Just In
- 13 min ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 25 min ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
- 40 min ago
பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்…. அருண்பாண்டியன் சிறப்பு பேட்டி
- 50 min ago
மகளிர் தினத்தில் மனைவியுடன் ஜெயம் ரவி செய்த வேலையை பாருங்க...வைரலாகும் வீடியோ
Don't Miss!
- News
வேடசந்தூர் யாருக்கு? மல்லுக்கட்டும் காங்.- உதயசூரியன் சின்னம் வரைந்து பிரசாரத்தில் குதித்த திமுக
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Lifestyle
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- Education
ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு
நடிகர்கக்ள் : வைபவ், நந்திதா ஸ்வேதா , யோகி பாபு, பாண்டியராஜன், கலைராணி
இயக்கம் : யுவராஜ் சுப்பிரமணி
இசை : விஷால் சந்திரசேகர்
சென்னை : டாணாகாரன் என்றால் போலீஸ்காரன். டாணாகாரன் வாழ்ந்த ஊரில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறார் பாண்டியராஜன் அவரது மனைவி உமா பத்மநாபன். இவர்களது அன்பு மகன் தான் வைபவ்.இவர்கள் வசித்து வரும் ஊரில் பல காலமாக ஒரு பெரிய சிலை போலீஸ் உடையில் அங்கு உள்ளது. அது தான் டாணாக்காரன் சிலை .
போலீஸ் இல்லாத காலத்தில் கூட அவர்களை காப்பாற்றும் என்று நம்பி அச்சிலை நிறுவினார்கள் என்று சொல்லப்படுகிறது.சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் அந்த ஊருக்கு அச்சிலை தான் காவல் தெய்வம்.
வைபவ்வை அப்பா பாண்டியராஜன் சிறு வயது முதல் போலீஸ் உத்தியோகம் காட்டி வளர்க்கிறார் . வளர்ந்த பிறகு அவனை போலீஸ்காரனாக மாற்ற அப்பா பாண்டியராஜன் முயலுகிறார் அவர் போலீஸ் ஆனரா இல்லையா என்பதே மீதி கதை.
படத்தில் வைபவ் வீட்டில், பேய் பிடித்த ஒரு பெண்னை பார்த்து பயப்படுகிறார். அங்கு இருந்து தான் டைரக்டர் வைக்கிறார் ட்விஸ்ட். இதில் ஒரு வித்தியாசமான முயற்சி படத்தில் வைபவ்ற்கு பயந்தாலோ அதிர்ச்சியானாலோ சந்தோஷமானாலோ வைபவ்ற்கு பெண் குரல் வரும் அது மட்டுமே படத்தில் வித்தியாசமாக தெரிகிறது. இந்த ஒன் லைன் வைத்தி இன்னும் நிறைய விளையாடி இருக்கலாம் . ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டனர்.
நந்திதா அழகாக நடித்து இருக்கிறார்.வருவதும் போவதுமாக இருக்கிறார்.
அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் அவரால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்து உள்ளார் நந்திதா. யோகி பாபு பர்ஸ்ட் ஆப் முழுவதும் வருகிறார் ஆனால் அவர் செய்யும் காமெடி ஒர்க் அவுட் ஆனதா என்றால் அது கேள்வி குறி தான்.
படத்தில் கலைராணி ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்.
எதனால் என்றால் அந்த ஊரில் இருக்கும் டாணாகாரன் சிலையை அப்புறப்படுத்த நினைக்கின்றனர்
அதற்கு கலைராணி ஒரு டாணா காரன் சிலை பிளாஷ் பாக் சொல்லி உயிரை விடுகிறார். ஒட்டு மொத்த படத்தின் முதல் கட்டமான மொக்கை காட்சி இது தான்.
யோகி பாபுவிடம் வைபவ் கூறுகிறார் எனக்கு தான் சந்தோஷப்பட்டாலோ கவலை அடைந்தாலோ பெண் குரல் வருகிறது நான் எப்படி போலீஸ் ஆவேன் என கேட்கிறார். இதன் பின் கலைராணி ஊருக்காக , டாணாகாரன் சிலைக்காக செய்த தற்கொலை பார்த்து போலீஸ் ஆகலாம் என முடிவு செய்கிறார்.
பல ஒர்க் அவுட் செய்கிறார் வைபவ் . செம்ம காமெடி, நோ லாஜிக் ஒன்லி மாஜிக் . நாம் பொறுத்து கொள்ள வேண்டும் .
இதனை பார்க்கும் ஒரு உயர் அதிகாரி போதை மருந்து உபயோகப்படுத்தி வருகிறாயா என்று கேட்கிறார் . வைபவின் போலீஸ் கனவுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் வில்லனாக மாறுகிறார். இதை தாண்டி என்ன நடக்கும் என்று சுவாரஸ்யமே இல்லாமல் ஒரு இன்டெர்வல் பிளாக்.
இரண்டாவது பாதியில் வேலா ராமமூர்த்தி வரும் பாடல் "பேய் இல்லை" என்ற பாடல் மட்டுமே சற்று ஆறுதல் அளிக்கிறது. படத்தில் பலருக்கு பேசிய டப்பிங் சொதப்பல்.நான் சின்கான நிறைய தேவை இல்லாத காட்சிகள். படத்திற்கு பெரிய மைனஸ்.
குரல் இப்படி அடிக்கடி மாறுபட்டு இருந்தால் போலீஸ் ஆக முடியுமா என்று கேள்வி கேட்கும் போது முடியும் என்று கூறுகின்றனர். வைபவ்வை அழிக்க நினைக்கும் போலீஸ் அதிகாரி.அவரை அழிக்க நினைக்கும் வைபவ். கடைசியில் அவரை அளித்தாரா இல்லையா என்பது தான் படத்தின் மீதி பாதி.
படத்தில் ஒளிப்பதிவு சுமாராகவே இருந்தது , பாடல்கள் மட்டும் சற்று விதிவிலக்காக இருந்தது இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர்இசை அமைத்துள்ளார். ஒரு வித்தியாசமான கதையை எடுத்த படத்தின் இயக்குனர் யுவராஜ்க்கு . திரைக்கதை சரியாக அமைக்க தெரியாமல் போனது தான் வேதனை.
நடிப்பு என்று வந்து விட்டால் , கொடுத்த வேலையை மெருகு ஏற்றி பட்டய கிளப்ப வேண்டாமா ? வைபவ் ஏனோ தானோ என்று ஒவ்வொரு காட்சியிலும் வந்து நின்று , நாலு நாள் சாப்பிடாத மாதிரியே நடிக்கிறார், நடக்கிறார். வெரைட்டி காட்ட வேண்டிய வைபவ் பல இடங்களில் வாய் பேசாமல் நிற்பது படத்திற்கு ஒரு பெரிய ஓட்டை தான்.
இன்சூரன்ஸ் கம்பெனி , மோசடி கும்பல் என்று ஏதேதோ இரண்டாம் பாதியில் சொன்னாலும் எதுவும் மனதில் ஒட்ட வில்லை. கம்பீரம் இல்லாத டாணாக்காரன் அலுப்பு தட்டினாலும் நிறைய தேட்டர்களில் ரீலீஸ் ஆனதினால் வசூல் செய்வான் என்று நம்புவோம் .