக்கொள்ளலாம். அதில் வரும் சப்பை - சுப்பு கதாபாத்திரங்களுடன் சமந்தா - பகத் பாசிலையும், கொடுக்காபுள்ளி - காளையன் கதாபாத்திரங்களுடன் ராசுகுட்டி - ஷில்பா கதாபாத்திரங்களையும் ஒப்பிட்டு பார்த்தால், இரண்டுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இருக்காது. கிட்டத்தட்ட ஆரண்ய காண்டம் படத்தின் இரண்டாம் பாகம் போலவே இருக்கிறது. ஆனால் அதில் தர்மத்தை பற்றி பேசிய இயக்குனர், இதில் காமத்தை பற்றி பேசியிருக்கிறார்.

பல்வேறு விஷயங்கள் குறித்து படம் கேள்வி எழுப்புகிறது. அற்புதமும் ஷில்பாவும் சந்திக்கும் அந்த காட்சி, கடவுளின் இருப்பை கேள்விக் கேட்கிறுது. ஆனால் சில காட்சிகள் மிகைப்படுத்தப்படுவதால், சினிமாத்தனம் எட்டிப்பார்க்கிறது.

Super deluxe review: Its an multi layered eccentric film

முதல் பாதி படத்தில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். அதேபோல், தவறை கூட பாசிடிவாக எடுத்துக்கொள்ள சொல்கிறது படம். ஆனா, ஒரு பையன் குண்டா இருந்தா உடனே அவன காமெடி பீஸ் ஆக்கிட்றது என்ன மாதிரியான மனநிலை இயக்குனரே. அதேபோல, ஏலியன் வந்து வாழ்க்கை பாடம் எடுக்குறதெல்லாம் ரொம்ப டூச் ப்ரோ. கடைசியில வாழ்க்கையின் ரகசியம் காமத்தில் தான் இருக்கிறது என்று சொல்லிட்டீங்களே பாஸ். தப்பில்ல தப்பில்ல...

படத்தில் கதை, லாஜிக் பிரச்சினை எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் திரைக்கதையும், மேக்கிங்கும் தான் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.

Super deluxe review: Its an multi layered eccentric film

எப்படி இருந்தாலும், இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் மற்றொரு விசித்திரமான படைப்பு இந்த 'சூப்பர் டீலக்ஸ்'.

English summary
Super Deluxe is phylosphical drama thriller film written and directed by Thiagarajan Kumararaja of Aaranya Kaandam fame. Directors Nalan Kumarasamy, Neelan and Mysskin are reportedly co-writers. It features Vijay Sethupathi, Fahadh Faasil, Samantha, and Ramya Krishnan as leads in separate segments while Mysskin, Gayathrie, Naveen , Vijay Ram , Abdul Jabbar , and Bagavathi Perumal are also in this movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more